பழக்கம்
Tamil Wiktionary
பழக்கம்
- $ தனிப்பட்ட மனிதன் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட செயல்பாடுகள். வழக்கம் என்ற சொல்லிலிருந்து மாறுபட்ட பொருள் பதிந்தது.
- புகை பிடிப்பதும், மது அருந்துவதும் அவனுடைய பழக்கங்கள்.
- பழக்கங்கள் என்பது இதன் பன்மைச்சொல் ஆகும்.
- நீங்கள் அடிக்கடி மற்றும் தவறாமல் செய்யும் வேலைகள்
- புத்தகங்கள் படிப்பது ஒரு சிறந்த பழக்கம். படித்தல் மனதை ஒருமைப்படுத்துகிறது; சிந்தனை ஒன்று படுகிறது; மனம் அலை பாய்வது தடுக்கப்படுகிறது.
- மிகவும் பயனுள்ள நபர்களின் 7 பழக்கங்கள்
பழகு பழக்கு பழக்கவழக்கம் குடிப்பழக்கம் போதைப்பழக்கம் மூடப்பழக்கம்
Winslow (1862)
பழக்கம் (paḻakkam) — noun
- Habit, practice, custom, வழக்கம்
- Initiation, training, exercise, use, அப்பியாசம்
- Conversation, intimacy, intercourse, அறிமுகம்
- Manners, education, cultivation,ஊடாட்டம். 5.Expertness, cleverness or dexterity acquired by use, சமர்த்து
- Tameness, domestication or gentleness, சாதுத்துவம். (c.) பழக்கமில்லாதநூல். A science, or scientific work, in which one is not versed
- பழக்கங்காட்ட — inf. To betray bad education or mean habits.
- பழக்கமாக — To become acquainted with one.
- பழக்கமானவன் — An acquaintance, a crony. 2. One practised, taught, acquainted, expert.
- பழக்கம்பண்ண — To habituate or accustom one's self to another. 2. To cultivate a science, பயிற்சிசெய்ய.
Fabricius (1972)
பழக்கம் — noun
- custom, habit, practice, வழக்கம்
- training, use, அப்பியாசம்
- conversation, intercourse, acquain- tance, அறிமுகம்
- tameness, domes- tication or gentleness, சாதுத்துவம்
- பழக்கமாக — to become acquainted with.
- பழக்கம்பண்ண — to accustom oneself to another.
Tamil Moli Akarathi (1928)
பழக்கம் (paḻakkam)
- அறிமுகம், சாதுத்துவம், ப யிற்சி பரிசனை, வழக்கம்
பழக்கம் (paḻakkam)
- படிப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பழக்கம் (paḻakkam) — noun
- < பழகு-
- Initiation, training, exercise, use; பயிற்சி. பழக்கமோ டர்ச்சித்த மாணி (தேவா. 524, 5)
- Habit, practice, custom; வழக்கம்
- Conversation, intimacy, intercourse, acquaintance, association; அறிமுகம்
- Manners, behaviour; ஒழுக்கம்
- Expertness, cleverness, dexterity acquired by practice; சமர்த்து. (W.)
- Tameness; domestication; அமைதிக்குணம். (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பழக்கம்
- வழக்கம்
- பயிற்சி
- அறிமுகம்
- ஒழுக்கம்
- திறன்
- அமைதஇிக்குணம்