குடிமை

குல மேன்மை குடியுரிமை nobility, civility

civic

Tamil Wiktionary

குடிமை — பெயர்ச்சொல் (Noun)
  1. குல மேன்மை
  2. குடியுரிமை

[object Object]

குடி மை குடிமைப்பணி

Tamil Moli Akarathi (1928)

குடிமை (kuṭimai)
  1. குடியியல்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

குடிமை (kuṭimai) — noun
  1. < id
  2. Manners and customs of the higher classes, of nobility; உயர்குலத்தாரது ஒழுக்கம். (தொல். பொ. 273.)
  3. Supreme quality of advancing the status of a family; பிறந்தகுடியை உயரச்செய்யுந் தன்மை. மடி மை குடிமைக்கட் டங்கின் (குறள், 608)
  4. Lineage, family, descent; குடிப்பிறப்பு. குணனுங் குடிமை யும் (குறள், 793)
  5. Allegiance, homage, as of subjects to their sovereign; அரசரது குடியாயிருக் குந் தன்மை. குடிமை மூன்றுலகுஞ் செயுங் கொற்றத்து (கம்பரா. நிந்தனை. 37)
  6. Domestic economy; குடித்தனப்பாங்கு. (W.)
  7. Slavery, servitude, feudal dependence, feudatory in reference to his chief; அடிமை. குடிமைசெய்யுங் கொடும்புலையன் (அரிச். பு. சூழ்வினை. 70)
  8. A tax, certain dues from tenants; குடிகளிடமிருந்து பெறும் ஒருவகை வரி. (S.I.I. iii, 110.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

குடிமை
  1. உயர்குலத்தாரது ஒழுக்கம்
  2. பிறந்த குடியை உயரச் செய்தல்
  3. குடிப்பிறப்பு
  4. அரசரது குடியாயிருக்குந் தன்மை
  5. குடித்தனப் பாங்கு
  6. அடிமை
  7. குடிகளிடம் பெறும் வரி