மருத்துவம்

மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு. ஆங்கிலம் - medicine மருந்து - மருத்துவம்

medicine practice of medicine remedy

Tamil Wiktionary

மருத்துவம்
  1. மருத்துவர் பரிசோதனை மூலம் நோயினைக் கண்டறிந்து, அதற்கு தகுந்த படி மருந்தினைக் கொண்டு, நோயாளியைக் (அந்நோயினை) குணப் படுத்துதலே, மருத்துவம் எனப்படும்.இதில் பல வகைகள் உண்டு.

மருந்து மருத்துவமனை சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் இயற்கை மருத்துவம் யுனானி மருத்துவம் சீன மருத்துவம்

Winslow (1862)

மருத்துவம் (maruttuvam) — noun
  1. Midwifery, மருத்துவச்சியின்தொழில். (c.)
  2. The practice of medicine, வைத்தியம்
  • மருத்துவக்கலைஞன்–மருத்துவநூலோன் — A physician, வைத்தியன்.
  • மருத்துவச்சி–மருத்துவிச்சி — A mid-wife.
  • மருத்துவம்பார்க்க–மருத்துவஞ்செய்ய — To do the business of a mid-wife.
  • மருத்துவர் — Doctors, வைத்தியர். 2. The two celestial physicians of Swerga. See அச்சுவினிதேவர்கள். (சது.)
  • மருத்துவவாழை — A kind of plantain.
  • மருத்துவன் — A physician.

Fabricius (1972)

மருத்துவம் — noun
  1. midwifery
  2. the practice of medicine, வைத்தியம்
  • மருத்துவம் பார்க்கிறவள்–மருத்துவச்சி–மருத்துவிச்சி — a midwife.
  • மருத்துவன் — a physician.

Tamil Moli Akarathi (1928)

மருத்துவம் (maruttuvam)
  1. பரிகரிப்பு, வைத்தியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மருத்துவம்¹ (maruttuvam) — noun
  1. < மருந்து
  2. Practice of medicine; வைத்தியம்
  3. Medicine; மருந்து
  4. Remedy; பரிகாரம். எங்கட் பிணி தவிர்த்து வழுவா மருத்துவமாவன . . . ஐயாற னடித்தலமே (தேவா. 292, 5)
  5. Midwifery; பிர சவம்பார்க்குந் தொழில். Mod
மருத்துவம்² (maruttuvam) — noun
  1. perh. மருதம். A kind of lute; ஒருவகை யாழ். மருத்துவப் பெயர் பெறும் வானக்கருவி (கல்லா. 81).

IndoWordNet

மருத்துவம் — noun
  1. நோய்க்கான காரணத்தைக் கண்டறிவதற்கும் நோயைக் குணப்படுத்துவதற்கும் முறையான பயிற்சியைக் கொண்ட தொழில்.

சிகிச்சை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மருத்துவம்
  1. வைத்தியம்
  2. மருந்து
  3. பரிகாரம்
  4. மகப்பேறு பார்க்கும் தொழில்
  5. ஒரு யாழ் வகை