கல்

*, பெயர்ச்சொல் வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல். சிறு கல்

stone (substance); rock boulder, crag hill, mountain

Tamil Wiktionary

கல்
  1. வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல்.
  2. சிறு கல்
  3. பாறை
  4. மலை
  5. இரத்தினம்
  6. காவிக்கல்
  7. முத்து
  8. நடுகல் (சாவுச்சடங்கில் இறந்தார் பொருட்டுப் பத்துநாளைக்கு நாட்டப்டுங் கல்)
  9. மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று.
  10. செங்கல் (பேச்சு வழக்கு)
  11. மைல் அளவுக்கு நாட்டுங் கல்

[object Object], [object Object]

கல்வி கற்பி கற்றல்

Winslow (1862)

கல் (kal) — noun
  1. A stone, gravel, pebble, grit, சிலை
  2. Precious stones, அரதனம்
  3. A rock, a crag, பெருங்கல்
  4. A brick–also called செங்கல்
  5. (p.) A mountain, மலை
  • கல்நாட்ட — To set up stones to show the limits of provinces, sometimes as a menace to an invading foe. 2. To set up a stone, or build a monument of some deceased person.
  • கல்நாதம்–கல்வீரியம்–கல்வேகம் — Green vitriol, அன்னபேதி.
  • கல்நார்–கல்லின்காரம்–கற்சத்து–கற்சவளை — A kind of fossil, an incombustible substance, asbestos–used for decayed gums, &c., ஓர்மருந்து.
  • கல்நெஞ்சு — A stony heart, a hard heart, வன்‌னெஞ்சு. அவன்நெஞ்சுகல்லாய்ப்போயிற்று. His heart is petrified.
  • கல்நெஞ்சன்–கல்நெஞ்சுள்ளவன் — A hard hearted, unfeeling, or unrelenting person.
  • கல்மடி — A hard udder of a cow, காய்மடி.
கல் (kal) — noun
  1. , கற்கிறேன், கற்றேன், கற்பேன், கற்க, v. a. To learn, study, acquire knowledge, கல்விகற்க
  2. To practise arts, the use of arms, படைக்கலமுதலியபயில. கற்ககசடறக்கற்பவைகற்றபினிற்கவதற்குத்தக. Learn perfectly what thou hast to learn, and when thou hast learned it, act upon and persist in it. (திருவள்.)
  • கல்லாதவன் — An illiterate, ignorant man, an idiot.
  • கல்லாமை — Want of learning, ignorance.
  • கல்லார் — Unlearned, illiterate men, அறியாதார், 2. Low people, கீழ்மக்கள்.
  • கற்போன் — A scholar, a pupil, மாணாக்கன்.
  • கற்றவர்–கற்றார்–கற்றோர் — The learned, படித்தவர். 2. Poets, புலவர்.
  • கற்றறிமூடன் — A learned fool, one who knows but does not practise (morality, &c.)
கல் (kal) — infinitive
  1. –கல்லு, கிறேன், கல்லினேன், கல்லுவேன், கல்ல, v. a. To work away earth, pebbles, &c., gradually, அகழ
  2. To dig out by little and little–as a hole, a tank, &c., to hollow, தோண்ட
  3. To scoop out –as a nut, துருவ
  4. To wash away earth, &c., by little and little– as following water, நீர்கல்ல
  5. To eat away–as caustic, அரிக்க
  6. [prov.] To catch and tear up the fibre in an ola when writing–as a style by being too sharp. ஏழுத்தாணிக்கூர்கல்ல. இக்காரங்கல்லிக்கல்லியெடுத்துப்போடும். This caustic will eat away (the proud flesh). மலைகல்லியெலிபிடிக்க. To excavate a mountain to catch a rat; i. e. to take great pains or be at great expense for little profit
  • கல்லிக்கல்லிப்பாய — To wash away in flowing.
  • கல்லல் — The act of digging, தோண்டல். 2. s. The noise issuing from a crowd, பேசலாலெழுமொலி.

Fabricius (1972)

கல் — noun
  1. , கல்லு, s. a stone, சிலை
  2. a rock, பாறை
  3. a mountain, மலை
  4. a precious stone, இரத்தினம்
  5. brick, செங்கல்
  6. anchor, நங்கூரம்
  7. reiterative sound, ஒலிக்குறிப்பு
  8. a flow in emeralds
  9. a milestone, a mile
  10. pearl, முத்து
  11. memorial stone, as for a hero
கல் — v. t.
  1. v. t. learn, study, acquire knowledge, படி
  2. practise arts, பயிலு
  3. dig, தோண்டு
  • கல்லாதவன் — an illiterate person.
  • கல்லாமை — ignorance.
  • கல்லார் — illiterate men, low people.
  • கல்லூரி–கல்வியூரி — an academy, college, .
  • கல்வி — see separately.
  • கற்றல்–கற்கல்–கற்கை–கற்பு — learning.

Tamil Moli Akarathi (1928)

கல் (kal)
  1. இரத்தினம், ஒலிக்குறிப்பு, கல்லு கல்லென்னேவல், காவிக்கல், சிலை மலை, விடந்தீர்க்குமணி
கல் (kal)
  1. கிராவம், சிராவணம், சிலை, சையம், பாடணம், அன்றியும் திரண்டகல் உபலம், உலம் குண்டு பெருங்கல்லி ன்பெயர் கெளிதம் சிறுகல்லின் பெ யர் உபலம், கற்பதித்த விடத்தின் பெயர் குட்டிமம் சலதாரை முதலிய வற்றை யடைக்குங் கல்லின்பெயர் - துறுகல், பொறை
கல் (kal)
  1. ஒலிக்குறிப்பு, கல், கல்லென்னே வல், மலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கல்² (kal) — noun
  1. Stone; வெட்டி எடுக்கப்பட்ட பெருங்கல். வாழ் நாள் வழியடைக்குங் கல் (குறள், 38)
  2. Gravel, pebble, grit; சிறு கல். கற்கொண்டெறியுந் தவறு (நாலடி, 364)
  3. Boulder, ledge, crag; பாறை. கல் லகழ் கிடங்கின் (மலைபடு. 91)
  4. Rock, hill, mountain; மலை. கல்சேர்பு மாமழை தலைஇ (பதிற்றுப். 84, 23)
  5. Precious stone; இரத்தினம். குருவிந்தக் கற்கள் (கம்பரா. சித்திர. 17)
  6. Red ochre, reddle; காவிக்கல். முக்கோலுங் கற்றோய் முழுமடியும் (இலக். வி. 707, உரை)
  7. Pearl; முத்து. கற்குளிமாக்கள் (கல்லா. 42, 2)
  8. Memorial stone in a village, as for a hero; வீரக்கல். பலர் . . . கன்னின்றவர் (குறள், 771)
  9. A stone fixed in the house of a deceased person for ten days since his demise; சாச்சடங்கில் இறந்தார்பொருட்டுப் பத்துநாளைக்கு நாட் டப்படுங் கல்
  10. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam, q.v.; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.)
  11. Brick; செங்கல். Colloq
  12. Milestone; மைல் அளவுக்கு நாட்டுங் கல். Mod
  13. Mile; மைல்தூரம். Mod

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கல்
  1. வெட்டியெடுத்த கல்
  2. சிறுகல்
  3. பாறை
  4. மலை
  5. இரத்தினம்
  6. காவிக்கல்
  7. முத்து
  8. வீரக்கல்
  9. சாவுச்சடங்கில் இறந்தார் பொருட்டுப் பத்து நாளைக்கு நாட்டப்படுங் கல், மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று