நெல்
ஒரு தானியம் அரிசி இதிலிருந்து பெறப்படுகிறது paddy.
rice plant, paddy (Oryza sativa)
Tamil Wiktionary
நெல் — பெயர்ச்சொல் (Noun)
- ஒரு தானியம்
- அரிசி இதிலிருந்து பெறப்படுகிறது
[object Object]
Fabricius (1972)
நெல் — noun
- , நெல்லு, s. paddy, unhusked rice, சாலி
- a measure, the length of a rice-corn, ஓரளவு
- நெல்லடை — tithe of rice, portion of rice given as tax to government.
- நெல்லரி — a sheaf of rice-corn.
- நெல்லிடை — a weight equal to a grain of paddy.
- நெல்லு–க்–கட்டிவைக்க — to store up paddy.
- நெல்லு–க்–குத்த — to beat paddy in a mortar.
- நெல்லைக்குத்தி அறுவாக்க — to beat paddy and prepare the rice for the kitchen.
Tamil Moli Akarathi (1928)
நெல் (nel)
- சாலி, வரி, விரீகி, அன்றியும்நன் னெல்லின்பெயர்-செஞ்சாலி, செந் நெல்-சொல்-தோரை-நெல்லின் பெயர்-இயவை-மலை-நெல்லின் பெயர்-ஐவனம் தூற்றாநெல்லின் பெயர்-பொங்கழி-பொலி-மூவருட நெல்லின்பெயர்-அசம்
நெல் (nel)
- ஒர்வகைத்தானியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
நெல் (nel) — noun
- Rice-plant, Oryza sativa; பயிர்வகை. நெடுங்கதிர் நெல்லின் நாண்மேய லாரும் (ஐங்குறு. 95)
- Grain of paddy; நென்மணி. நெல்லும் பொரியும் (மணி. 6, 95)
- Food; உணவு. நெல்லுண்ட னெஞ்சிற் கோர் நோய் (திரிகடு. 79)
- Standard of linear measure 8 sesame seeds; எட்டு எள்ளளவு கொண்ட நீட்டலளவை. (சிலப். 3, 100, உரை.)
- Siris. See வாகை. (அக. நி.) நெல்லினா லலக்குங் காலு நிரப்பினான் (கம்பரா. ஒற்றுக்கே. 17)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
நெல்
- பயிர்வகை
- நென்மணி
- உணவு
- எட்டு எள்ளளவுகொண்ட நீட்டலளவை
- காண்க: வாகை