முட்டு

விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை குறைவு உட்சென்று கடத்தலருமை

to butt, bump, collide, dash against, hit against to touch to oppose, hinder

Tamil Wiktionary

முட்டு
  1. விலங்கு முதலியன கொம்பு முதலியவற்றால் தாக்குகை
  2. தடை
  3. குறைவு
  4. உட்சென்று கடத்தலருமை
  5. கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள் ( திருஞான. 692.)
  6. மாதவிடாய்
  7. கருவி
  8. சில்லறைப் பொருள்கள்
  9. பற்றுக்கோடு
  10. முழங்கால் முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து
  11. மேடு
  12. குவியல்
  13. தப்பி ஓடு
  14. நழுவு - இது கோவை
  15. திருப்பூர்
  16. ஈரோடு போன்ற கொங்கு மாவட்டங்க்ளில் பயன்பாட்டில் உள்ளது (எ.கா. "ஆட்டுக் குட்டி அடைத்து வைத்திருந்த குடாப்பிலிருந்து முட்டிக்கொண்டு ஓடுகிறது". (The baby goat is on the run after escaping from the coop.))
  17. உரசு
  18. தொடு - butt

Winslow (1862)

முட்டு (muṭṭu) — noun
  1. Want, difficulty, straits, extremity, இடுக்கண்
  2. Battering; butting of a beast, முட்டுகை
  3. A prop, a support, தாங்கல்
  4. Utensil, as தட்டுமுட்டு
  5. A blockade, an impediment, அடைப்பு
  6. [in combin.] A musical instrument, as நட்டுமுட்டு
  7. A bridle, கடிவாளம்
  8. The knee, முழங்கால்
  9. The menses of women, தொடக்கு
  10. (R.) Rising ground, மேடு. முட்டுற்றபோழ்தின். In the time of adversity. (நாலடி.) ஏனக்குவெகுமுட்டாயிருக்கிறது. I am in great straits (for money)
  • முட்டாட்டம் — Stupidity, முட்டாள்தன்மை. 2. Pertinacity, or conceit arising from ignorance. (Beschi.) 3. (R.) Butting. முட்டாட்டமாடுகிறான். He is very pertinacious.
  • முட்டுக்கட்ட — To place a prop. 2. To blockade, shut up a place or an entrance, shut or beset the avenues of a town, வழியடைக்க. 3. [prov.] To form ridges in a field, to limit or confine within bounds, ஏல்லைகட்ட. 4. To form a pile of earth for plants that the water may not injure them.
  • முட்டுக்கட்டியாட — To go on stilts.
  • முட்டுக்கட்டை — A block or stake as a prop or support.
  • முட்டுக்காய்த்தேங்காய் — A premature cocoa-nut, இளந்தேங்காய்.
  • முட்டுக்கால் — A supporter, pedestal or beam to support an old wall or an inclined tree. 2. As முட்டிக்கால்.
முட்டு (muṭṭu) — infinitive
  1. , கிறேன், முட்டினேன், வேன், முட்ட, v. a. To thrust against, to butt, தாக்க
  2. To oppose, to hinder, தடுக்க
  3. To assault, to attack, ஏதிர்க்க
  4. v. n. To be in want, straits or difficulty, குறைவுற. (c.) பிள்ளையைமாடுமுட்டிப்போட்டது. The ox pushed the child (with its horns). அன்னமுட்டினாலெல்லாமுட்டும். If rice be deficient, all things will be wanting
  • முட்டம் — We shall not want. (p.)
  • முட்டிக்கேட்க — To beg, being in want.
  • முட்டிக்கொள்ள — To hit the head against something.
  • முட்டை — . You will not want.

Fabricius (1972)

முட்டு — noun
  1. want, difficulty, straits, இடுக் கண்
  2. a blockade, அடைப்பு
  3. butting against, a dash of the fore- head against something
  4. a prop, a support a stay, உதைக்கால்
  5. vessel, utensil, தட்டுமுட்டு
  6. the knee, முழங்கால்
  7. a rising ground, a hillock, மேடு
  8. menses. தொடக்கு
  9. a musical instrument, நட்டுமுட்டு
  10. horse's bridle, கடிவாளம்
  • எனக்கு வெகு முட்டாயிருக்கிறது — I am in great want.
  • முட்டு வாங்கிப்போயிற்று — the blockade has ceared.
  • முட்டற்றது — a thing that has no support.
  • முட்டற்றவன் — a person of no account.
  • முட்டாட்டம் — stupidity, pertinacity arising from ignorance.
  • முட்டாள்–முட்டன் — a stupid person.
முட்டு — v. t.
  1. v. t. butt, dash against, தாக்கு
  2. assault, attack, எதிர்
  3. hinder, oppose, தடு; v. i. be in want, need, குறைவுறு
  • அன்னமுட்டினால் எல்லாம் முட்டும் — if rice is deficient, everything is wanting.
  • முட்டம் — we shall not want.
  • முட்டிற்று–முட்டிப்போயிற்று — all the necessaries are wanting.
  • முட்டிக்கொள்ள — to hit the head against something.
  • முட்டுதல் — butting want.
  • முட்டுதலாயிருக்க — to be in great want.

Tamil Moli Akarathi (1928)

முட்டு (muṭṭu)
  1. அடைப்பு, அரண்வளைதல், இ லம்பாடு, கடிவாளம், குறைவு, த டை, தளபாடம், நெருக்கம், பூப் பம், முட்டுதல், முட்டென்னேவல், முழந்தாள், மேடு, வருத்தம்
முட்டு (muṭṭu)
  1. கடிவாளம், குறைவு முட்டென் னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முட்டு² (muṭṭu) — noun
  1. Battering, butting; விலங்கு முதலியன கொம்புமுதலியவற்றால் தாக்குகை
  2. Hindrance, obstacle, impediment; தடை. முட்டுவயிற் கழறல் (தொல். பொ. 271). பன் முட்டின்றாற் றோழி நங்கள வே (அகநா. 122)
  3. See முட்டுப்பாடு, 1
  4. 4. Shortness, deficiency; குறைவு. மூவேழ் துறையு முட்டின்று போகிய (புறநா. 166)
  5. Difficulty, as in passing; உட்சென்று கடத்தலருமை. முட்டுடை முடுக்கரும் (சீவக. 1216)
  6. Pollution; கண்டு முட்டுக் கேட்டுமுட்டு முதலிய தீட்டுக்கள். (பெரியபு. திருஞான. 692.)
  7. Menses; மாதவிடாய். (W.)
  8. Tool, instrument; கருவி. கொற்றரு மிருப்பு முட்டு (திருவாலவா. 45, 8)
  9. Sundry things; சில்லறைப் பொருள்கள். கட்டினேம் முட்டுக்களை (புறநா. 206, உரை)
  10. Prop, support; பற்றுக்கோடு
  11. Knee; elbow; knuckle; முழங்கால் முழங்கை விரல்கள் இவற்றின் பொருத்து
  12. Rising ground, high ground; மேடு. (W.)
  13. Heap; குவியல். பண்டங்கள் முட்டு முட்டாய்க் கிடக் கின்றன

IndoWordNet

முட்டு — noun
  1. ஒன்று விழாமல் தாங்கும் அல்லது நகராமல் தடுக்கும் கட்டை முதலியவை

ஆதாரம் கலைப்பொருள்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முட்டு
  1. விலங்கு முதலியன கொம்பு முதலிய வற்றால் தாக்குகை
  2. தடை
  3. தட்டுப்பாடு
  4. சங்கடம்
  5. குறைவு
  6. உட்சென்று கடத்தலருமை
  7. கண்டுமுட்டுக் கேட்டுமுட்டு முதலிய தட்டுகள்
  8. மாதவிடாய்
  9. கருவி
  10. சில்லறைப் பொருள்கள்
  11. பற்றுக்கோடு
  12. முழங்கால், முழங்கை, விரல்கள் இவற்றின் பொருத்து
  13. மேடு
  14. குவியல்
  15. உடல் முதலியவற்றின் பொருத்து
  16. சந்திப்பு
  17. குதிரைக் கடிவாளம்
  18. கோள்
  19. கட்டு! கட்டப்பட்டது
  20. தையல்
  21. மனவெழுச்சி
  22. மூடு கின்ற பொருள்
  23. மூடியிருப்பது