வேலி

- நமது நிலத்திற்கு, மிகவும் தேவை. - என்பது, பெயர்ச்சொல் என்ற சொல் வகையினைச் சார்ந்ததாகும். ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

fence, hedge wall custody, guard, watch

Tamil Wiktionary

வேலி — பெயர்ச்சொல் (Noun)

[object Object]

Winslow (1862)

வேலி (vēli) — noun
  1. A hedge or wall, மதில். (c.)
  2. Custody, watch, காவல்
  3. A particular measure of ground of five காணி or about five acres, நிலத்தளவையினொன்று. (Tanjore usage.)
  4. A village; also an affix to the name of some villages, ஊர்
  • வேலிக்கால் — Stakes in hedging.
  • வேலிப்பருத்தி — Hedge-cotton, Hairy flowered cynanchum. See உத்தமதாளி.
  • வேலிப்பாகல் — See கொல்லம்பாகல்.
  • வேலிமூங்கில் — A plant, Justicia Betonica.
  • வேலியடைக்க–வேலிபோட — To set a hedge.

Fabricius (1972)

வேலி — noun
  1. a hedge, a fence, a wall, மதில்
  2. custody, watch, காவல்
  3. land measure of five காணி or about six acres
  4. an affix to some proper names of villages, ஊர்
  • வேலிப் பருத்தி — a medicinal plant, .
  • வேலிக்கு முள்ளிட — to set thorns in a hedge.
  • வேலி மூங்கில் — a plant used for hedges, .
  • வேலியடைக்க–போட — to hedge in, to fence in.

Tamil Moli Akarathi (1928)

வேலி (vēli)
  1. ஊர், ஐந்துகாணிநிலம், காவல், நிலத்தளவையினொன்று
வேலி (vēli)
  1. இளை, கானல்
வேலி (vēli)
  1. ஊர், ஓரளவைநிலம், காவல், மதில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேலி (vēli) — noun
  1. [T. vēlugu, K. bēli, M. vēli.] Hedge, fence; முள் கழி முதலியவற்றா லான அரண். வேரல்வேலி வேர்க்கோட் பலவின் (குறுந். 18.)
  2. Wall; மதில். (பிங்.)
  3. Custody, watch, guard; காவல். (பிங்.) நிறைநாண் வேலி நீங்கி (கல்லா. 87, 3)
  4. Land; நிலம். (பிங்.) சாலிவேலியுந் தழீஇய வைப்பும் (கம்பரா. நாட்டுப். 12)
  5. Field; வயல். (பிங்.)
  6. Land measure6.74 acres; ஒரு நிலஅளவு. (G. Tj. D. I, 135.)
  7. Cowshed; பசுக்கொட்டில். (பிங்.)
  8. Village; ஊர். (பிங்.) பன்னிரு வேலிகொண் டருளுஞ் செய்கைகண்டு (தேவா. 176, 2)
  9. See வேலிப்பருத்தி. (மூ. அ.)
  10. Red-flowered silk cotton tree. See முள்ளிலவு. வேலியங் குறுஞ்சூல் விளை காய்ப் பஞ்சினம் (கல்லா. 87)
  11. Sound; ஓசை. (அரு. நி.)
  12. cf. வளி¹. Wind; காற்று. (அரு. நி.)

IndoWordNet

வேலி — noun
  1. ஒரு பகுதியின் எல்லையில் பாதுகாப்பு கருதி முள், கம்பி போன்றவற்றால் எழுப்பப்படும் அமைப்பு.

கலைப்பொருள்கள் வரப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வேலி
  1. விலங்குகள் பயிரை அழிக்காதபடி முள் முதலியவற்றால் அமைக்கும் பாதுகாப்பு! மதில்
  2. காவல்
  3. நிலம்
  4. வயல்
  5. ஒரு நிலஅளவை
  6. பசுக்கொட்டில்
  7. ஊர்
  8. காண்க: முள்ளிலவு
  9. ஓசை
  10. காற்று
  11. கொடிவகை