வலம்

வலப் பக்கம் வெற்றி சுற்றுதல்

right side strength, power triumph, victory

Tamil Wiktionary

வலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வலப் பக்கம்
  2. வெற்றி
  3. வலிமை
  4. சுற்றுதல்
  5. படைத்துறையில் ஒரு பிரிவு

[object Object]

வலப்புறம் ஊர்வலம் நகர்வலம் மலைவலம் கிரிவலம் சாலை roadshow

Winslow (1862)

வலம் (valam) — noun
  1. [adjectively, வல.] The side, இடம்
  2. The upper side, over, or upon, மேல்
  3. The right hand or dexter side, as வலக்கை, வலப்பக்கம், &c
  4. A form of the seventh case, or local ablative, ஏழனுருபு. கைவலத்தியாழ்வரைநின்றது. A lute was in his hand. (p.)
  • வலக்கை — The right-hand. வலக்கைகொடுக்கிறது.To pledge, giving the right-hand.
  • வலங்கமத்தார்–வலங்குலத்தார் — [prop. வலங்கையுற்றார்.] An honorific appellation of Pariahs.
  • வலங்கை — The right-hand, as வலக்கை. 2. The right-hand class.
  • வலங்கையான் — [pl. வலங்கையார், sometimes வலங்கையுற்றான்.] One of the right-hand class.
  • வலசாரி — Turning, wheeling to the right-as in dancing, amp;c.
  • வலஞ்சுழி — A curl to the right; a curl of hair on a horse's forehead to the right, as a good mark. திருவலஞ்சுழி. The name of a town on the Kâvery, from a whirlpool in the river; the subject of a legend.
வலம் (valam) — noun
  1. Power, potency, as பலம்
  2. Victory, triumph, ascendency, வெற்றி
  3. An army, a force, சேனை. W. p. 741. VALA
  • வலக்காரம் — Might, power, authority. வலக்காரம்பேசுகிறான். He speaks ostentatiously.
  • வலது — That which is strong. அதுஏன்வலதல்ல. It is not in my power.
  • வலவந்தம் — [vul. வலவந்தரம், வலற்காரம்.] compulsion–as பலபந்தம்.
  • வலவந்தன் — A powerful man.
  • வலவன் — A capable man, சமர்த்தன். 2. A charioteer, தேர்ப்பாகன். 3. A conqueror, வெற்றியாளன். 4. Vishnu, விஷ்ணு.
  • வலவை — As இடாகினி. 2. An epithet of Kali, காளி. 3. A strong woman. வல்லவள். 4. A strong man, வல்லவன். 5. A female attendant, especially on Cali, காளியேவற்பெண். (சது.)

Fabricius (1972)

வலம் — noun
  1. the right side
  2. adj. right, வல
  3. vulg. for மலம்
  • வலக்கை வலதுகை — the right hand.
  • வலங்கமத்தார்–வலங்குலத்தார்–வலங் கையுற்றார் — an honourable appella tion for Pariahs.
  • வலங்கை — the right hand, the right hand class.
  • வலங்கை — those of the right hand class.
  • வலசாரி — turning or wheeling to the right.
  • வலஞ்சுழி — a curl to the right, a curl of hair on the right side of the horse's forehead.
வலம் — noun
  1. பலம், s. power
  2. victory, triumph, வெற்றி
  3. an army, a force, சேனை
  • வலக்காரம் — power, might.
  • வலக்காரம்பேச — to speak ostentatiously.
  • வலது — what is strong.
  • வலதாய்ப்பேச — to speak ostentatiously, to boast.
  • வலவந்தம்–வலவந்தரம்–வலற்காரம்–பலவந்தம் — compulsion, .
  • வலவந்தம் பண்ண — to force.

Tamil Moli Akarathi (1928)

வலம் (valam)
  1. இடம், ஏழனுருபு (உ-ம்) கை வலத்தியாழ், கனம், சேனை, மேல், வலப்பக்கம், வலி, வெற்றி
வலம் (valam)
  1. இடம், ஏழனுருபு, (உ-ம்.காழ்வ ரை, நில்லாக்களிறன்றான் கைவலத் தியாழ்வரைநின்றது,) மேல், வலப்ப க்கம், வலி, வெற்றி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வலம்¹ (valam)
  1. , < bala. n
  2. Army; சேனை. (W.)
  3. Strength, power; வலி. வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த (புறநா. 24)
  4. Victory, triumph; வெற்றி. வலந்தரிய வேந்திய வாள் (பு. வெ. 9, 35)
  5. Command, authority; ஆணை. நின்வலத்தினதே (பரிபா. 5, 21)
  6. Right side; வலப்பக்கம். இடம்வல மேழ்பூண்ட விரவித்தேர் (திவ். இயற். 3, 73)
  7. Circumambulation from left to right; பிரதட்சிணம். மாலிருஞ்சோலை வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே (திவ். திருவாய். 2, 10, 8)
  8. Weight; கனம். (அக. நி.)
  9. High place or locality; மேலிடம். (திவா.)
  10. Place; இடம். (மலைபடு. 549, உரை.) (சூடா.) — part. Sign of the locative; ஏழனுருபு. கைவலத்தியாழ் வரை நின்றது (நன். 302, உரை)
வலம்² (valam) — noun
  1. Faeces; பவ்வீ.
வலம் (valam) — noun
  1. perh. vara. That which is excellent; சிரேஷ்டம். வணக்கொடு மாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வலம்
  1. வெற்றி
  2. வலிமை
  3. படை
  4. ஆணை
  5. வலப் பக்கம்
  6. வலமாகச் சுற்றிவருதல்
  7. மேலிடம்
  8. ஏழனுருபு
  9. பவ்வீ
  10. உயர்வு