கூடம்

வீடுகளின் மையப் பகுதி, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடும் அறை தாழ்வாரம் யானைச்சாலை

hall, a large room; building elephant-stall

Tamil Wiktionary

கூடம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வீடுகளின் மையப் பகுதி
  2. குடும்பத்தினர் அனைவரும் ஒன்றுகூடும் அறை
  3. தாழ்வாரம்
  4. யானைச்சாலை
  5. மேலிடம்
  6. கோபுரம்
  7. தேவக்கோட்ட மன்றம்
  8. சம்மட்டி
  9. மலையினுச்சி
  10. அண்டகோளகை
  11. திரள்
  12. மறைவு
  13. பொய்
  14. வஞ்சகம்
  15. இசை வாராது ஓசை மழுங்கல்
  16. யாழ் குற்றம் நான்கனுள் ஒன்று

கூடு தொழிற்கூடம் கல்விக்கூடம் பயிற்சிக்கூடம் கலைக்கூடம் சிறைக்கூடம் கவிக்கூடம் ஆராய்ச்சிக்கூடம் தேர்வுக்கூடம் ஆய்வுக்கூடம் பள்ளிக்கூடம் சோதனைகூடம் சாதனைக்கூடம்

Winslow (1862)

கூடம் (kūṭam) — noun
  1. A house, a hall, an open room, a building, வீடு, சாலை
  2. The side room or rooms, adjoining the main room of a Hindu house, இல்லின்கூடம்
  3. Fraud, deception, trick, deceit, வஞ்சகம்
  4. Untruth, falsehood, பொய்
  5. A delusion, an illusion, மாயம்
  6. A blacksmith's hammer, a sledge, கொல்லன்சம்மட்டி
  7. The peak or summit of a mountain, மலையினுச்சி. Wils. p. 238. KOOT'A
  8. Concealment, privacy, secrecy, screen, மறைவு
  9. Any thing hidden, concealed, secret or mysterious, புதைபொருள்
  10. A solitary or private place, ஏகாந்தம். Wils. p. 295. GOOT'HA
  11. A kind of native arsenic, கோளகபாஷாணம்
  12. The sesamum plant, ஏள். (M. Dic.)
  • கூடமும்வீடும் — The main room and the side room of a Hindu house.
  • காவற்கூடம் — A prison, See காவல்.
  • யானைக்கூடம் — Elephant stable.
  • கூடசதுக்கம் — A kind of curious stanza, in which the letters constituting the last line are found among those of the first three lines, ஈற்றடியெழுத்துக்கள் மற்றை மூன்றடியுளுமறைந்து நிற்குஞ்செய்யுள்; [ex சதுக்கம், four lines.]
  • கூடசாலம் — One of the seven hells, ஓர்நகரம்.
  • கூடத்தர்–கூடஸ்தன் — The intelligent soul–as enshrouded in the body, ஆத்துமா. 2. Brahm, the deity–as the universal soul, பரப்பிரமம். Wils. p. 238. KOOT'ASTA. 3. [local.] The head or chief man, முதன்மையுள்ளோன்.

Fabricius (1972)

கூடம் — noun
  1. concealment, privacy, மறைவு
  2. a secret, anything mysterious
  3. fraud, deception, falsehood
  4. a house, a hall, a parlour
  5. a side room
  6. a blacksmith's hammer, சம் மட்டி
  7. the peak of a mountain, மலை யுச்சி
  8. a heap or multitude, திரள்
  9. the shell which is supposed to envelop the world, அண்டகோளகை
  • கூடமும் வீடும் — the main (hall) and the side room.
  • காவற்கூடம் — a prison.
  • யானைக்கூடம் — elephant's stable.
  • விஷயம் கூடமாயிருக்கிறது — the affair is private, mysterious or secret.
  • கூடபதம் — a snake.

Tamil Moli Akarathi (1928)

கூடம் (kūṭam)
  1. அண்டம், அறை, இந்திரசாலம், இரகசியம், உறையறி, கருவி, ஏள், ஏகாந்தம், கலப்பை, கூட்டம், கொ ழு, தானியக்குவியல், கொல்லன் சம் மட்டி, கோளகபாஷாணம், தீங்கு புதையல், பொய், மலையினுச்சி, மறை வு, மாயம், யாழ்க்குற்றம்நான்கினொ ன்று
  2. அதுஇசை நிரவாதது
  3. தன் பகையாகிய ஆறாநரம்பி னிசையிற் குன்றித் தன்னோசைமழுங்கல், யா னைப்பந்தி, வஞ்சகம்வீடு
கூடம் (kūṭam)
  1. கூடம், கொல்லன், சம்மட்டி, பொய் மலையினுச்சி, மறைவுவஞ்சம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூடம்¹ (kūṭam) — noun
  1. < kūṭa
  2. House; வீடு. (பிங்.)
  3. Drawing-room, hall; வீட்டின்கூடம்
  4. Verandah; தாழ்வாரம். Loc
  5. Elephant-stall; யானைச்சாலை. மதலைநட் டமைத்த தன்பழங்கூடம் (கல்லா. 60, 22)
  6. Top; மேலிடம். கூடக் கூம்பு (பெருங். உஞ்சைக். 40, 72)
  7. Temple tower, palace tower; கோபுரம். (பிங்.)
  8. Open space under trees, considered as a shrine; மன்றாக அமைந்த தேவகோட்டம். கூடஞ்செய் சாரல் (திருக்கோ. 129)
  9. Blacksmith's sledge, hammer; சம்மட்டி. (பிங்.)
  10. Mountain peak; மலையுச்சி. (பிங்.)
  11. Shell supposed to envelop the world; அண்டகோளகை. (பிங்.)
  12. Heap, multitude; திரள். (உரி. நி.)
கூடம்² (kūṭam) — noun
  1. < gūḍha
  2. Concealment, privacy, secrecy; மறைவு. (பிங்.)
  3. Secret; anything hidden, concealed, mysterious; மறை பொருள்
  4. Fraud, deception; வஞ்சகம். கூடம் மடியோம்பு மாற்றலுடைமை (ஏலா. 17)
  5. Falsehood, untruth; பொய். கூடசாட்சியார் (வேதாரணி. நிரையவ. 18)
  6. Dullness of tone in lute-strings; இசைவாராது ஓசைமழுங்கல். செம்பகை யார்ப்பே கூட மதிர்வே (சிலப். 8, 29)
கூடம்³ (kūṭam) — noun
  1. A mineral poison; கோளகபாஷாணம். (சங். அக.)
  2. Sesame. See எள். (W.)