பொட்டு

Putu

Winslow (1862)

பொட்டு (poṭṭu) — noun
  1. A spot or wafer of red sandal paste worn on the forehead, as திலகம்
  2. One of the two marriage badges, worn, especially by Telugus, on the neck, தாலிப்பொட்டு
  3. Empty grains of corn, தானியப்பொட்டு
  4. An insect, or moth in its catterpillar state, ஓர்புழு. (சது.)
  5. A small round spot, dot, or mark, அடையாளம்
  6. A small bodied spider with long legs, ஓர்சிலந்திப்பூச்சி
  7. A magical spot worn on the forehead, said to enable one to conquer in games, மாயமைப்பொட்டு
  8. [fig.] Repute, esteem, &c., obtained by imposing on others, மதிப்பு
  9. [vul.] A hole or opening in a hedge to creep through, நுழைவழி
  10. [South usage.] The temples
  • பொட்டரிக்க — To fret a garment –as moths. பொட்டரித்தவஸ்திரம். A moth-eaten garment.
  • பொட்டுக்கட்ட — To tie on the marriage badge, or that of a dancing girl.
  • பொட்டுக்குத்த — [com. பச்சைகுத்த.] To make indelible spots on the body with a vegetable preparation.
  • பொட்டுக்கேடு — Loss of ill-gotten repute.
  • பொட்டுத்தாலி — A roundish marriage- badge. See தாலி.
  • பொட்டுப்பூச்சி — A small round-bodied venomous spider with long legs. அங்கேபூச்சிபொட்டாயிருக்கும். There will be troublesome insects in that place. பொட்டிட்டாற்போலேபிடித்துக்கொள். Catch him at once, just as he stands.

Fabricius (1972)

பொட்டு — noun
  1. a spot of sandal paste or other stuff put on the forehead, திலகம்
  2. a round plate of gold, the matrimonial token worn by Telugu women, தாலிப்பொட்டு
  3. a moth, a caterpillar
  4. a spider, சிலந்தி
  5. an empty or blighted ear of corn
  6. the temples, கன்னப்பொறி
  7. (fig.) repute, or esteem achieved by imposing on others
  8. (vulg.) a hole in a hedge to creep through
  • அங்கே பூச்சி பொட்டாயிருக்கும் — there will be troublesome insects or reptiles in that place.
  • பொட்டரித்த வஸ்திரம் — a moth-eaten garment.
  • பொட்டிட — to paint a spot on the forehead.
  • பொட்டுக்கட்ட — to tie on the marriage badge, or that of a dancing girl.
  • பொட்டுப்பூச்சி — a kind of venomous spider.
  • பொட்டும் பொடியுமான மீன் — very small fish.

Tamil Moli Akarathi (1928)

பொட்டு (poṭṭu)
  1. ஒருபூச்சி, சங்கை, தாலிப் பொட்டு, தானியப்பொட்டு, நுழை வழி, நெற்றித்திலகம்
பொட்டு (poṭṭu)
  1. ஓர்வகைப்புழு, தாலிப்பொட் டு, தானியப்பொட்டு, நெற்றித்தில கம், பொய், சிறுவழி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பொட்டு¹ (poṭṭu) — noun
  1. Round mark, red, white or black, worn on the forehead; நெற்றியிலிடுந் திலகம். பொட்டணியா னுதல் (திருக்கோ. 303)
  2. Gold ornament in the shape of small metal cups strung together and worn round the neck; பொன்னாற்செய்த ஒருவகைத் தாலி. அரக்கியர் கட்டிய பொட்டுகள் தொட்டறுபட்டிடும் (இராமநா. சுந். 18)
  3. A kind of jewel; ஒருவகை யணி. திருக்கைப் பொட்டு (S. I. I. ii, 16)
  4. Temple of the head; கன்னத்தின் மேற்பொருத்து
  5. Trifle; அற்பம். பொட்டான வேர்களும். (இராமநா.)
  6. Dot, spot, mark; வட்டவடிவான குறி
  7. Drop; துளி. மழை ஒருபொட்டுக்கூட விழவில்லை
  8. Worm; புழு. (பிங்.)
  9. Moth; பூச்சிவகை. பொட்டரித்த வஸ்திரம்
  10. See பொட்டுப்பூச்சி. (W.)
  11. Dot, representing one; ஒன்று என்னும் எண்ணைக் குறிக்கும் புள்ளி. Cant
  12. Repute or esteem obtained by imposing on others; தகுதியின்றிப் பிறரை ஏமாற்றிப் பெறும் நன்மதிப்பு. (W.)
  13. Hole or opening to creep through, as in a hedge; நுழைவழி. (W.)
பொட்டு² (poṭṭu) — noun
  1. Chaff; husk with particles of grain; உழுந்து முதலிய தானியங்களின் தோலோடு கூடிய சிறுதுகள்
  2. Dust; பொடி. குலக்கிரி பொட்டெழ (திருப்பு. 740)
  3. Dandruff; பொடுகு. அவன் தலை பொட்டெழுந்திருக்கிறது

IndoWordNet

பொட்டு — noun
  1. கருப்பு நிறத்தில் வட்ட வடிவத்தில் வைக்கப்படும் புள்ளி
பொட்டு — noun
  1. நெற்றி ஓரத்திற்கும் காதுக்கும் இடையில் உள்ள பகுதி
பொட்டு — noun
  1. நெற்றி ஓரத்திற்கும் காதுக்கும் இடையில் உள்ள பகுதி

கருப்பு நிறப்புள்ளி பச்சைக்குத்துதல் நெற்றிப்பொட்டு உடல் பாகம் உடல் அங்கம் உடற்பகுதி உடல் உறுப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பொட்டு
  1. நெற்றியிலிடும் பொட்டு
  2. பொன்னாற் செய்த ஒரு தாலிவகை
  3. ஓர் அணிவகை
  4. கன்னத்தின் மேற்பொருத்து
  5. புல்லிது
  6. வட்ட வடிவான குறி
  7. துளி
  8. புழு
  9. பூச்சிவகை
  10. பொட்டுப்பூச்சி
  11. பிறரை ஏமாற்றிப் பெறும் நன்மதிப்பு
  12. நுழைவழி
  13. தானியங்களின் தோலோடுகூடிய துகள்
  14. பொடி
  15. பொடுகு