அணி
ஒரு வகைக் கணக்கீட்டு முறை படையுறுப்பு பூமாலை
embellishment, decoration beauty ornament, jewel
Winslow (1862)
அணி (aṇi) — noun
- Boundary, limit, ஏல்லை. Wils. p
- ANI
அணி (aṇi) — noun
- Ornament, adorning, decoration, அலங்காரம்
- Jewels, ஆபரணம்
- Beauty, அழகு
- A rhetorical embellishment, a figure of speech, ஓரணியிலக்கணம்
- Rhetoric, அணியிலக்கணநூல்
- Order, regularity, ஒழுங்கு
- Row, rank or file of an army, சேனைநிரை
- A main body or division of an army, படைவகுப்பு
- A garland, wreath or string of flowers, மாலை
- Greatness, பெருமை
- Goodness, நன்மை
- Instruments, tools, utensils, implements, ஏத்தனங்கள்
- Materials, தளவாடம்
- Stores, சம்பாரம். (p.)
- அணிபடுத்த — To arrange, regulate, set in order, in rows, in array.
- அணிவகுக்க — To arrange troops, set in array.
- அணிவகுப்பு — Battle array, படைவகுப்பு.
- அணிவடம் — Ornamental string of jewels, necklace.
- அணிவிரல் — The ring finger, மோதிரவிரல். (p.)
- பேரணி — Main body, or centre of an army.
அணி (aṇi) — noun
- , கிறேன், ந்தேன், வேன், அணிய, v. a. To put on jewels, garlands, clothes, &c., பூண
- To adorn with ornaments, beautify, embellish, garnish, அலங்கரிக்க
- To put on, wear, உடுக்க
- அணிகலம்–அணிகலன் — An ornament, dress, jewels; ex கலம்.
- அணிகலச்செப்பு — A jewel casket.
- அணிந்துரை — Preface, introduction, பாயிரம் as புனைந்துரை, which see. பெற்றம் அணிந்தநல்லோய். O! excellent man adorned by virtue. Ellis 141.
Fabricius (1972)
அணி — noun
- ornament. அலங்காரம்
- order, regularity, ஒழுங்கு
- a file of soldiers, a row, a division of an army, படை வகுப்பு
- rhetoric அணியிலக்கணம்
- greatness, பெருமை
- garland, மாலை
- goodness, நன்மை
- அணி அணியாய்ப் போக — to march in ranks or rows.
- அணி பார்க்க — to adjust the thread for weaving.
- அணி வகுக்க — to rank the soldiers.
- அணிவகுப்பு — an array, a battle array; range of ordnance.
- அணியியல் — rhetoric.
- அணிவிரல் — the ring finger.
அணி — v. t.
- v. t. put on clothes or jewels, பூண்
- adorn, அலங்கரி
- join with பொருந்து
- surround, சூழ்
- அணிகலம்–கலன்–அந்தச் சபைக்கு அவர் அணிகலனாகவிருந் தார் — ornament. .
- அணிந்துரை — preface.
Tamil Moli Akarathi (1928)
அணி (aṇi)
- அடுக்கு, அணியென்னேவல், கூட்டம், சம்பாரம், சமீபம், அச் சாணி, அலங்காரம், அழகு, ஆபர ணம், ஏல்லை, ஏர்ச்சீர், ஒழுங்கு, ஓரி லக்கணம், நன்மை, நிரை, படை வகுப்பு, பெருமை, பூமாலை, நுணா
அணி (aṇi)
- அதாவது செய்யுட் கழுகுசெய்து நிற்பதாம்
- அது பொருளணி, சொல் லணியென இருவகைப்படும்
- அவற் றுட்பொருளணி உவமையணிமுதல் ஏதுவணி யிறுதியாக நூறு வகைப் படும்
அணி (aṇi)
- அணியென்னுமேவல், அலங்கா ரம், அழகு, ஆபரணம், ஒழுங்கு, நன் மை, படை, வகுப்பு, பெருமை, மாலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அணி² (aṇi) — noun
- Embellishment, decoration; ஒப்பனை. (பிங்.)
- Beauty; அழகு. (பிங்.)
- Ornament, jewel; ஆபரணம். (தொல். சொல். 45, சேனா.)
- Face; முகம். (கலித். 121, 18.)
- Greatness; பெருமை. (பிங்.)
- Array of an army; படைவகுப்பு. (பிங்.)
- Division of an army; படையுறுப்பு. (பிங்.)
- Goodness, pleasantness; இனிமை. அணிநிலா (சிலப். 4, 3)
- Love; அன்பு. (பிங்.)
- Order, regularity, row; வரிசை. சுருப்பணி நிரைத்த (கல்லா. 14)
- Rhetoric; அணியிலக்கணம்
- Figure of speech; செய்யுளணி
- Assembly, gathering; கூட்டம். பொன்னணி யீட்டிய வோட்டரு நெஞ்சம் (திருக்கோ. 342)
- Mechanic's tool; கம்மாளர் கருவி. — part. An adjectival word of comparison; ஓர் உவமவுருபு. (சீவக. 2562, உரை.)
அணி³ (aṇi) — adv
- Near; சமீபத் தில். (தொல். எழுத். 236.)
அணி¹ (aṇi) — noun
- < அணி
- Disguise; வேஷம். அணியி னரங்கின்மே லாடுநர்போல் (ஏலாதி, 24)
- Pile, heap; திரள். அணியணியாகிய தாரர் (பரிபா. 6)
- Tier; அடுக்கு. அணிநிலை மாடம் (பெருங். உஞ்சைக். 33, 105)
- Cant for 35; முப்பத்தைந்தைக் குறிக்குங் குழூஉக்குறி. (சோதிட. அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அணி
- வரிசை
- ஒழுங்கு
- ஒப்பனை: அழகு
- அணு - உயிர்
- நுட்பம்
- சிறுமை
- நுண்ணியது
- அணிகலன்
- முகம்
- படைவகுப்பு
- செய்யுளணி
- நுண்பொருள்
- பொடி
- மிகச்சிறியது
- நுண்