முகவுரை

Tamil Wiktionary

முகவுரை
  1. கணக்குப்புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம் தேதி முதலிய குறிப்பு
  2. திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்களச்சொல்.
  3. வரலாறு என்னும் பொருளுடைய பாயிரம் என்ற சொல்லின் வேறு பெயர் முகவுரை என்று நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் குறிப்பிடுகிறார் . ஒரு நூலின் கருத்துகளை நூலின் தொடக்கத்தில் சுருக்கமாக எடுத்துரைக்கும் உரை.

முகம் உரை

Fabricius (1972)

முகவுரை — noun
  1. preface see under முகம்.

Tamil Moli Akarathi (1928)

முகவுரை (mukavurai)
  1. பாயிரம், மேல்வாசகம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முகவுரை (muka-v-urai) — noun
  1. +. Introduction, preface; முன்னுரை. (நன். 1.)
முகவுரை (muka-v-urai) — noun
  1. +. (திவ். திருப்பல். 1, வ்யா. பக். 34.)
  2. Introductory entry of date, etc., in daily account; கணக்குப்புத்தக முதலியவற்றின் தலைப்பில் எழுதும் வருஷம் மாதம் தேதி முதலிய குறிப்பு
  3. Auspicious expression, at the commencement of an epistle, etc.; திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்களச் சொல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முகவுரை
  1. முன்னுரை
  2. திருமுகம் முதலியவற்றின் தொடக்கத்தில் எழுதும் மங்கலச்சொல்
  3. கணக்குப் புத்தகம் முதலியவற்றின் தலைப்பில் எழுதும் ஆண்டு, மாதம், நாள் முதலிய குறிப்பு