மிதி

காலால் அழுத்து. 1)press by foot, 2)pedal ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

to tread on, step on, stamp or walk over to tread down, trample on to pedal

Tamil Wiktionary

மிதி — பெயர்ச்சொல் (Noun)
  1. காலால் அழுத்து.

[object Object]

Winslow (1862)

மிதி (miti) — verbal noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To tread down, trample on, காலான்மிதிக்க; [from Sa. Mruda, Mrada.] (c.)
  2. v. n. To jump, குதிக்க
  • மிதி — Treading, மிதித்தல். 2 A tread. 3. The treadle of a weaver's loom, நெய்வார்கருவியினொன்று. 4. As மிதிமரம்.
  • மிதிகல் — A step-stone by a well.
  • மிதிபலகை — A foot-stool.
  • மிதிபாகல் — A creeping plant, Momordica muricata; opposite to கொம்புப்பாகல்.
  • மிதிமரம் — A step-board near a tank or well. 2. The treadle of a loom.
  • மிதியடி — Common shoes. 2. Wooden slippers, பாதகுறடு. மிதியடிக்கட்டை. A worthless sandal, spoken contemptuously.

Fabricius (1972)

மிதி — v. t.
  1. v. t. tread on, trample; v. i. jump, குதி.
  • மிதி — treading, a tread.
  • மிதிகல் — a step-stone by a well.
  • மிதித்துப் போக — to march boldly.
  • மிதித்துப்போட — to tread or trample upon a thing.
  • மிதிபலகை — a foot-stool.
  • மிதிபாகல் — a creeping plant with bitter fruit, .

Tamil Moli Akarathi (1928)

மிதி (miti)
  1. அத்தாட்சி, அழகு, அறிவு, கிணற் றுமிதி, நெய்வார்கருவியினொன்று, மிதித்தல், மதியென்னேவல், விலை
மிதி (miti)
  1. மிதித்தல், மிதியென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மிதி² (miti) — noun
  1. Treading; மிதிக்கை. மிதியின் றிடைபொலி சென் றன (இரகு. யாகப். 21)
  2. Tread; அடிவைப்பு. மகனார்தம் மிதியாம் (இரகு. தசரதன்சாப. 109)
  3. Step in a tank or well; படிக்கல். (C. G.)
  4. Treadle of weaver's loom; நெய்வார் கருவிகளு ளொன்று. (சங். அக.)
  5. Food trampled and formed into a ball; மிதித்துத் திரட்டப்பெற்ற கவளம். நெய்ம்மிதி பெறாஅது (புறநா. 44)
  6. Walking; gait; நடை. பலதுரக மிதியிற் றகுபலதாள விதம் பெற்றிட (இரகு. யாகப். 18)
மிதி³ (miti) — noun
  1. < miti
  2. Measure; அளவு
  3. Knowledge; ஞானம். (சங். அக.)
  4. Intellect; அறிவு. (இலக். அக.)
  5. Evidence; அத்தாட்சி. (யாழ். அக.)

IndoWordNet

மிதி — verb
  1. கால்களினால் நசுக்கி அல்லது அழுத்தி நஷ்டம் ஏற்படுத்துவது

நசுக்கு பாழாக்கு வீணாக்கு வீணடித்தல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மிதி
  1. மிதிக்கை
  2. அடிவைப்பு
  3. படிக்கல்
  4. நெய் வார் கருவியுள் ஒன்று
  5. மிதித்துத் திரட்டப் பெற்ற கவளம்
  6. நடை
  7. அளவு
  8. அறிவு
  9. சான்று