புள்

கிட்டி விளையாட்டில் பயன்படுத்தும் குச்சி; கிட்டிப் புள் எந்நில மருங்கின் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்

bird, fowl bee catstick (the stick used in the game of tipcat)

Tamil Wiktionary

புள் — பெயர்ச்சொல் (Noun)
  1. பறவை
  2. கிட்டி விளையாட்டில் பயன்படுத்தும் குச்சி; கிட்டிப் புள்
  3. எந்நில மருங்கின் பூவும் புள்ளும்
  4. அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
  5. வந்த நிலத்தின் பயத்த ஆகும்

[object Object]

புல்

Winslow (1862)

புள் (puḷ) — noun
  1. A bird in general, பறவைப் பொது
  2. The twenty-third lunar asterism, அவிட்டம்
  3. A trap-stick used by children in play, ஓர்விளையாட்டுக்கருவி
  4. A class of birds of the gull-genus, நீர்வாழ் பறவை
  5. A beetle, வண்டு
  6. An instrument of torture. See கிட்டி
  • புள்ளடி — A bird's foot, or foot-step, புள்ளின்பாதம். 2. A cross or mark like a bird's foot-step +; used, like the caret to indicate the addition of something omitted in the writing, also புள்ளடிவடிவு. 3. A touch-stone, உரைகல். 4. A plant, Hedysarum gangeticum, ஓர்செடி.
  • புள்ளடிபோட — To put a cross, or caret as above.
  • புள்ளரசு — Garuda, the vehicle of Vishnu, கருடன். 2. The large kite, king of birds, Falco Pondicherianus.
  • புள்ளீட்டம் — A flock of birds, பறவைக்கூட்டம். (p.)
  • புள்ளொலி — Noise of birds, பறவையினொலி.
  • புள்ளோச்சல் — Driving away birds or other winged creatures, பறவை துரத்தல். 2. [in love poet.] The lover's touching the body of his mistress, under pretence of driving beetles from the flowers on her locks.

Fabricius (1972)

புள் — noun
  1. , புள்ளு, s. a bird in general, பறவை
  2. a class of water birds, நீர்வாழ் பறவை
  3. a trap-stick used by children in play
  4. a beetle, வண்டு
  5. an instrument of torture, கிட்டி
  • புள்ளடி–உரைகல் — the mark of birds feet or claws; 2. a mark or caret indicating omission in writing; 3. a touch- stone, ; 4. a plant, ஓர் செடி.
  • புள்ளரசு — Garuda the vehicle of Vishnu; the large kite, king of birds,
  • சிறுபுள்ளடி — the name of a creeping plant.
  • புள்ளோச்சல் — driving away birds 2. (love poesy) the lover's touching the body of his mistress under pretence of driving away beetles from the flowers on her locks.

Tamil Moli Akarathi (1928)

புள் (puḷ)
  1. அவிட்டநாள், ஒரு விளையாட்டுக் கருவி, பறவைப்பொது இது பிறப் பேழினொன்று, வண்டு
புள் (puḷ)
  1. அவிட்டநாள், பறவைப்பொது, வண்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

புள் (puḷ) — noun
  1. Bird; fowl; பறவை. வேட்டு வன் புட்சிமிழ்த் தற்று (குறள், 274)
  2. A kind of bird. See கணந்துள். புள்ளும் புதாவும் (சிலப். 10, 117)
  3. Bee; வண்டு. (சூடா.) புள்ளுண் பூந்தொடைக் குழலார்க்கு (உபதேசகா. சிவவிர. 11)
  4. Augury; பறவைநிமித்தம். புள்ளோர்த்துப் படை யமைத்து (அகநா. 207)
  5. The 23rd nakṣatra; அவிட்டநாள். (திவா.) பனைமுதற் புள்வரை பகர்ந்திடு கலிக்கும் (இலக். வி. 881)
  6. cf. குருகு. Bracelet; கைவளை. புட்கை போகிய புன்றலை மகாரொடு (மலைபடு. 253)
  7. Drinking; drink; மதுபானம். புள்ளே புனலே புலவியிம் மூன்றினும் (பரிபா. 16, 39)
  8. Trap, stick used in the game of tip-cat; கிட்டிப் புள்
  9. An instrument of torture. See கிட்டி. (W.)