இரும்பு
பூமியில் அதிக அளவில் கிடைக்கும், உலோகங்களுள் ஒன்று ஆகும். கடுமையான உலோகங்களில் ஒன்று இரும்பு ஆகும். iron - (ஆங்)
iron ore instrument, weapon
Winslow (1862)
இரும்பு (irumpu) — noun
- (adj. இருப்பு.) Iron, கரும்பொன்
- (p.) Instruments in general, ஆயுதப்பொது
- இருப்பாணி–இரும்பாணி — An iron nail.
- இருப்பாயுதம் — Weapons or implements made or iron.
- இருப்புக்கச்சை — An iron girdle worn by warriors.
- இருப்புக்கட்டி — A lump of iron.
- இருப்புக்கட்டை — The shank of a key.
- இருப்புக்கிட்டம்–இருப்புச்சிட்டம் — Scoria of iron, oxydized iron.
Fabricius (1972)
இரும்பு — noun
- (in comp. இருப்பு), iron
- instrument, weapon, ஆயுதம்
- இருப்பாணி–இரும்பாணி — an iron nail.
- இருப்புக்கட்டை — the shank of a key.
- இருப்புக்கிட்டம் — scoria of iron, iron dross.
- இருப்புச்சலாகை — a bar of iron, surgeon's probe, spit. ramrod of a gun.
- இருப்புச்சீரா — ; iron coat of mail.
- இருப்புத்தகடு — a plate of iron.
Tamil Moli Akarathi (1928)
இரும்பு (irumpu)
- ஆயுதப்பொது சத்தலோகத் தொன்று
- அஃது கரும்பொன்
இரும்பு (irumpu)
- அகி, அயம், அயில், கருங்கோல் கருந்தாது, கரும்பொன்
இரும்பு (irumpu)
- ஆயுதப்பொது, கரும்பொன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
இரும்பு (irumpu) — noun
- cf. செம்பு for செம்மை. [T. inumu, M. irumbu.]
- Iron, literally, the black metal; கரும்பொன். (தேவா. 209, 3.)
- Instrument, weapon: ஆயுதம். இரும்பு மேல் விடாது நிற்பார் (சீவக. 782)
இரும்பு (irumpu) — noun
- Gold; பொன். (அக. நி.)
- Red species of Malabar Glory-lily; செங்காந்தள். (L.)