வெய்யில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருள். மேற்சொன்ன அமைப்பிலான, அரச சின்னங்களில் ஒன்று. குடை - குடைவாய் இருப்பது.(வேருக்கு நீர் வார்த்தவர்கள், தமிழ்மணி, 30 அக். 2011)
umbrella, parasol, canopy anything hollow to scoop, hollow out; to drill, burrow, bore with a tool; to perforate; to make holes (as beetles in wood)
Tamil Wiktionary
குடை — பெயர்ச்சொல் (Noun)
வெய்யில்
மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருள்.
மேற்சொன்ன அமைப்பிலான
அரச சின்னங்களில் ஒன்று.
கவிகை
நீராடு
நீரில் மூழ்கு
துளை
பாறைகள் போன்றவற்றின் பகுதிகளை அகற்றி அவற்றில் இடம் ஏற்படுத்து.
நோ எற்படுத்து
[object Object]
Winslow (1862)
குடை (kuṭai) — noun
Umbrella, parasol; canopy –as one of the twenty-one symbols of royalty and victory, ஆதபத்திரம்
The knob of a sandal, பாதகுறட்டின்குமிழ்
A tree with very large thorns, the குடைவேல், Mimosa, L
The dance of Skanda, குமரனாடல்
குடைகவிக்க–குடைபிடிக்க — To bear an umbrella.
குடைக்காம்பு — See under காம்பு.
குடைக்காரன் — An umbrella-bearer.
குடைநிழற்ற — To afford shade–as an umbrella.
குடைக்காளான் — A kind of mushroom, ஓர்காளான்.
குடைக்கொள்ள — To rise in a body–as milk over the fire, as some cakes in frying, &c. 2. To rise or be puffed up–as a cloth, &c. 3. To capsize, to be upset–as a cart.
குடை (kuṭai) — infinitive
, கிறேன், ந்தேன், வேன், ய, v. a. To scoop; to work out a hollow; to bore a tube–as a turner, கடைய
To perforate or from holes–as beetles in wood, துளைக்க
To work in flowers, to gather honey, pollen, &c.– as insects, தாதுகுடைய
To wash, bathe in water; lit. to scoop out tank, குளிக்க
To produce a tingling pain or itching in the body, ears, &c.; to work or gnaw–as worms; to cause smarting, &c.–as caustic on a sore, நோவுபடுத்த
(fig.) To annoy, to cause great grief, heart-breaking, மனதைவருத்த
குடைந்தெடுக்க — To excavate, to scoop out.
குடைந்துபோட — To eat–as a canker. 2. To scoop out; to hollow; to excavate.
குடைந்துகொண்டிருக்க — To ache in the limbs or bones. 2. To gnaw, corrode; to eat by degrees.
குடைகரி — A concave piece of charcoal for melting very small piece gold or silver.
குடைவண்டு — Perforating beetles, ஓர்வண்டு.
காதுகுடைய–காதைக்குடைய — To clear the ears of wax. 2. To have itching or tingling pain in the ears.
Fabricius (1972)
குடை — noun
an umbrella
the knob or the head of a sandal, nail etc, குமிழ்
the name of a thorny tree, the mimosa
government, அரசாட்சி
anything hollow
the dance of Skanda
குடைக்காரன் — an umbrella bearer or seller.
குடைக் காளான் — a large kind of mush-room.
குடைக்கொள்ள–குடை கவிழ — to rise as milk over the fire; 2. to be puffed up; 3. to upset, capsize, .
குடை பிடிக்க — to bear an umbrella.
குடைப் பனை — talipot, a species of palm tree.
குடையாணி — a nail with a round head.
குடை — v. t.
v. t. scoop, hollow, scrape out the interior part of anything, excavate, கடை
pierce, make a hole through, துளை
cause acute pain, வதை
gnaw as a worm, அரி
annoy, cause grief, மனதை வருத்து
search through & through, துருவு; v. i. penetrate, உட்புகு
plunge or dive in water
pain, as the ear or the leg or the stomach, உளைவு நோவெடு
குடைச்சல் — acute pain.
குடைந்துகொண்டிருக்க — to ache in limbs or bones; to work out a hollow by degrees.
குடைந்தெடுக்க — to scoop out.
குடைவண்டு — the beetle, that bores through.
குடைவு — excavation, hollow cavity.
காது குடைய — to clean the ears; to feel itching pain in the ears.
Tamil Moli Akarathi (1928)
குடை (kuṭai)
இராஜசின்னத்தொன்று, உடை வேல், உட்டுளைப்பொருள், கவிகை, குடையென்னேவல், குமரனாடல், மிதியடி முதலியவற்றின் குமிழ்
A dance of Skanda. See குடைக்கூத்து. குடைவீழ்த் தவர்மு னாடிய குடையும் (சிலப். 6, 53)
Knob in sandals; பாதக்குறட் டின் குமிழ். (சூடா.)
Ola basket for eating and drinking from; நீர் முதலியனவுண்ணும் ஓலைப்பட்டை. வேணீருண்ட குடையோ ரன்னர் (கலித். 23)
(Astrol.) See கவிப்பு. (சினேந். 430.)
Umbrella thorn babul. See குடைவேல். (L.)
Anything hollow; உள்ளிடம் குடைவுபட்ட பொருள். (W.)
IndoWordNet
குடை — noun
மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் காத்துக் கொள்ளக் கையில் பிடித்துக் கொள்ளும் சாதனம்
குடை — noun
கீழ்நோக்கி கம்பிகளைக் கொண்டு மடக்கி விரிக்கக் கூடியதாகச் செய்த ஒரு அமைப்பின் மேல் கறுப்பு அலல்து வண்ண நிற துணி பொருத்தப்பட்டு மழையிலிருந்தும் வெயிலிருந்தும் காத்துக் கொள்ளக் கையில் பிடித்துச் செல்லும் சாதனம்.
குடை — noun
தேசியசின்னத்தின் வடிவில் ராஜாக்களின் மேல் பொருத்தப்படும் பெரியக் குடை
குடை — noun
தெய்வசிலைகளுக்கு மேல் பொருத்தப்படும் ஒரு உலோகத்தாலான குடை