உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது. metaphor
Metaphor
Winslow (1862)
உருவகம் (uruvakam) — infinitive
–உருவகவணி, s. [in rhetoric.] Identification of the objects of comparison, metaphor in general, comprising many species, உவமானஉவமேயங்களையொற்றுமைப்படக்கூறுகை. See உரூபகம்.
உருவகப்படுத்த — To speak metaphorically.
உருவகவுருவகம் — A double metaphor–as, கன்னிதன்கொங்கைக்குவடாங்கடாக்களிற்றை, the elephant-mountain-breast of the damsel.
Fabricius (1972)
உருவகம் — noun
metaphor, comparison, ரூபகம்.
உருவகப்படுத்த–உருவகிக்க — to speak metaphorically.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உருவகம் (uruvakam) — noun
Figure of speech in which the uvamēyam or the thing compared is represented as identical with the uvamāṉam or the object of comparison, metaphor; உவமேயத்தை உவமானத்துடன் அபேத மாகக் கூறும் அணி. (தண்டி. 34.)
உருவகம் (uruvakam) — noun
Drama; நாடகம். (நாநார்த்த.)
IndoWordNet
உருவகம் — noun
மிகவும் ஒத்து இருப்பதால் உவமேயத்திற்கும் உவமானத்திற்கும் வேறுபாடுயின்மை உள்ள குணம்
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது. இதில் உவம உருபு தோன்றாது.