உரம்

வலிமை, திண்மை, திடம் ஊக்கம் நிலம் செழுமை பெற இடப்படும் பொருள்

fertilizer, manure strength hardness, compactness

Tamil Wiktionary

உரம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வலிமை
  2. திண்மை
  3. திடம்
  4. ஊக்கம்
  5. நிலம் செழுமை பெற இடப்படும் பொருள்
  6. எரி

[object Object]

Winslow (1862)

உரம் (uram) — noun
  1. Strength, firmness, hardness, compactness, coarseness, aspiration, force of voice, expression, meaning, &c., வலி
  2. Energy, spirit, exertion, determination, resolution, fortitude, firmness of mind, ஊக்கம்
  3. (p.) The breast, chest, மார்பு
  4. Wisdom, knowledge, spiritual knowledge, ஞானம்
  5. Velocity, force, missile or projectile force, வேகம்
  6. The solid part of timber, வயிரம்
  7. Hardness, induration, obduracy, திண்மை
  8. A surrounding wall, மதில். கடலுரமாயிருக்கிறது. The sea is high, rough. காற்றுரமாயிருக்கிறது. The wind is high, boisterous
  • உரகடல்–உரசமுத்திரம் — A boisterous sea, a sea generally rough.
  • உரங்குத்த — To pound and harden the earth around trees newly set, பலமுறச்செய்ய.
  • உரங்கொள்ள — To thrive, grow strong–as the wind; to get strength, become boisterous–as the sea, பலங்கொள்ள. 2. To exert strength, &c., வலியுண்டாக. 3. To be hardened, indurated, obdurate, கடினமுற. உரங்கொண்டெறிந்து. Throwing with force. காய்ச்சலுரங்கொண்டுகாய்கின்றது. The fever rages and burns.
  • உரஞ்செய்ய — To exert influence, take effect, produce, effect–as arguments, பலஞ்செய்ய. 2. To grow strong, வலியுற. 3. To thrive–as vegetables, &c., பலப்பட. அவரெடுத்தகாரியங்களிலொன்றுமுரஞ்செய்யவில்லை. He has been successful in nothing that he has undertaken.
  • உரஞ்சொல்ல — To animate, to encourage.
  • உரமண் — Hard, ungenial soil.

Fabricius (1972)

உரம் — noun
  1. chest, breast, bosom, மார்பு
  2. wisdom, spiritual knowledge, ஞானம்
  3. van of an army, படை முன்னணி
  4. infantile sprain
  • உரகம்–உரங்கம்–உரகதம்–உரங்கமம் — a snake which moves on its breast.
  • உரகன்–ஆதிசேடன்–உரகாதிபன்–உரகேந்திரன் — Adisesha, , (also , ).
  • உரகாரி — Garuda. the destroyer of snakes.
  • உரகர்–நாகர் — the Nagas, a class of demigods, .
உரம் — noun
  1. strength, firmness, hardness, force of voice, வலி
  2. resolution, firmness of mind, மனோவலி, திடம்
  3. manure, எரு
  • உரமாய்ப்பெய்கிறது — it rains hard.
  • கடல் உரமாயிருக்கிறது — the sea is rough.
  • காற்றுரமாய் அடிக்கிறது — the wind blows hard.
  • உரக்கடல் — boisterous sea.
  • உரங்கொள்ள — to grow strong, to be strengthened or hardened.
  • உரங்சொல்ல–உண்டாக்க — to embolden; to encourage.

Tamil Moli Akarathi (1928)

உரம் (uram)
  1. உள்ளமிகுதி, ஊக்கம், ஞானம், திண்ணியவறிவு, மதில்,மார்பு, வயி ரம், வலி,வேகம்
உரம் (uram)
  1. ஊக்கம், ஞானம், மதில், மார்பு, வலி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உரம்¹ (uram) — noun
  1. cf. உர-. [M. uram.]
  2. Strength; வலிமை. (திவா.)
  3. Hardness, compactness; திண்மை
  4. Resolution, fortitude, firmness of mind, strength of will; திடம். ஒட் டைமனவ னுரமிலி யென்மரும் (பரிபா. 12, 51)
  5. Solid part of timber, heart of a tree; வைரம் (W.)
  6. Manure, fertilizer, as strengthening the soil; எரு. நிலத்துக்கு உரம்போடவேணும்
உரம்² (uram) — noun
  1. < uras
  2. Chest, breast, bosom; மார்பு. வாளிவந் துரங்குடைந்து (கம்பரா. மாரீச. 93)
  3. Wisdom, spiritual knowledge, clearness of understanding; ஞானம். (பிங்.)
  4. Energy, zeal, spirit; ஊக்கம். (பிங்.)
  5. Van of an army; வியூகத்தின்முன்னணி. (குறள், 767, உரை.)
  6. Infantile sprain; குழந்தைகட்கு விழுஞ் சுளுக்குவகை. உரம் எடுக்கவேண்டும்
உரம் (uram) — noun
  1. prob. உர-. Rampart; மதில். (பிங்.)

IndoWordNet

உரம் — noun
  1. பசுமையான இலைகள், குப்பைகூளம், சாணி முதலியவை காய்ந்து போனதால் உருவாகக்கூடியது
உரம் — noun
  1. மக்கி மாறும் தாவரக் கழிவு, சாணம் முதலிய பயிர்களுக்கான ஊட்டச் சத்து.

எரு திரவம் ரசாயண உரம்