விழுது
paste
Winslow (1862)
விழுது (viḻutu) — noun
- The root falling down from the branches of the banyan and some other trees, ஆலம்விழுதுமுதலியன
- A weaver's harness, விழுதுநூல்
- The lead of the mariner for sounding; [ex விழு, v.]
- (R.) Fat, நிணம்
- Butter, வெண்ணெய். தன்னினத் தாரைவிழுதுபோற்றாங்குவதுபெரியோர் கடன். Great men should maintain their relations as the banyan its descending roots
- விழுதுவிட–விழுதுவிட்டுப்பார்க்க — To take soundings, to cast or heave the lead.
- விழுதூன்ற — To send down roots, as the banyan.
Fabricius (1972)
விழுது — noun
- roots that grow downwards from the branches of certain trees
- weaver's harness, விழுதுநூல்
- the lead of mariners for sounding
- fat, நிணம்
- butter, வெண்ணெய்; விழுது விழுகிறது, there comes a root down
- விழுதூன்ற — to send down roots (as the banyan tree).
Tamil Moli Akarathi (1928)
விழுது (viḻutu)
- ஆலமரமுதலியவற்றின் வீழ், ஆழம்பார்ப்பதற்கானகயிறு, நெய்வா ரகருவியினொன்று, வெண்ணெய்
விழுது (viḻutu)
- ஆலமரமுதலியவற்றின்விழுது, விழுதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விழுது (viḻutu) — noun
- Aerial root, as of the banyan; ஆலமரம் முதலியவற்றின் கிளைகளினின்று இறங்கும் வேர்த்தொகுதி. (பெரும்பாண். 357, உரை.)
- Lock of hair; தலைமயிர்ச் சடையின் ஒருகால். Loc
- (Weav.) Heddles; நெசவுக்கருவி யுறுப்புள் ஒன்று
- Lead for sounding; ஆழமளக்குங் கருவி. Naut
- Ghee in congealed state; இறுகிக் கட்டியான நெய்
- Butter; வெண்ணெய். ஆய்ச்சி விழுதுண்ட வாயானை (திவ். இயற். 3, 25)
- Fat; நிணம். (W.)
- Paste, pulpy mass; நீர் விட்டரைத்துத் திரட்டியது. இந்த உழுந்து தோசைக் கரைத்தால் விழுது காணுமா?
IndoWordNet
விழுது — noun
- ஆலமரம் போன்ற மரங்களின் கிளைகளிலிருந்து வளர்ந்து கீழ் நோக்கி தொங்குவதும் பூமியில் புதைந்து புதிய மரமாக முளைக்கக் கூடியதுமான தடித்த வேர்.
வேர்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விழுது
- ஆலமரம் முதலியவற்றின் களைகளி னின்று இறங்கும் வேர்த்தொகுதி
- தலை மயிர்ச் சடையின் ஒரு கால்
- இறுகிக் கட்டின நெய்
- வெண்ணெய்
- கொழுப்பு
- நீர்விட்டு அரைத்துத் திரட்டியது