மை

எழுதுவதற்கு பேனாவில் போடப்படும் திரவியம் செம்மறியாடு பண்புப்பெயர் விகுதி

the alphasyllabic compound of ம் (m) +‎ ஐ (ai). ink, ink paste collyrium for the eye

Tamil Wiktionary

மை
  1. எழுதுவதற்கு பேனாவில் போடப்படும் திரவியம்
  2. செம்மறியாடு
  3. பண்புப்பெயர் விகுதி

[object Object]

மையெழுது மையிடு மைவை கண்மை இளமை முதுமை பெருமை சிறுமை

Winslow (1862)

மை (mai)
  1. syllabic letter, composed of ம் and ஐ.
மை (mai) — noun
  1. Black or magical for the eyes, அஞ்சனம்
  2. Black, blackness, ink. கறுப்பு
  3. Fault, குற்றம்
  4. A kind of sheep, செம்மறியாடு
  5. The first sign of the Zodiac, மேடவிராசி. (சது.)
  6. A barren woman, மலடி
  7. A barren buffalo, மலட்டெருமை
  8. A cloud, மேகம்
  9. An affix expressing an abstract quality, or condition, as இருமை, doubleness; வள்ளன்மை, charitableness; பொறுமை, patience; செய்யாமை, inaction. இருக்கின்றமையால். Because it is
  • மைகூட்ட — To make ink or paint. See கூட்டு, v.
  • மைக்காடு — [also மைக்காட்டுமண்.] Ashes and dust from a goldsmith's furnace; from which by washing they obtain the precious metals, அக்கசாலைமண்.
  • மைக்காப்பு — Coloring the writing of an ola book, மைபோடுதல். ஏட்டுக்குமைக்காப்பிட்டான். He blackened the letters of an ola book.
  • மைக்கூடு — An inkstand. (c.)
  • மைப்பூசுதல்–மையிடுதல் — Coloring with ink, or pigment, especially the eye-brows.
  • மைமா — A hog, as being usually black, கரும்பன்றி; [ex மா.] [சது.]
மை (mai) — noun
  1. Water, நீர். W. p. 630. MA.

Fabricius (1972)

மை — noun
  1. a magical paint, a black for the eyes. அஞ்சனம்
  2. black, blackness, கறுப்பு
  3. ink
  4. fault, குற்றம்
  5. a barren woman, மலடி
  6. a barren buffalo
  7. a cloud
  8. the first sign of the Zodiac, மேடவிராசி
  9. a kind of sheep, செம்மறியாடு
  10. an affix expressing an abstract quality or condition as in இருமை, doubleness, வள்ளன்மை, charitableness etc
  • மைகூட்ட — to make ink or paint.
  • மைக்காடு — ashes and dust from a goldsmith's furnace, from which precious metals are got by washing.
  • மைக்காப்பு — colouring the writing of an ola book.
  • மைக்கூடு — an ink-stand.
  • மை பரவுங் கடுதாசி — blotting or sinking paper.
  • மைபூச–இட — to colour with ink or pigment especially the eyebrows as women do.
மை — noun
  1. water, நீர்.
மை — v. i.
  1. v. i. be slightly pounded, be separated from the husk by beating, மசி II.

Tamil Moli Akarathi (1928)

மை (mai)
  1. அஞ்சனம், இருள், ஏழுதுமை, ஓ ரெழுத்து, கருப்பு, குற்றம், செம்ம றியாடு, நீர், மலடி, மலட்டெருமை, மேகம், மேடவிராசி, மையென்னே வல், வெள்ளாடு
மை (mai)
  1. அஞ்சனம், ஓர்வகையெழுத்து, க றுப்பு, குற்றம், செம்மறியாடு, நீர், மலடு, மேகம், மேடவிராசி, மை யென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மை¹ (mai)
  1. The compound of ம் and ஐ.
மை² (mai) — noun
  1. cf. maṣī
  2. Collyrium for the eye; கண்ணுக்கிடும் அஞ்சனம். மைப்படிந்த கண் ணாளும் (தேவா. 1235, 10)
  3. Ink; ink paste; மசி
  4. Black pigment used in witchcraft; மந்திர வாதத்தில் உபயோகிக்கும் மை
  5. Grease made of castor-oil and burnt straw, used as a lubricant for country-carts; வண்டி மசகு
  6. Black, blackness; கருநிறம். மறவர் மைபடு திண்டோள் (அகநா. 89)
  7. Darkness; இருள். மைபடு மருங் குல் (புறநா. 50)
  8. Greenness; பசுமை. மையிருங் கானம் (அகநா. 43.)
  9. Spot, as of the moon; blemish; களங்கம். மைதீர்ந்தன்று மதியுமன்று (கலித். 55)
  10. Dark cloud; கருமேகம். மைபடு சென்னி . . . மலை (கலித். 43)
  11. Sky, as blue; விண். (அரு. நி.)
  12. Fault; defect; குற்றம். மையி லறிவினர் (புறநா. 22, 8)
  13. Sin; பாவம். மை தீர்த்தல் (சினேந். 457)
  14. Dirt; அழுக்கு. மையில் செந்துகிர் (கலித். 85)
  15. Birth, as due to karma; பிறவி. மையறு சிறப்பிற் றெய்வம் (பட்டினப். 159)
  16. Barrenness, sterility; மலடு. (பிங்.)
  17. cf. மைம்மை. Barren woman; மலடி. (நாமதீப. 182.)
  18. cf. மைம்மை. Barren buffalo; மலட் டெருமை. (சூடா.)
  19. cf. mahiṣa. Buffalo; எருமை. வைகுபுலர் விடியன் மைபுலம் பரப்ப (அகநா. 41)
  20. cf. mēṣa. Aries of the zodiac; மேட ராசி. (சூடா.)
  21. Sheep; goat; ஆடு. (திவா.) மையூன் மொசித்த வொக்கலொடு (புறநா. 96)
  22. Youth; இளமை. (அக. நி.)
  23. Water; நீர். (யாழ். அக.)
மை³ (mai) — part
  1. Suffix (a) expressing an abstract quality or condition, as karumai, poṟumai; பண்புப்பெயர் விகுதியுள் ஒன்று: (b) ending verbal nouns, as ceykiṉṟamai, ceyyāmai; தொழிற்பெயர்விகுதியுள் ஒன்று: (c) ending verbal participles; வினையெச்சவிகுதியுள் ஒன்று. ஒற்றொற் றுணராமை யாள்க (குறள், 589).