வகை

ஒரே இயல்பான ஆனால் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட, ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் அதன் வகை எனப்படும். வெதம்; விதம், மாதிரி, வகை வகையாக, வகைமை 1)kind, 2)sort, 3)type, 4)manner, 5)way, 6)method, 7)division, 8)portion.

division, branch, section type, kind, class, sort, category manner, way, method

Tamil Wiktionary

வகை — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒரே இயல்பான ஆனால் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட, ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் அதன் வகை எனப்படும்.
  2. வெதம்; விதம், மாதிரி, வகை வகையாக, வகைமை

[object Object]

வகு வகைப்பாடு வகைப்படுத்து

Winslow (1862)

வகை (vakai) — noun
  1. Kind, sort
  2. Manner, way, method, முறை
  3. Means, உபாயம்
  4. Class, assortment, தரம்
  5. Division, branches, ramifications of a subject, கூறுபாடு
  6. A part, or portion, வகுப்பு
  7. [in arith] parts of the தொகை or sum total in addition
  8. (Beschi.) Goods, property, means, வழி வகை
  9. The principal stock in trade, முதல். ஏனக்கொருவகையாயிருக்கிறது. I am in a sort of way; i. e. I am unwell. அவனுக்குவகையுண்டு. He has property. வகைதேடுதல். Seeking means
  • வகைதொகையறியாதவன் — A dunce–one who knows not the whole from its parts.
  • வகைப்படுதல் — Being classified, assorted, settled. அறுவகைபட்டகாரியம். That is settled business.
  • வகையகத்திணை — Amplification. See அகப்பாட்டுறுப்பு.
  • வகையறுத்தல் — Discerning, distinguishing mentally. 2. Deciphering. unraveling.
  • வகையுளி — A fault in versification, when the first half of a word is to be scanned as a part of the first, and the other, as a part of the second foot–as கடுகைத்துளைத்தேழ்கடலைப்புகட்டிக்குறுகத்தறித்தகுறள்.

Fabricius (1972)

வகை — i. e.
  1. , sort, இனம்
  2. manner, way, விதம்; means, உபாயம்
  3. part, portion, division, வகுப்பு
  4. property, means, வழிவகை
  5. the principal stock in trade, முதல்
  • எந்த வகையாய் — how, in what manner?
  • எனக்கு ஒருவகையாயிருக்கிறது — I am in a sort of way I am unwell.
  • பலவகையான சரக்கு–வகைவகையான — a variety of goods.
  • வகைதொகை யறியாதவன் — a dunce, one who does not know the whole from its parts.
  • வகை பார்க்க–தேட — to seek for an occasion or opportunity.
  • நீங்கிப்போக வகை பார்க்க — to endeavour, to come off.

Tamil Moli Akarathi (1928)

வகை (vakai)
  1. வகுப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வகை¹ (vakai) — noun
  1. Division, branch, section; கூறு பாடு. அவ்வகை யொன்பதும் வினை யெஞ்சு கிளவி (தொல். சொல். 146)
  2. Caste; சாதியினம். (G. Tn. D. I, 145.)
  3. Kind, class, sort; இனம். இது எவ்வகையைச் சேர்ந்தது?
  4. Manner, method; முறை. பாயினார் மாயும்வகையால் (பு. வெ. 5, 2)
  5. Ways, means; உபாயம். மாயும் வகையறியேன் (திவ். திருவாய். 5, 4, 4)
  6. Cause; காரணம். (நாமதீப. 640.)
  7. Artfulness; தந்திரம். வகையால் மதி யாது மண்கொண்டாய் (திவ். இயற். நான்முகன். 25)
  8. Skill, ability; வலிமை. வகைகொண்டு வந்தேன் (கம்பரா. பாசப். 36)
  9. Nature, quality; தன்மை. வளமங்கையர் வகையுரைத்தன்று (பு. வெ. 9, 50, கொளு)
  10. Goods; property; means of livelihood; சீவனத்துக்குரிய பொருள் முதலியன. (W.)
  11. The principal stock in trade; வியாபாரமுதல். (W.)
  12. Place; இடம். (பிங்.)
  13. Limb; உறுப்பு. வகைநல முடைய காளை (சீவக. 695)
  14. Short or narrow street; குறுந்தெரு. மூதூ ரிட வகை யெல்லை யெல்லாம் (சீவக. 462)
  15. Apartments of a house; மனையின் பகுப்பு. வகைமா ணல்லில் (புறநா. 398)
  16. Details; விவரம். Loc
  17. (Arith.) Parts of the sum total in addition; கூட்டப்படும் எண்கள். (W.)

IndoWordNet

வகை — noun
  1. ஒரு பொருளை செய்வதற்கு முன் அது இப்படித்தான் இருக்கும் என்று காட்டும் ஒத்த வடிவம்

மாதிரி ரகம் தினுசு பின்பற்றுதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வகை
  1. கூறுபாடு
  2. சாதியினம்
  3. இனம்
  4. முறை
  5. வழி
  6. காரணம்
  7. தந்திரம்
  8. வலிமை
  9. தன்மை