நாகம்

Winslow (1862)

நாகம் (nākam) — noun
  1. The cobra-de-capella of hooded snake, நல்லபாம்பு
  2. A naga, or demigod, having a human face, with the tail of a serpent, and the expanded neck of the cobra. The race is said to inhabit a region called Patala or நாகலோகம், under the earth
  3. Lead, நயம்
  4. Black lead, காரியம்
  5. The black monkey, கருங்குரங்கு
  6. Monkey in general, குரங்கின்பொது
  7. An elephant, யானை
  8. A tree. See புன்னை
  9. Fragrant herb, as ஞாழல்
  10. A medicinal tree, ஓர் மருந்துமரம்
  11. An astrological karna, ஓர் கரணம். W. p. 458. NAGA
  12. (Sa Naka.) The visible heavens, ether, sky, atmosphere, ஆகாயம்
  13. Swerga or the Indian paradise, சுவர்க்கம்
  14. A kind of prepared arsenic, நாகபாஷாணம்
  15. A kind of precious stone, நாகப்பச்சை
  16. A mountain, மலை. See நாகு
  17. Fine cloth, நற்றூசு.–Note. Of the நாகம் snakes there are said to be of different castes as among men; being four chief, and one inferior caste; which differ in form, motion, food and habits
  • அஷ்டநாகம் — The eight famed serpents of the nether world employed at the eight cardinal points to support the earth are: 1. வாசுகி. 2. அனந்தன். 3. தக்ஷகன். 4. சங்கபாலன். 5. குளிகன். 6. பதுமன். 7. மகாபதுமன். 8. கார்க்கோடன். To these the thousand headed ஆதிசேக்ஷன், king of the race, supporting the earth at the centre is sometimes numbered as a ninth.
  • நாககள்ளி — A kind of recumbent shrub, ஓர்கள்ளி.
  • நாககன்னி–நாககன்னிகை — Female of the naga race, especially a wife of Arjuna.
  • நாகசாபம் — Curse of the cobra. inflicted on a person for killing it. See நாகப்பிரிதஷ்டை.
  • நாகசின்னம்–நாகசுரம்–நாகஸ்வரம் — . [com. நாகசரம்.] A kind of pipe or clarionet, one of the chief musical instruments, ஓர்துளைக்கருவி.
  • நாகதத்துவம் — One of the qualities of women ஸ்திரீகுணத்தொன்று.

Fabricius (1972)

நாகம் — noun
  1. a snake in general, especially the cobra capella, பாம்பு
  2. black- lead, காரீயம்
  3. the black monkey, monkey in general, குரங்கு
  4. sky, ஆகாயம்
  5. a mountain, மலை
  6. an elephant, யானை
  7. fine cloth, நற்சீலை
  8. an astrological karna, ஓர்கரணம்
  9. a flowering tree, Alexandrian laurel, புன்னை மரம்
  10. a kind of precious stone, நாகப்பச்சை
  11. Swerga, சுவர்க்கம்
  12. a fragrant herb, ஞாழல்
  13. a kind of prepared arsenic, நாகபாஷாணம்
  14. a Naga, an inhabitant of Naga Loka (a demigod with a human face and the tail of a serpent)
  • நாககன்னி–கன்னிகை — a female of the Naga race.
  • நாகசாபம் — curse of a cobra inflicted on a person for killing it.
  • நாகசின்னம்–நாகசுரம்–நாகஸ்வரம் — a kind of clarionet.
  • நாகசேதனன் — Indra.
  • நாகதாளி — a medicinal plant used as an antidote to snake bites.
  • நாகதிசை–மேற்கு — the west, .

Tamil Moli Akarathi (1928)

நாகம் (nākam)
  1. ஆகாயம், ஈயம், ஒலி, ஒருகர ணம், ஒருபாம்பு, ஒருமரத்துமரம், கந் தகம், கருங்குரங்கு, காரீயம், குரங்கு, ஞாழல், துத்தநாகம், தேவலோகம், நற் புடவை, நாகபாஷாணம், நாகப்பச் சை, பாம்பு, புன்னைமரம், மலை, யானை
நாகம் (nākam)
  1. 8- வாசுகி, அனந்தம், தக்கன், சங்கபாலன், குளிகன், பதுமன், மகா பதுமன், கார்க்கோடகன், இவற்றைக் கடவுட்பாம்பென்ப இவைமுறையே கிழக்குமுதலெண்டிக்கிற் பூமியைத் தாங்குவதன்றி நடுவேயுள்ள சேட னென்னு நாகமும் புமியைத்தாங்கா நிற்கும், இந்நவநாகமுங் காசிபப்பிர மாவுக்கு மவன்மனைவிகள் பதின்மூ வருட்கத்துருவைக்கும் பிறந்தன
நாகம் (nākam)
  1. பாதாளம்
நாகம் (nākam)
  1. ஆகாயம், ஒலி, கருங்குரங்கு, காரியம், குரங்கு, ஞாழல், தேவலோ கம், நற்சீலை, பாம்பு, புன்னைமரம், மலை, யானை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாகம்¹ (nākam) — noun
  1. < nāka
  2. Visible heavens, sky; ஆகாயம். (பிங்.) நீடுநாக மூடுமேக மோட (கம்பரா. கலன்காண். 37)
  3. Indra's paradise; சுவர்க்கம். (திவா.) எம்மை நாகமே லிருத்து மாற்றால் (கந்தபு. திருவிளை. 99)
  4. Cloud; மேகம். நாகமே லாயுலவென் னாகமே (கொண்டல்விடு.)
  5. Sound; ஒலி. (யாழ். அக.)
நாகம்² (nākam) — noun
  1. < nāga
  2. Cobra. See நல்லபாம்பு. நன்மணியிழந்த நாகம் போன்று (மணி. 25, 195)
  3. Serpent; பாம்பு. (பிங்.) ஆடுநாக மோட (கம்பரா. கலன்காண். 37)
  4. Poison; விடம். அதகங் கண்ட பையண னாகம்போல (சீவக. 403)
  5. Nether region; நாகலோகம். நாகர்நாக மும் (சீவக. 2580)
  6. Elephant; யானை. காள மேகமு நாகமுந் தெரிகில (கம்பரா. சித்திர. 2)
  7. Monkey; குரங்கு. வேடச்சிறா ருழைத்தோற்பறை யை நாகம்பறித்துலர் வாகைநெற்றாற் கொட்ட (திருப்போ. சந். அலங். 14)
  8. Black monkey; கருங் குரங்கு. (யாழ். அக.)
  9. Black lead; காரீயம். (பிங்.)
  10. Zinc; துத்தநாகம். (பிங்.)
  11. A prepared arsenic; பாஷாணவகை
  12. Fine cloth, as resembling a snake's slough; நற்றூசு. (பிங்.)
  13. See நாகப்பச்சை
  14. An unlucky hair-curl in the tail of cattle; மாட்டுவாலில் உள்ள தீச் சுழிவகை. (அபி. சிந்.)
  15. (Mus.) A melody of the kuṟiñci class; குறிஞ்சுப்பண்வகை. (பிங்.)
  16. Sulphur; கந்தகம். (யாழ். அக.)
நாகம்³ (nākam) — noun
  1. Mountain; மலை. (பிங்.) பொன்னாகமும் (கம்பரா. கார்முக. 32).

IndoWordNet

நாகம் — noun
  1. கஷ்யபின் வம்சத்தில் வந்த பாதாளத்தில் வசிப்பதாக கருதப்படுவது
நாகம் — noun
  1. விஷம் உடையது விஷம் இல்லாதது என இருவகைகளிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.
நாகம் — noun
  1. விஷம் உடையது, விஷம் இல்லாதது என இரு வகையிலும் காணப்படும் நீண்ட உடலையும் வழவழப்பான தோலையும் உடைய, கால் இல்லாத உயிரினம்.

பாம்பு பழங்கால உயிரினம் பழையகால உயிரினம் வாசுகி பாம்பு அஷ்டமாநாகன் அனந்தன் ஷேஷநாகம் பஞ்சதலை நாகம் காளிநாகம் தட்சக் நாகம் திருதராஷ்ட சர்பம் ஊர்வன பாம்புக்குஞ்சு சர்பகுஞ்சு அரவக்குஞ்சு நாகக்குஞ்சு அங்கதக்குஞ்சு அரவுக்குஞ்சு அராக்குஞ்சு அரிக்குஞ்சு கஞ்சுகிகுஞ்சு சக்கிரிகுஞ்சு பாந்தள்குஞ்சு விடதரக்குஞ்சு வியாளக்குஞ்சு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நாகம்
  1. வானம்
  2. துறக்கம்
  3. மேகம்
  4. ஒலி
  5. காண்க: நல்லபாம்பு
  6. நாகப்பச்சை
  7. நாவல்
  8. பாம்பு நஞ்சு
  9. நாகலோகம்
  10. யானை
  11. குரங்கு
  12. கருங்குரங்கு
  13. காரீயம்
  14. துத்தநாகம்
  15. நற்சிலை
  16. மலை
  17. புன்னைமரம்
  18. ஞாழல்
  19. சுகம்