வேர்

மண்ணிற்கு கீழுள்ள தாவரத்தின் (நிலைத்திணையின்) பகுதி வேர் எனப்படுகிறது. செடிகொடிகளுக்கு வேண்டிய ஊட்டப்பொருள்களை மண்ணில் இருந்து பெறும் முக்கிய பகுதி. ஆலமரம் போன்ற சில மரங்களிலும், சில கொடிகளிலும் வேர் மண்ணுக்கு மேலாகாவோ (இதனை விழுது என்பர்), பிற செடிகொடிகளைப் பற்றியோ இருக்கவும் கூடும். : root ( ரூட்*)

root anything rootlike root, foundation

Tamil Wiktionary

வேர் — பெயர்ச்சொல் (Noun)
  1. மண்ணிற்கு கீழுள்ள தாவரத்தின் (நிலைத்திணையின்) பகுதி வேர் எனப்படுகிறது. செடிகொடிகளுக்கு வேண்டிய ஊட்டப்பொருள்களை மண்ணில் இருந்து பெறும் முக்கிய பகுதி.
  2. ஆலமரம் போன்ற சில மரங்களிலும், சில கொடிகளிலும் வேர் மண்ணுக்கு மேலாகாவோ (இதனை விழுது என்பர்), பிற செடிகொடிகளைப் பற்றியோ இருக்கவும் கூடும்.

[object Object], [object Object], [object Object]

Winslow (1862)

வேர் (vēr) — noun
  1. The root of a tree or plants, மூலம்
  2. [fig.] Foundation, or cause, காரணம். (c.)
  3. Sweat, as வேர்வை
  4. Anger, கோபம். (p.) இவனிதுக்குவேர். He is the cause of this
  • ஆணிவேர் — The tap-root. See ஆணி.
  • பக்கவேர் — The side-root.
  • வேரிறங்க–வேர்தரிக்க — To strike root.
  • வேரூன்ற–வேர்பற்ற–வேர்க்கொள்ள — To take root.
  • வேரோட — To run out as roots. இலுப்பைமரம்வெகுதூரமாய்வேரோடும். The இலுப்பை tree extends its roots very far.
  • வேர்க்கடலை — Ground-nut of the West Indies. See கடலை.
வேர் (vēr) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To perspire, to sweat, as வியர்க்க. (c.)
  2. To be angry, to be indignant, கோபிக்க, ஏனக்குவேர்க்கிறது. I perspire
  • வேர்த்துவடிய — To be distilled, as liquors.
  • வேர்ப்பார் — Those who are angry. (p.)
  • வேர்ப்பு — Sweat, as வேர்வை. 2. Anger, கோபம்.
  • வேர்வை — . Sweat, perspiration.

Fabricius (1972)

வேர் — noun
  1. the root of a tree or plant, மூலம்
  2. foundation, cause, காரணம்
  3. sweat, வேர்வை
  4. anger, கோபம்
  • வேரிலே பிடிக்க — to lay hold of the original cause of a thing.
  • வேரோடு பிடுங்க — to take out with the root.
  • வேர் களைந்தது — it was rooted out.
  • வேர்க் கடலை — groundnut of the West Indies.
  • வேர்க்குச்சு — a weaver's brush made of grass-roots.
  • வேர்க்குரு — prickly heat, desudation.
வேர் — v. i.
  1. v. i. sweat, perspire, வியர்
  2. be sngry, கோபி
  • எனக்கு வேர்க்கிறது — I perspire.
  • வேர்வை–வேர்ப்பு — sweat, perspiration.
  • குறு வேர்வை — a slight perspiration.

Tamil Moli Akarathi (1928)

வேர் (vēr)
  1. காரணம், கோபம், திப்பிலிமூலம், மூலம், வேரென்னேவல், வேர்வை
வேர் (vēr)
  1. சடை, சிவை, தூர், மூலம்
வேர் (vēr)
  1. மூலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேர்¹ (vēr) — noun
  1. Root; மரஞ் செடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்து அவை உணவேற்க வுதவுவதான அடிப்பகுதி. (சூடா.)
  2. Black cuscuss grass. See குறுவேர்¹. வேர்சூடு மவர்கள் மண்பற்றுக் கழற்றா தாப்போலே (ஶ்ரீ ரீவசன. 169)
  3. Root of long pepper; திப்பலிவேர். (தைலவ.)
  4. Anything root-like; வேர்போன்றது. அலகை யன்ன வெள்வேர்ப் பீலிக் கலவ மஞ்ஞை (மலைபடு, 234)
  5. Foundation; அடிப்படை
  6. Cause; காரணம். வேரறு . . . வடிவாகி (ஞானவா. வைராக். 76)
வேர்³ (vēr) — noun
  1. < வேர்-
  2. Perspiration; வேர்வை. வேரொடு நனைந்து (பொருந. 80)
  3. Anger; கோபம். (W.)
வேர் (vēr) — noun
  1. cf. வேரல். Bamboo; மூங்கில். வேர் என்று மூங்கிலுக்குப் பேராய் (திவ். பெரியாழ். 2, 6, 1, வ்யா. பக். 360).

IndoWordNet

வேர் — noun
  1. சத்தையும் நீரையும் பெரும் பொருட்டு அடிபாகத்திலிருந்து மண்ணிற்குள் செல்லும் தாவரத்தின் ஒரு பாகம்.
வேர் — noun
  1. மரங்களின் வேரிலிருந்து வெளியேறும் மெல்லிய நூல்
வேர் — noun
  1. மருந்தாக பயன்படும் தாவரத்தின் ஒரு வேர்
வேர் — noun
  1. வினைச் சொற்களின் மூல உறுப்பு

தாவரப் பகுதி தாவர பாகம் முடிச்சுகளுள்ள வேர் முடிச்சுகளிருக்கும் வேர் முடிச்சுகளிருக்கக்கூடிய வேர் வெட்டிவேர் கரும்பு வேர் தாமரை வேர் அதிமதுரம் கிழங்கு விழுது பீப்ராமூல் மமீரா நாகர்மேதா இஞ்சி சோட்டா - சாந்த் சாண்டி அஜதந்தி மூலம் கலைப்பொருள்கள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேர்
  1. மரஞ்செடி கொடிகளை மண்ணின்மேல் நிலைநிற்கச் செய்வதும் அவை உணவேற்க உதவுவதுமான அடிப்பகுதி
  2. மரவேர்
  3. மூங்கில்
  4. திப்பிலிவேர்
  5. வேர்போன்றது
  6. அடிப்படை
  7. காரணம்
  8. வியர்வை
  9. சினம்