படிவம்
பூர்த்தி செய்யப்பட வேண்டிய ஒரு தாள் (a document with entries to be filled in) படி - வம் உறுதிமொழிப் படிவம், மாதிரிப் படிவம், ஒப்புகைப் படிவம்
form, appearance, shape body formation , deposit
Winslow (1862)
படிவம் (paṭivam) — noun
- Bodily shape, உடலுருவம்
- Symmetry of person, beauty, வடிவம்
- [dignitaté] Body, சரீரம்
- Penance, austerities, fasting, நோன்பு. (சது.)
- Figure, pattern, சித்திரரூபம்
- படிவர் — Asceties, recluses, முனிவர். 2. Ascetics with entangled hair, சடைமுடியோர்.
Fabricius (1972)
படிவம் — noun
- bodily shape
- beauty, symmetry of person
- penance, நோன்பு
- figure pattern
Tamil Moli Akarathi (1928)
படிவம் (paṭivam)
- உடலுறுப்பு, உடல், சித்திர ரூபம், நோன்பு, வடிவு
படிவம் (paṭivam)
- உடலுருவம், வடிவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
படிவம் (paṭivam) — noun
- paḍimā < pratimā
- Tutelary deity; வழிபடுதெய்வம். பைஞ் சேறு மெழுகிய படிவ நன்னகர் (பெரும்பாண். 298)
- cf. படி³. Body; உடம்பு. இருவகைப் படிவம் (ஞானா. 8, 3)
- Form, shape; உருவம். பண்ணவர் படிவங்கொண்டான் (சீவக. 395)
- Symmetry of form or figure; beauty; வடிவழகு. (அக. நி.)
- Guise of an ascetic; தவவேடம். படிவ நோன்பியர் (மணி. 28, 224)
- Appearance; தோற் றம். திங்கள் பகல்வந்த படிவம் போலும் (கம்பரா. கிட்கிந்தை. 51)
- Penance, austerities; விரதம். கற்றோய்த் துடுத்த படிவப் பார்ப்பான் (முல்லைப். 37)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
படிவம்
- வழிபடுதெய்வம்
- உடம்பு
- உருவம்
- வடிவழகு
- தவவேடம்
- தோற்றம்
- நோன்பு