ஊக்கு

ஊக்கம், முயற்சி கொக்கி

Encourage

Tamil Wiktionary

ஊக்கு
  1. ஊக்கம்
  2. முயற்சி
  3. கொக்கி

Winslow (1862)

ஊக்கு (ūkku) — noun
  1. Spirit, energy, முயற்சி, &c.–as ஊக்கம். ஊக்கொடுபரலெனவுருமுப்பற்றுமால். Pecking with spirit at the thunder-bolt, as if it had been a pebble– (ஸ்காந்.)
ஊக்கு (ūkku)
  1. , கிறேன், ஊக்கினேன், வேன், ஊக்க, v. a. To commence with spirit, முயல
  2. To execute with energy, முயன்று செய்ய
  3. To excite to action, rouse, to direct, ஏழுப்ப
  4. v. n. To ascend, ஏற. (p.) நுனிக்கொம்பரேறினாரஃதிறந்தூக்கினுயிர்க்கிறுதியாகிவிடும். If one who has already ascended to the extremity of a bough, goes beyond, his life will be at an end. (குறள்.) அறவினையையூக்கி. Entering with energy on the practice of virtue. (நாலடி.) உடைத்தம்வலியறியாரூக்கத்தினூக்கி. With spirit commencing (war), ignorant of their own strength– (குறள்.) நல்லாற்றினூக்கின். If one turn (them) into the right way– (நீதிநெறி.)
ஊக்கு (ūkku)
  1. To consider, meditate upon, நினைக்க. (p.)

Fabricius (1972)

ஊக்கு — v. t.
  1. v. t. begin with spirit, energy, carry out, execute with energy, முயலு
  2. rouse to action, எழுப்பு
  3. teach, கற்பி
  4. consider, meditate upon, சிந்தி
  • ஊக்கல்–முயலு தல்–மிகுதி — putting forth effort, ; 2. abundance, .

Tamil Moli Akarathi (1928)

ஊக்கு (ūkku)
  1. ஊக்கம், முயற்சி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊக்கு² (ūkku) — noun
  1. Zeal, spirit; ஊக்கம். ஊக்கொடு பரலென வுருமுப் பற்றுமால் (கந்தபு. திருப்பர. 11).
ஊக்கு³ (ūkku) — noun
  1. hook. Hook; clasp, used in clothing; கொக்கி. Mod.

IndoWordNet

ஊக்கு — noun
  1. சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி பொருந்தும் படி வளைக்கப்பட்ட கம்பி.
ஊக்கு — noun
  1. பெரும்பாலும் முதுகில் பொறுத்துக்கொள்ளக்கூடிய பலத்தில் இருக்கும் ஒரு வகை நரம்பின் வலி

கொக்கி குண்டூசி வலி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

ஊக்கு
  1. ஊக்கம், முயற்சி
  2. கொக்கி