One of the seven of the first class of kings famed for liberality; and hero of the Naishd'ha, முதலேழுவள்ளிலிலொருவன்
A celebrated monkey, said to have built Adam's bridge for Rama and his monkeys to cross in going to Ceylon. W. p. 455. NALA
நளபாகம் — A dish well cooked, be- causes நளன் cooked well.
Fabricius (1972)
நளன் — noun
one of the seven of the first class of kings famed for liberality and hero of the Naishadha, முதலேழு வள்ளலுளொருவன்
a famous monkey in the service of Rama, said to have built Adam's bridge for Rama and his army to cross in going to Ceylon to fight with Ravana
நளபாகம் — an excellent dish.
Tamil Moli Akarathi (1928)
நளன் (naḷaṉ)
யதுவினதுமூன்றாம்புத்திரன், யயாதி பௌத்ரனாகிய அணுவின் இரண்டாம் புத்திரன், நிஷததேசத் தரசனாகிய வீரசேநன்மகன், இவன் மனைவி தமயந்தி, இவன் மகன் இந் திரசேநன், மகள் இந்திரசேனை, நளன் கொடையாலும் நடையாலும் கல்வியாலும் படையாலும் அழகா லும் ஆண்மையாலும் தன்னின் மிக் காரும் ஒப்பாருமில்லாத சக்ரவர்த்தி, இவன் கீர்த்தியை ஓரன்னப்பறவை, சொல்லக்கேட்ட தமயந்தி, தன்சுயம் வரத்துக்கு இந்திரன் முதலிய தே வர்கள் வந்திருக்கவும், அவர்களை வி ரும்பாது நளனைவிரும்பி அவனுக்கே மாலையிட்டுச் சிறிதுகாலம் காமனும் இரதியும்போல இன்புற்று வாழுங் காலத்தில், கலிபுருஷன் பொறாமை கொண்டு, புஷ்கரராஜனை யேவி, நீ நளநோடுசூதாடுவையாயின்,அவனை வென்று அவனது இராஜ்யத்தை நீ கவர்ந்து கொள்ளும்படி அநுகூலஞ் செய்வே னென்றான்
அவ்வாறே அவன் போய்த் தமையனாகிய நள னோடு சூதாடி இவனது இராஜ்யத் தைக் கவர்ந்துகொண்டு நளனையும் தமயந்தியையும் உடுத்த ஆடைமாத் திரத்தோடு காட்டுக்குப் போகும்படி செய்தான்.அங்கே மெல்லியலாகிய தமயந்தி பஞ்சணையையும் வஸ்த்ராப ரணங்களையும் களபகஸ்தூரிகளையும் பரங்கியரையும் மற்றைய போகங் களையுமறந்து, கல்லும் முள்ளும் வெ யிலும் வருத்தம் வருத்தத்தையும் நோக்காது, நாயகன்மீதுள்ள பேரன் பால், அவன் படுந் துன்பங்களுக் கி ரங்கி, அவனது சாயைபோல நீங்கா து சஞ்சரிக்கும்போது, ஒருநாளிரவு நளன் அவள் படுந்துன்பங்களைச் சகி யாதவனாகி நடுச்சாமத்தில் அவளைத் தனியே விடுத்தகன்றான்
அவள் தினயாளாய்த் தேடிப் புலம்பியலைந்து பல இடையூறுகளுக் கெல்லாந் தப் பித் தன் தந்தைவீடு சேர்ந்தபின்பு, நளன் தமயந்தியைத் தேடிக்கண்டு, அவளை அழைத்துச்சென்று புஷ்கர னைவென்று முன்போலத் தனது இ ராஜ்யத்தைப் பெற்று வாழ்ந்திருந் தான்
இவன் அறுவைச்சக்கிரவர்த் திகளிலும் முதலெழுவள்ளல்களிலும் ஒருவன்
இவன் சரித்திரத்தை விரித் துரைக்கும் நூல் நைஷதம், அது தமிழிலும் அப்பெயராலேயே விளங் கும், விசுவ கர்மாவுக்குப் பிறந்த ஒரு வாநரன், சேதுபந்தநம் செய்த வன் இவனே
ஒருதேவதச்சன்
நளன் (naḷaṉ)
முதலெழுவள்ளலிலொருவன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நளன் (naḷaṉ) — noun
< Nala
A famous emperor of Niṣadha, hero of the Naiṭatam; நிடததேசத்தரசனும் நைடதத்தின் கதாநாயகனுமான சக்கரவர்த்தி
A monkey belonging to Rāmā's hosts, said to have built the Adam's Bridge for Rāma and his army to cross over to Ceylon; இராமபிரானுடைய வானரப்படைத் தலைவருள் சேது பந்தனஞ் செய்த வீரன். நளன் வருகென்றனன் கவிக்கு நாயகன் (கம்பரா. சேதுப. 1)
Name of a liberal chief, one of seven mutalvaḷḷalkaḷ, q.v.; முதல்வள்ளல்களெழுவருள் ஒருவன்