உரை

ஒரு செய்யுளின் உரையைப் படிக்கும் போதே, அனைவருக்கும் அதன் பொருள் நன்கு புரிகிறது. ஆங்கிலம் speech/talk

to be reduced into a powder or paste; to wear away by attrition; to be indented or effaced by rubbing to rub into a paste, wear away by rubbing, grate to test on the touchstone, as valuable metals like gold

Winslow (1862)

உரை (urai) — noun
  1. Utterance, speaking, speech, பேச்சு
  2. A word, an expression, a sentence, a declaration, a saying, மொழி
  3. Explanation, interpretation, commentary, exposition, gloss, verbal renderings, &c., வியாக்கியானம்
  4. Gold, பொன்
  5. [in native lexicons.] The words for which synonymes of meanings are given, also the generic term of which the species are given, சொற்பயன்
  6. Sound, ஒலி
  7. Eminence, உயர்ச்சி
  8. The written word, sacred writings, holy writ, as one of the three means of attaining knowledge, வேதமொழி; several kinds of உரை, or modes of explanation are given by Tamil Grammarians. The author of காரிகை has given four, viz.:
  9. கருத்துரை, the main sentiment or scope of the text explained, also called தாற்பரியவுரை
  10. பதவுரை, verbal explanation, or interpretation, word by word, or clause by clause, also called கண்ணழிவுரை
  11. பொழிப்புரை, the substance of the text omitting rhetorical ornament, and adjuncts, or a free rendering of the text without interruption, also called பொழிப்புத்திரட்டுரை and பிண்டவுரை. –Note. The latter is the same as பதவுரை would be without the words of the text interspersed
  12. விரித்துரை, explanation at large, comment or exposition with proofs, illustrations, &c., also called அலகவுரை and விரியுரை; any of the preceding three, or any other kind of explanation may be included in this last. According to நன்னூல், உரை is divided into tow general classes, viz.: காண்டிகையுரை and விருத்தியுரை
  13. காண்டிகையுரை, brief exposition, or explanation of the text embracing five sub-divisions. (a) கருத்துரை, the scope of the text. (b) பதப்பொருள், verbal rendering being either as பதவுரை or as the scope and definition of பொழிப்புரை, given above, (c) உதாரணம், example for illustration. (d) வினா, anticipating objections, (lit.) proposing questions. (e) விடை, answering such objections or questions as may possibly occur
  14. விருத்தியுரை, copious or complete explanation embracing fourteen sub-divisions
  15. பாடம், giving the text or verse to be explained with different readings and choice exposition
  16. கருத்துரை, the general scope, or import of the text, as in காண்டிகை
  17. சொல்வகை, giving the parts of speech, or showing the grammatical connection when necessary to clear away obscurities
  18. சொற்பொருள், giving equivalent, literal words, or clauses as பதப்பொருள், in காண்டிகை, verbal renderings, &c
  19. தொகுத்துரை, a free rendering of the text as பொழிப்புரை, above
  20. உதாரணம், illustration by examples, as above
  21. வினா, anticipating objections, or raising questions as before
  22. விடை, answering such objections or giving reasons in support of the statements in the text
  23. விசேடம், special explanation, particular remarks
  24. விரிவு, supplying ellipses as of cases or otherwise
  25. அதிகாரம், determining the meaning of doubtful terms by reference to the subjects under discussion, as belonging to such a head, &c., or according to another exposition pointing out the beginning and ending of the discussion of the different subjects respectively, the opinions of different commentators
  26. துணிவு, deciding the meaning of terms concerning which there may be diversity of opinion
  27. பயன், inference, applications or recapitulation to show what is to be learnt by the text
  28. ஆசிரியவசனம், quotations, or textuary proofs from other authors. (p.)
  • உரைகட்ட — To comment on a work.
  • உரைகாரன் — A commentator, expositor, உரையாசிரியன்.
  • உரைக்கோள் — The construction given by the commentator to the text, உரைகாரன்கருத்து.
  • உரைசெய்ய — To speak, declare, பேச. To make a commentary, வியாக்கியானம்பண்ண.
  • உரைநூல் — A work on which a commentary has been written, உரைபெற்றநூல்.
  • உரைபாடம்–உரையேடு — A work with its commentary.
உரை (urai) — verbal noun
  1. , கிறது, ந்தது, யும், ய, v. n. [vul. உரைஞ்சு.] To be rubbed into a powder or paste, to wear away by attrition, to be indented, or effaced by rubbing, தேய. காரியமெல்லாமுரைந்துபோயிற்று. The whole affair has proved abortive, it has come to nothing.
  • உரை — Rubbing, friction, attrition, தேய்வு. 2. Touch of gold, or silver on the stone, assay, மாற்றறியுமுரை. 3. Gold for touching, பொன்.
  • உரைநயம் — Superiority of gold or silver shown by the touch.
  • உரையறிகருவி — A touch-stone, உரையாணி. 2. A touch-needle, மாற்றறிவிக்குமாணி.
  • உரையாணி — A touch-needle.
  • உரையுண்ண — To be rubbed.
  • உரைதல்–உரையல்–உரைவு — Rubbing, உரிஞ்சுகை. 2. Waste by rubbing, friction, &c., தேய்வு.
உரை (urai) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To rub a substance held in the hand into a powder or paste, to wear away by rubbing, to grate, தேய்க்க
  2. To try by a touch-stone, to test, மாற்றறியவுரைக்க
  3. (p.) To speak, tell, say, declare, articulate, பேச
  4. To explain, teach, கற்பிக்க
  5. To sound, ஒலிக்க. கீழோராகிலுந்தாழவுரை. Speak modestly even to your inferiors. (ஔவை.)
  • உரைகல் — A touch-stone, பொன் வெள்ளியுரைக்குங்கல்.
  • உரைத்தசொல் — A spoken word.
  • விரித்துரைக்க — To explain at large, expatiate upon, amplify, dilate.
  • சந்தனமுரைக்க — To rub down sandal wood into a paste.
  • குளிகையுரைக்க — To reduce pills to a powder.
  • நூலுரைக்க — To write a book.

Fabricius (1972)

உரை — noun
  1. utterance, speech, பேச்சு
  2. word, sentence, மொழி
  3. commentary, வியாக்கியானம்
  4. rubbing, தேய்வு
  5. touch of gold or silver on the stone, மாற்று
  6. fame, reputation, புகழ்
  7. roar, முழக்கம்
  8. sacred writings, ஆகமம்
  • உரைகல் — a touch-stone.
  • உரைகாரன்–உரையாசிரியன் — a commentator.
  • உரைநூல் — a work on which a commentary has been written.
  • உரையாணி — a gold pin for testing the quality of gold.
  • உரையெழுத — to write a commentary.
  • உரைவாசகம் — prose, composition.
உரை — v. i.
  1. v. i. be rubbed into powder or paste, be effaced by rubbing, தேய்
  2. prove abortive, வீணாகு as in காரியமெல்லாம் உரைந்தது
  • உரைவு — rubbing –உரைசல், உரை தல், உரையல் v. ns.
உரை — v. t.
  1. v. t. pronounce, speak, say, பேசு
  2. rub to powder, தேய்
  3. try or assay gold by rubbing it on a touchstone
  4. smear or daub, பூசு
  5. polish, மெருகிடு
  • உரைவன்மை — eloquence, oratorical power.
  • தொகுத்துரைக்க — to summarise.
  • சந்தனம் உரைக்க — to rub down sandal into paste.
  • தாழவுரை — speak humbly.
  • உரைத்த சொல் — a spoken word.
  • உரைப்பு — rubbing, telling.

Tamil Moli Akarathi (1928)

உரை (urai)
  1. ஆகமப்பிரமாணம் புகழ்வியாக்கி யாபனம், உயர்ச்சி, உரையென்னேவ ல்,ஒலிசொல், சொற்பயன், தேய் மானம் தேய்வு,பேச்சு, பொன்,மா ற்றறியுமுறை, வேதமொழி
உரை (urai)
  1. அத்தம், அருத்தம், சொற்பயன், பதம், பாழி, அதுநால்வதையாம் அக லவுரை, கருத்துரை, பதவுரை, பொ ழிப்புரை
உரை (urai)
  1. 4 - கருத்துரை, பதவுரை, பொழி ப்புரை, அகலவுரை, அவையாவன செய்யுட்கருத்துரைத்தலே கருத்து ரை, சொற்றொறும் பதப்பய னுரை த்தலே பதவுரை, பொருடொகுத் துரைத்தலே பொழிப்புரை, இலக் கணமுமிலக்கியமு மெடுத்துக்காட்டி ப்பொருள் வரித்துரைத்தலே யகல வுரை
உரை (urai)
  1. உயர்ச்சி, உரையென்னேவல், ஒ லிசொல்சொற்பயன் தேய்வுபொன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உரை
  1. உரைக்கை
  2. சொல்
  3. பொருள் விளக்கம்

Tamil Wiktionary

உரை
  1. ஒரு செய்யுளின் உரையைப் படிக்கும் போதே
  2. அனைவருக்கும் அதன் பொருள் நன்கு புரிகிறது.

உரையாடு உரைகல் உரைநடை உரைநூல் முகவுரை அணிந்துரை பொழிப்புரை தொகுப்புரை முடிவுரை விரிவுரை சான்றுரை பரிந்துரை தெளிவுரை தொடருரை மதிப்புரை வரவேற்புரை சிறப்புரை நன்றியுரை பிரிவுரை சிற்றுரை பேருரை உறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உரை³ (urai) — noun
  1. Rubbing, friction, attrition; தேய்வு. (சூடா.)
உரை⁴ (urai) — noun
  1. < உரை²-
  2. Fineness of gold or silver as tested on the touchstone; மாற்று. உரைகுறைபடாது (அழகர்கல. 55)
  3. Gold; பொன். (திவா.)
உரை⁶ (urai) — noun
  1. Speaking, utterance; உரைக்கை. உரைமேற் கொண்டு (திவ். இயற். 1, 25)
  2. Word, expression, saying; சொல். (திவா.)
  3. Explanation, interpretation, commentary, exposition, gloss; வியாக் கியானம். உரையாமோ நூலிற்கு நன்கு (நாலடி, 319)
  4. Sound of a letter; எழுத்தொலி. (பிங்.)
  5. Fame, reputation; புகழ். உரைசால் பத்தினிக்கு (சிலப். பதி. 56)
  6. Sacred writings, holy writ; ஆகமப்பிரமாணம். (சி. சி. அளவை, 1.)
  7. Roar, loud noise; முழக்கம். குன்றங் குமுறியவுரை (பரிபா. 8, 35)
  8. Mantra recited aloud; பிறருக்குக் கேட்கும்படி செபிக்கும் வாசக செபம். (சைவச. பொது. 151.)