மேற்கோள்

வேறொருவர் கூறியதைக் கூறப்பட்ட வடிவத்திலேயே எடுத்துக்காட்டுவது. - * quotation, quote; citation; reference க்ரியாவின் தமிழ்மொழிக் களஞ்சியம்

citation, quotation, textual authority

Tamil Wiktionary

மேற்கோள் — பெயர்ச்சொல் (Noun)
  1. வேறொருவர் கூறியதைக் கூறப்பட்ட வடிவத்திலேயே எடுத்துக்காட்டுவது.

Tamil Moli Akarathi (1928)

மேற்கோள் (mēṟkōḷ)
  1. உதாரணம்-உதாகரணம்- பழஞ்சூத்திரம்-ஏடுத்துக்காட்டு-ஆசி ரிபவசனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேற்கோள்¹ (mēṟkōḷ) — noun
  1. Acceptance; ஏற்றுக்கொள்கை
  2. Quotation; textual authority; எடுத்துக்காட்டு. (நன். 9.)
  3. Cover; mantle; போர்வை. (W.)
  4. Assumption of responsibility; பொறுப்புவகிக்கை. இடஞ் சிறிதென்னும் மேற்கோள் செலுத்த (புறநா. 8, உரை)
  5. Enterprising spirit; enthusiasm; ஊக்கம்
  6. Solemn asseveration; வஞ்சினம். (சிலப். பதி. 80, உரை.)
  7. (Log.) Proposition stated; பிரதிஞ்ஞை. (தருக்கசங். பக். 34.)
  8. Excellence; மேன்மை. (சது.)
மேற்கோள்² (mēṟ-kōḷ) — noun
  1. The planet Saturn; சனி. (பிங்.)
மேற்கோள் (mēṟ-kōḷ) — noun
  1. Set purpose; உறுதிப்பாடான நோக்கம். ஒழியாமலுல குய்யக் கொள்வனென்னு மேற்கோளுடையான் (நீல கேசி, 188, உரை).

IndoWordNet

மேற்கோள் — noun
  1. ஒருவர் தன் பேச்சிலோ எழுத்திலோ பொருத்தம் கருதி மற்றவருடைய கவிதை, கட்டுரை போன்றவற்றிலிருந்து மாற்றம் செய்யாமல் அப்படியே எடுத்துக் காட்டும் ஒரு சிறு பகுதி.

கட்டுரை