ஊசி

இழைவாங்கி எழுத்தாணி நிரைக்குழு

needle a needle shot; inoculation adverbial participle of ஊசு (ūcu).

Tamil Wiktionary

ஊசி — பெயர்ச்சொல் (Noun)
  1. கூரிய முனை கொண்ட நீண்ட முள் போன்ற கருவி. இது கெட்டினான மாழைக் (உலோகக்) கம்பி போன்ற உறுதியான பொருளால் ஆனது. தைப்பதற்கும், நீர்ம வடிவில் உள்ள மருந்தை உடலில் ஏற்றுவதற்கும் பயன்படும் கருவி.

[object Object], [object Object], [object Object]

Winslow (1862)

ஊசி (ūci) — noun
  1. A needle, இழைவாங்கி
  2. A Pin–as spike, குண்டூசி
  3. Tongue or index of a balance, நிறைகோலினடுமுள். (See under தராசு.)
  4. Gnoman of a dial, கடிகாரத்தின்முள்
  5. A style, ஏழுத்தாணி. கொல்லர்தெருவிலேயூசிமாறவந்தான். He is come to sell needles in the street of the smiths
  • ஊசிக்கண்–ஊசிக்காது–ஊசித்துளை — The eye of a needle.
  • ஊசிக்காந்தம் — Loadstone, magnet, இரும்பிழுக்குங்காந்தக்கல்.
  • ஊசிக்கார் — A kind of paddy, thin and long, ஓர்வகைநெல்.
  • ஊசிக்கால் — Uprights in a building set on beams to support the ridge-beam, மச்சுக்கால்.
  • ஊசிக்கூடு — A needle-case, a tin-case.
  • ஊசிப்பாலை — A species of பாலை plant.

Fabricius (1972)

ஊசி — noun
  1. a needle, இழைவாங்கி
  2. an iron style for writing on palmyra leaf, எழுத்தாணி
  3. a pin
  4. sharp pointedness, கூர்மை
  5. slenderness, lightness, சிறுமை. as in ஊசித்தொண் டை (coll.)
  • ஊசிக்காது–க்கண்–த்துளை — the eye of a needle.
  • ஊசிக்காந்தம் — load-stone, magnet.
  • ஊசிக்கூடு — a needle-case.
  • ஊசிமல்லிகை — a species of jasmine.
  • ஊசிமுனை — the point of a needle.
  • ஊசியோட்ட — to sew.

Tamil Moli Akarathi (1928)

ஊசி (ūci)
  1. இழைவாங்கி,ஏழுத்தாணி,சூசி, நிரைக்கழு,கடிகாரத்தின் முள்ளு, நிறைகோலிமுள்ளு,வடக்கு
ஊசி (ūci)
  1. சூசி
ஊசி (ūci)
  1. இழைவாங்கி, ஏழுத்தாணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

ஊசி¹ (ūci) — noun
  1. < sūcī
  2. Sewing-needle; தையலூசி. (பிங்.)
  3. Iron style for writing on palmyra leaves; எழுத்தாணி. பொன்னோலை செம் பொ னூசியா லெழுதி (சீவக. 369)
  4. Needle of a balance, magnetic needle; தராசு முதலியவற்றின் முள். (W.)
  5. Gnomon of a dial; சூரிய கடிகாரத் தின் முள். (W.)
  6. Spike put up to protect gates and walls. See நிரைக்கழு. கைபெய ரூசியும் (சிலப். 15, 213)
  7. An instrument with spikes to pierce the feet. See அடியொட்டி. உள்ளடி யூசிபாய (சீவக. 2768)
  8. Pin; குண்டூசி
  9. Potter's instrument used for fashioning clay; குய வர் மட்கலத்தை அறுக்குங் கருவி
  10. Sharp pointedness; கூர்மை. குவிமுகி ழூசிவெண் டோடு (பதிற்றுப். 70, 7)
  11. Slenderness, very slight thickness, lightness; சிறுமை. ஊசித்தொண்டை
ஊசி² (ūci) — noun
  1. The north;வடக்கு பாசிச் செல்லா தூசி முன்னாது (புறநா. 229).

IndoWordNet

ஊசி — noun
  1. உடலில் நரம்புகள் அல்லது இரத்தத்தில் திரவ மருந்தை செலுத்த மருத்துவ துறையினரால் பயன்படுத்தும் ஒரு குழாய் வடிவ சிறு கருவி
ஊசி — noun
  1. நூல் கோத்துத் தைக்கப்பயன்படும் முள்போல் கூரிய முனையும் சிறு துளையும் உடைய மெல்லிய சிறு கம்பி.
ஊசி — noun
  1. முள் போன்ற கூரியமுனையும் நூல் கோர்க்கச் சிறு துளையும் உடைய தைக்ப் பயன்படும் சிறு கம்பி.
ஊசி — noun
  1. சாக்குகளை தைக்கும் ஊசி

ஆயுதம் கருவி குண்டூசி கலைப்பொருள்கள்