சிறுமை

அளவால், உருவத்தால், பண்பால் குறுகியது, சிறியது என்னும் தன்மை. தலைகுனிவு (பெருமை கெட்டுவிட்டதால் ஏற்படும் தாழ்வு) துன்பம்

littleness, smallness paucity, fewness fineness, minuteness

Tamil Wiktionary

சிறுமை
  1. அளவால்
  2. உருவத்தால்
  3. பண்பால் குறுகியது
  4. சிறியது என்னும் தன்மை.
  5. தலைகுனிவு (பெருமை கெட்டுவிட்டதால் ஏற்படும் தாழ்வு)
  6. இன்மை
  7. எளிமை
  8. வறுமை
  9. துன்பம்
  10. கீழ்மை
  11. நோய்
  12. குறும்பு
  13. சிறு
  14. சிறிய என்பதன் தன்மை.

சிறு

Winslow (1862)

சிறுமை (ciṟumai) — noun
  1. Smallness, littleness, diminutiveness, அற்பம்
  2. Want, indigence, misery, wretchedness, poverty, adversity, தரித்திரம்
  3. Oppression, suffering, துன்பம்
  4. Disease, நோய்
  5. Inferiority, youth, minority, இளமை
  6. Scantiness, paucity, fewness, scarceness, குறைவு
  7. Failure, swerving from a virtuous, or religious course and consequent disgrace, இழிவு
  8. Insignificance, paltriness, frivolousness, ஏளிமை
  9. Fineness, minuteness, delicateness, slenderness, நொய்மை
  10. Low parentage, obscurity of birth, இழிபிறப்பு. (c.)
  • சிறுமைபட — To be poor, to be in adversity or in depressed circumstances. 2. To be a mean, degraded, beggarly object–oppo. to பெருமை. 3. To be oppressed.
  • சிறுமைபடுத்த — To impoverish; to debase, degrade.
  • சிறுமையர் — The low, the base, கீழ் மக்கள். (p.) சிறுமையிற்கல்விசிலையிலெழுத்து. Learning in youth is as durable as engraving in stone. ஏன்சிறுமைசொல்லிமுடியாது. My poverty is inexpressible. சிறுமையிலடிபட்டவன். One tossed about by poverty, &c. சிறுமையும் பெருமையுமவனவன் செய்வினையால் வரும். Moral elevation or degradation is consequent on one's moral or immoral conduct.

Fabricius (1972)

சிறுமை — noun
  1. smallness, littleness, அற்பம்
  2. poverty, misery, affliction, distress, தரித்திரம்
  3. meanness, baseness, இழிவு
  4. disgrace, இளப்பம்
  5. disease, வியாதி
  6. lust, lasciviousness, கழிகாமம்
  • சிறிய–சிறு — see separately.
  • சிறுமைப்பட — to suffer poverty, misery, to be in narrow circum- stances.
  • சிறுமைப் படுத்த — to impoverish, to degrade.
  • சிறுமையர் — the low, the base.

Tamil Moli Akarathi (1928)

சிறுமை (ciṟumai)
  1. அற்பம், இடைஞ்சல், இளமை, ஏளிமை, கீழ்மை, குறைவு, தரித்தி ரம், துன்பம், நோய, அவித்தை
சிறுமை (ciṟumai)
  1. அனு, அற்பம், ஆசு, இறை, கன்று, கிஞ்சம், கிலம், கை, சிறுவரை, சின்னம், தனு, தன்னம், திணை, தொகம், பையுள், முளரி, வஞ்சம், வறிது
சிறுமை (ciṟumai)
  1. அற்பம், தரித்திரம், துன்பம், நோய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சிறுமை (ciṟumai) — noun
  1. Smallness, littleness, insignificance; அற்பத்தனம். ஆண்டு கொண் டானென் சிறுமை கண்டும் (திருவாச. 5, 9). (பிங்.)
  2. Youth, minority; இளமை. Loc
  3. Fineness, minuteness; நுண்மை. (W.)
  4. Diminution, dwindling; குறைபாடு. சிறுமையுஞ் செல்லாத் துனியும் (குறள், 769)
  5. Want, poverty, indigence; வறுமை. சிந்தைநோய் கூருமென் சிறுமை நோக்கி (சிலப். 8, 85)
  6. Scarcity, famine; பஞ் சம். (சூடா.)
  7. Sorrow, suffering, misery; துன்பம். சிறுமை பலசெய்து சீரழிக்குஞ் சூதின் (குறள், 934)
  8. Offence; பிறர்மனத்தை வருத்து கை. சிறுமையுணீங்கிய வின்சொல் (குறள், 98)
  9. Disgrace; இளப்பம். தீர்ந்ததெஞ் சிறுமை (கம்பரா. திருவவ. 25)
  10. Fault; குற்றம். உள்ளந் திகைத்திந்தச் சிறுமை செய்தேன் (கம்பரா. ஊர்தே. 93)
  11. Disease; நோய். பையுளுஞ் சிறுமையும் நோயின் பொருள (தொல். சொல். 341)
  12. Lust, lasciviousness; கழிகாமம். சினமுஞ் சிறுமையு மில்லார் (குறள், 431)
  13. Baseness; கயமை. சிறு மை தீரா வெவ்வழி மாயை (கம்பரா. மாயாசனக. 1)

IndoWordNet

சிறுமை — noun
  1. மதிப்பிழந்து வெட்கப்பட வேண்டிய நிலை,கீழ்நிலை

கீழ்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சிறுமை
  1. இழிவு
  2. கயமைத்தனம், ஏழ் மை
  3. ' இளமை
  4. நுண்மை
  5. எளிமை
  6. குறைபாடு