படி

அளக்கப் பயன்படும் ஒரு அளவை 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி. மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி. இதனை படிகட்டு என்றும் கூறுவர். எ.கா. மாடிப் படி. ஆங். நூலைப்படிப்பது. எ.கா. இனியன் திருக்குறளை தலைகீழாகப் படித்துள்ளான் படி. ஆங்.

to read, recite, chant to learn, study, commit to memory to settle (as dust or sediment); to subside, become stationary, as water

Tamil Wiktionary

படி
  1. அளக்கப் பயன்படும் ஒரு அளவை 8 ஆழாக்கு. எ.கா. ஒரு படி அரிசி.
  2. மேலே ஏறுவதற்குப் பயன்படும் படி. இதனை படிகட்டு என்றும் கூறுவர். எ.கா. மாடிப் படி. ஆங்.
  3. நூலைப்படிப்பது. எ.கா. இனியன் திருக்குறளை தலைகீழாகப் படித்துள்ளான் படி. ஆங்.
  4. படியெடுத்தல். எ.கா. ஒரு செய்தியைப் படியெடுத்தல்.
  5. நிலை
  6. தன்மை
  7. அங்கவடி
  8. தராசின் படிக்கல்
  9. நூறு பலங் கொண்ட நிறையளவு
  10. நாட்கட்டளை
  11. நாழி
  12. அன்றாடச் செலவுக்குக் கொடுக்கும் பொருள்
  13. உபாயம்
  14. உதவி
  15. நிலைமை
  16. விதம்
  17. வாயில் நிலையின் கீழ்க் குறுக்குக்கட்டை
  18. உடம்பு

படிவு படிதல் படிவம் படிகம் படிமம் படிப்பு படித்தல் படிநிலை படியள படியெடு காற்படி அரைப்படி முதற்படி மாடிப்படி வாயிற்படி கீழ்ப்படி குளறுபடி அத்துபடி உருப்படி பயணப்படி பஞ்சப்படி

Winslow (1862)

படி (paṭi) — noun
  1. Step, stair, round of a ladder, சோபனம்
  2. Grade, rank, class, order. sphere, degree in religion, &c., நிலை
  3. disposition, குணம்
  4. Hatred, பகை
  5. The earth, as one of the series of worlds, பூமி
  6. Stirrup, அங்கவடி
  7. Weight for scales. நிறையறிகருவி
  8. The weight of a hundred palam, நூறுபலங்கொண்டது
  9. The நாழி measure, also the கொத்து measure of Jaffna. (சது.)
  10. Extra daily allowance for workmen or servants on a journey, &c., batta, ஆள்படி
  11. Manner, method, way, mode, விதம்
  12. Resemblance, simile, comparison, ஒப்பு
  13. Sill, the lower or upper frame of a door, வாயிற்கீழ்ப்படி or மேற்படி
  14. Fixed daily allowance of food, generally limited, உண்ணுமளவு. (c.)–Of படி measure, there are in common use, பிச்சைப்படி, a small sized one; முத்திரைப்படி, a stamped measure. அரைப்படி. Half a measure
  15. Half batta. அவர்சொற்படி. According to his word. பார்த்தபடியாய்நின்றான். He stood fixedly gazing. கையிலெடுத்தபடியேபோனான். He carried it away in his hand, just as he took it. நீர்சொன்னபடி. As you said. நடந்தபடிநடக்கட்டும். Let it happen as is to happen. தப்பும்படியறியேன். I know not how to escape. நான்படிக்குவந்தபண்ணைக்காரனைப்போலநிற்கவா..... Am I to wait like a hired laborer for batta? அவன்ஒருபடியாயிருக்கிறான். He remains in the same state. அவனுக்குஒருபடியாயிருக்கிறது. He is a little indisposed. வழக்கத்தின்படி. According to custom
  • படிகட்டுதல் — Giving batta, or a daily allowance. 2. Making up a weight equal to another. 3. Making steps or stairs.
  • படிகொடுத்தல்–படியளித்தல் — Giving stated allowances.
  • படிக்கட்டளை — [also நித்தியக்கட்டளை.] Daily allowance to a temple for puja.
  • படிக்கட்டி — Counterpoise, equipoise. (R.)
  • படிக்கட்டு — Steps, stairs of masonry. 2. A weight, நிறைத்தல்.
  • படிக்கணக்கு — Stated, as to quantity and time of meals.
படி (paṭi) — noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To settle as dust, or sediment; to subside, or become stationary, as water, இறங்க
  2. To gather, as cream, பாலேடுபடிய
  3. To rest on, as clouds upon a moutain; to alight, as birds; to roost, அமர
  4. To be broken in; to be trained, disciplined, reformed, habituated, tamed; made orderly; to be settled, as a handwriting; கைபழக
  5. To become subject, to be subordinate, to obey, கீழ்ப்படிய
  6. To sink in the water, to be immersed, to bathe, குளிக்க
  7. To become compressed, or flattened, by weight as olas, skins, &c., பதிய
  8. (சது.) To unite, mix, or mingle with; to join, கலக்க. படிந்தஏழுத்து. Settled handwriting. படிந்தஓலை. Olas compressed and flattened. படிந்ததூசி. Dust settled upon any thing. படிந்தகை. A trained or expert hand. படிந்தமாடு. A trained bullock. படிந்தவேலைக்காரன். A trained or expert mechanic
  9. A trained servent
  • படிமானம் — Yielding, compliance, conformity, doclility, அமைவு. 2. Union of boards in fitting.
  • படியப்பாய — To sink, as a ship.
  • படியப்பார்க்க — To bid or value too low, விலைகுறைக்க. 2. To unite boards, சேர்க்க. 3. To be ready to sink, அமிழ.
  • படியவைக்க — To place weights on olas, or warped boards, to flatten or straighten them, படியும்படிவைக்க. 2. To subdue a country, கீழ்ப்படுத்த. 3. [in burlesgue.] To lord it over others, to domineer, ஆள. காலைப்படியவைத்துநடத்தல். Placing one's feet carefully, in walking. அவனுக்குக்கைபடியவில்லை. His hand is not settled in writing, painting, &c. கப்பல்படியப்பாய்ந்தது. The ship has sunk. பலகைப்படியவில்லை. The boards do not fit. மைபடிந்தகண்ணாள். A woman with painted eye-lids. (p.)
  • படிதல் — A mixing, joining, கலத்தல். 2. Bathing, குளித்தல். (சது.) ஊர்படிதல். Being in subjection, submitting as people to a head-man, subjects to a king, &c.
  • படிவு — Sinking down; subsidence, தாழ்வு. 2. Pressure; compressed, flattened down by pressure, அழுந்துகை. 3. Discipline, docility, அடங்குகை. 4. Subjection, submission, obedience, கீழ்ப்படிவு. 5. Incumbency, sitting, resting, roosting, perching, அமர்கை.
படி (paṭi) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To read, to recite, வாசிக்க. (சது.)
  2. To learn, to study; to repeat in order, to commit to memory, கற்க
  3. To chant, to sing–as verses, sacred books, dramatic writings, &c., பாட. [ex Sa. Put'ha, to recite or read.]
  4. (vul.) To practise, to habituate one's self, to learn or practice an art, பழக (c.)
  • படிக்கக்கள்ளம்பண்ணுதல் — . Playing truant as a scholar.
  • படிக்கும்பிள்ளை — A schoolboy, a student.
  • படித்தவன் — [neg. படியாதவன். A learned person.
  • படித்துக்காட்ட — To quote a verse by singing it. 2. To show how a verse should be chanted. 3. To sing and expound. 4. To recite at an exhibition.
  • படித்துக்கொள்ள — To learn, to practise an art. 2. To become a scholar or a proficient. களவுபடித்துக்கொண்டான். He has learned to be unfaithful, or deceptive.
  • படிப்பு — Reading, recitation, வாசிப்பு. 2. Learning, study, repetition, instruction, inculcation, கல்வி. 3. Chanting, singing, பாடுகை. 4. [prov.] Scheme, subtlety, contrivance, தந்திரம்.

Fabricius (1972)

படி — noun
  1. step, stair, ஆரோகணம்
  2. degree, grade, rank, நிலைமை
  3. a measure
  4. a weight
  5. disposition, nature, குணம்
  6. hatred, பகை
  7. the earth, as one of the series of worlds, பூமி
  8. stirrup, அங்கவடி
  9. extra daily allowance for a person's subsistence, batta
  10. method, manner, way, mode, வீதம்
  11. resemblance, simile, comparison, ஒப்பு
  12. a door-sill
  13. படி or படிக்கு (with the future or negative participle), in order to, in order that, பொருட்டு
  14. படியால், படியினால், (with a parti ciple), because
  • ஒருபடி எண்ணெய் — a measure of oil.
  • அரைப்படி — half a measure, half a bottle.
  • காரியம் நடக்கும்படி–நடக்காதபடி — that the thing may (may not) go on.
  • அவர் சொற்படி–அவர் சொன்னபடி — according to his word.
  • அவன் அதைச் செய்தபடியினாலே — as he did it.
  • தூங்குகிறபடியாய்க் கிடந்தான் — he lay as if he slept.
படி — v. i.
  1. v. i. settle (as dust or sediment) இறங்கு
  2. gather (as cream)
  3. become habitual by learning or exercising, பழகு
  4. submit, obey, கீழ்ப்படி
  5. be trained and disciplined, be made orderly, சீர்திருந்து
  6. sink in the water, அமிழ்
  7. unite, mingle or mix with, join, கல
  • அவனுக்கு எழுத்துப்படியவில்லை — his writing is not settled.
  • புத்தி படியவில்லை — he has no capacity.
  • எனக்கவன் படியவில்லை — he does not obey me.
  • பலகை படியவில்லை — the boards do not fit.
  • விலை படியவில்லை — the price cannot be settled agreeably.
  • காலைப் படியவைத்து நடக்க — to place one's feet carefully in walking.
படி — v. t.
  1. v. t. read, recite, வாசி
  2. learn, கல்
  3. practise, பழகு
  • படிக்கக் கள்ளம்பண்ணுதல் — playing truant as a scholar.
  • படித்துக்கொள்ள — to learn a thing, to get a knowledge of it.
  • படித்தவன்–படித்தெடுத்தவன்–படிப் பாளி — ( படியாதவன்), a learned man.
  • படிப்பனவு — learning, study, படிப்பு.
  • படிப்பனை–படிப்பினை — instruction, doctrine, the moral of a leeson.
  • படிப்பு — learning, study.

Tamil Moli Akarathi (1928)

படி (paṭi)
  1. ஒப்பு, ஓரளவு, குணம், குதிரை யங்கபடி, சம்பளம், சோபானம், தர ம், தாழ்வாரம், நாழி, நிறையறிபடி, நீர்நிலை, நூறுபலங்கொண்ட நிறை, பகை, படியென்னேவல், பூமி, வா யிற்படி, விதம்
படி (paṭi)
  1. ஆரோகணம், சோபானம்
படி (paṭi)
  1. உரு, குணம், குதிரையங்கவடி, சோ பானம், நாழி, நூறுபலம், பகை, படி யென்னேவல், பூமி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

படி³ (paṭi) — noun
  1. Step, stair; rung of a ladder; சோபானம். (பிங்.)
  2. Grade, rank, class, order, sphere; நிலை. முதற்படியிலிருக்கிறான்
  3. Nature; தன்மை. கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படிய வே (சீவக. 167)
  4. Stirrup; அங்கவடி. (பிங்.)
  5. Weight for scales; தராசின் படிக்கல். (பிங்.)
  6. A weight 100 palam; நூறுபலங்கொண்ட நிறையளவு
  7. The ordinary measure of capacity 8 ollocks, kottu of Jaffna; நாழி. (பிங்.)
  8. Fixed daily allowance for food; நித்தியக்கட்டளை. படியுண்பார் நுகர்ச்சிபோல் (கலித். 35)
  9. Batta, subsistence money (R. F.); தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள்
  10. Device, means; உபாயம். பவக்கடல் கடக்கும் படி யறியாது (உத்தரரா. தோத்திர. 23)
  11. State, condition; நிலைமை. ஒருபடியாக இருக்கிறான்
  12. Manner, mode; விதம். பாசத்தாலனகன்றம்பி பிணிப்புண்டபடியே (கம்பரா. நாகபாச. 209)
  13. Sill or lintel; வாயில் நிலையின் கீழ்க்குறுக்குக்கட்டை அல்லது மேற்குறுக்குக்கட்டை
  14. Body; உடம்பு. நினையாரவன்மைப்படியே (திவ். இயற். திருவிருத். 93)
  15. Family, lineage; வமிசபரம்பரை. படிமன்னு பல்கலன் (திவ். திருவாய். 4, 1, 9)
  16. Fitness; தகுதி. (சூடா.) சரணமாம் படியார் பிறர் யாவரோ (தேவா. 1214, 17)
  17. Order; முறைமை. அழுந்தை மறையோர் படியாற்றொழ (தேவா. 493, 10)
  18. Low platform for conducting ceremonies; வேதிகை
  19. Verandah; தாழ்வாரம். (யாழ். அக.)
  20. Reservoir of water; நீர்நிலை. (யாழ். அக.)
படி⁴ (paṭi)
  1. , < prati. n
  2. Hatred; பகை. படிமதஞ் சாம்ப வொதுக்கி (பரிபா. 4, 18)
  3. True copy, as of a manuscript; ஒத்த பிரதி. கிழித்த ஓலை படியோலை (பெரியபு. தடுத்தாட். 56)
  4. [K. paḍi.] Resemblance, comparison; உவமை. படி யொருவ ரில்லாப் படியார்போலும் (தேவா. 44, 7). — part. A particle of comparison; ஓர் உவமவுருபு. (சங். அக.)
படி⁵ (paṭi) — noun
  1. Earth; பூமி. வருடை யைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5).