தொகுதி

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு. உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. திணைக்கு (இராச்சியம்) கீழாகவும் வகுப்புக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு. மருத்துவம்: குறிப்பிட்ட தொழிற்பாடுடைய உடல் அங்கங்களின் சேர்க்கை

series, class (as of persons or things) assembly, collection, aggregation constituency, electoral district (an electoral division of voters)

Tamil Wiktionary

தொகுதி — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள மக்களுக்காக அமைந்துள்ள தேர்தல் நிருவாகப்பிரிவு.
  2. உயிரியல்:உயிரியல் வகைப்பாட்டில் தற்போதுள்ள 7 அடிப்படை அலகுகளில் ஒன்று. திணைக்கு (இராச்சியம்) கீழாகவும் வகுப்புக்கு மேலாகவும் அமைந்த வகைப்பாட்டலகு.
  3. மருத்துவம்: குறிப்பிட்ட தொழிற்பாடுடைய உடல் அங்கங்களின் சேர்க்கை

தொகு சட்டமன்றத்தொகுதி மக்களவைத்தொகுதி

Winslow (1862)

தொகுதி (tokuti) — noun
  1. A series or class of persons, things, &c., கூட்டம்
  2. A Society, association, மக்கட்குழு
  3. A flock, herd, swarm, &c., விலங்கின்குழு
  4. Genus, aggregate, பிண்டம்
  5. A quantity, collection, accumulation, திரட்சி. (p.)
  • தொகுதிப்பெயர் — A noun of multitude, குழுஉப்பெயர்.

Fabricius (1972)

தொகுதி — noun
  1. a series or class of persons or things, a society, flock, கூட்டம்
  2. collection, quantity, chapter or section, திரட்டு
  • தொகுதிப்பெயர் — a noun of multitude.
  • மரப்பெயர்த்தொகுதி — a chapter in a vocabulary wherein all the trees are specified.

Tamil Moli Akarathi (1928)

தொகுதி (tokuti)
  1. அளவு, கூட்டம், பகுதி
தொகுதி (tokuti)
  1. கூட்டம், திரட்சி, வினைமுற்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தொகுதி (tokuti) — noun
  1. < id
  2. Assembly, collection, aggregation; கூட்டம். வினையின் றொகுதி யொறுத்தெனை யாண்டுகொள் (திருவாச. 6, 6)
  3. Series, class, as of persons or things; வரிசை. வாம்பரித் தொகுதி (கந்தபு. வச்சிர. 56)
  4. Society; சபை. (பிங்.)
  5. Company, association; சேர்க்கை. வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும் (தொல். சொல். 33, தெய்வச்.)
  6. Flock, herd, swarm; மந்தை
  7. Genus; சாதி
  8. Volume, as of a journal; சம்புடம். இது பத்தாவது தொகுதி. Mod
  9. Section, as of a book; பகுதி. மக்கட் பெயர்த் தொகுதி (சூடா.)
  10. (Gram.) Elision; உருபு முதலியவற்றின் மறைவு. தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் (தொல். எழுத். 132, உரை)
  11. Aggregate, total; மொத்தவெண். உம்மை யெண்ணு மெனவெ னெண்ணுந், தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே (தொல். சொல். 289)

IndoWordNet

தொகுதி — noun
  1. தொகுதி
தொகுதி — noun
  1. சட்டம் சார்ந்த ஆவணங்களில் இருக்கக்கூடிய பகுதி

கலைப்பொருள்கள் பத்தி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தொகுதி
  1. கூட்டம்
  2. சேர்க்கை
  3. மந்தை
  4. பகுதி
  5. வரிசை
  6. சாதி
  7. உருபு முதலியவற்றின் மறைவு! மொத்த எண்
  8. சபை
  9. சிறு செப்பு