கூடு

பறவைகள் வாழும் வீடு ஒன்று திரள், ஒன்று சேர் assemble, unite

nest, birdcage, coop, hive pen, cage, kennel dome, cupola

Tamil Wiktionary

கூடு — பெயர்ச்சொல் (Noun)
  1. பறவைகள் வாழும் வீடு
  2. ஒன்று திரள்
  3. ஒன்று சேர்

[object Object]

கூட்டு கூட்டம் கூடம் கூடாரம் தேன்கூடு சிலந்திக்கூடு குருவிக்கூடு குளவிக்கூடு மைக்கூடு விமானக்கூடு வாய்க்கூடு

Winslow (1862)

கூடு (kūṭu) — noun
  1. A nest, a hive; a cage, a coop, பறவைமுதலியவற்றின்கூடு
  2. A pen, a sty, a kennel, பன்றிமுதலியவற்றின்கூடு
  3. A small receptacle–as an inkstand, மைக்கூடு
  4. A recipient, a receptacle of the soul, சரீரம்
  5. A case, a sheath, உறை
  6. A testaceous, or mud shell of some insects; a cocoon, புழுக்கூடு
  7. [in carpentry.] A mortise; also, groove, கழுந்துக்கூடு
  8. A case for catching fish, மீன்பறி
  9. A covering of a cart– as கூடாரம். (Sans. Gut'ha, to envelope, screen.) கூட்டோடேபோச்சுது குளிருங்காய்ச்சலும். The fever and ague have gone off with the case (the body); i. e. the person has died
  • கூடுகட்ட — To build nests, cases, &c.–as birds, caterpillars, bees, &c. 2. To make cages, hives, &c. 3. To put a case or covering on fruits, &c.
  • கூட்டிலடைக்க — To inclose in a cage, to encage, to coop up. 2. To enclose a charm, a talisman or an amulet in a casket.
  • கூட்டுப்பல்லக்கு — A palankeen with sliding doors.
  • கூடுபோட–கூடுவிட — To die; lit. to drop the body.
  • கூடுவிட்டுக்கூடுபாய — To leave its own body at pleasure and enter another, or an inanimate thing–as the soul is feigned to do; a magic art.
  • கூடுங்கழுந்தும் — Mortise and tenon.
கூடு (kūṭu) — infinitive
  1. , கிறேன், கூடினேன், வேன், கூட, v. n. To join with, to combine, coalesce, பொருந்த
  2. To collect or crowd together, to assemble; to congregate, convene muster, கூட்டங்கூட
  3. To associate or consort with one, சங்கரத்தஞ் செய்ய
  4. To unite, knit–as broken bones, பொருந்த
  5. To cohabit, கூடிவாழ
  6. To meet–as rivers in confluence, or as roads, சந்திக்க
  7. To become reconciled, pacified, conciliated, இணங்க
  8. To be able, be possible, practicable, attainable, இயல
  9. To be lawful, expedient, proper, decent, தகுதியாக
  10. To be fit, to be serviceable, to be suitable, பிரயோசனப்பட
  11. To become possessed of, to attain, அடைய
  12. To accumulate, to hoarded or stored up, தொகை சேர
  13. To come to pass, to be brought about, to be effected, சித்திக்க
  14. To be annexed, superadded, அதனமாய்ச்சேர
  15. To come in conjunction–as planets, &c., கிரகங்கள் கூட
  16. To commence, to take place, தொடங்க
  17. v. a. (சது.) To pursue, follow out; to seek, தேட. பன்றியோடுகூடியகன்றும்பீதின்னும். A calf in company with a swine will learn to devour filth; i. e. a man will conform to his associates. இதுஅவனாலேகூடும். He is able to do it. இனிஅவன்கூடான். Henceforth, he will be good-for-nothing. இதுகாரியத்துக்குக்கூடும். This will serve the purpose. நடுவழியிலேகூடினான். He met me in the middle of the road. கூடிப்பிரியேல். Break not (old) friendships. (Av.) அமாவாசைகூடிவிட்டது. [prov.] The time of new moon has already come. ஆளோடேகூடிவிட்டான். He has begun to come into society (from obscurity or boyhood)
  18. He is convalescent; he is getting around. ஆகக்கூடியதொகை. The total amount
  • கூடிக்கொள்ள — To band together; to form an association, to take part in, to side with. 2. To meet together, to assemble. 3. To exceed, surpass. 4. To gain strength and vigor.
  • கூடிவர — To accompany. 2. To prosper, succeed.
  • கூடிநாடித்திரிய — To associate or consort with one, to be on terms of close friendship.
  • கூடாநட்பு — False friendship.
  • கூடாவுவமை — A simile in which the comparison is made with a thing having only a hypothetical existence, ஓர்உவமையலங்காரம்.
  • கூடாவொழுக்கம் — Immoral conduct –as of anchorets who in secret break their vows.

Fabricius (1972)

கூடு — noun
  1. a nest, hive, cage
  2. a hen-roost coop
  3. a small receptacle
  4. the body as receptacle of the soul
  5. a case, a sheath, கூறை
  6. a covering of a cart, கூடாரம்
  7. dome, cupola, ஸ்தூபி
  8. a basket for catching fish, மீன்பறி
  9. witness box
  • கூட்டோடே போச்சுது குளிரும் காய்ச் சலும் — shivering and fever left with the body; the person died.
  • கூடாயிருக்க — to be hollow.
  • கூடுகட்ட — to build nests or cases.
  • கூடுகலைக்க — to destroy a nest.
  • கூடுபோட–விட — to die.
  • கூடுவிட்டுக் கூடுபாய்தல் — the passing of the soul from one body to another at pleasure.
கூடு — v. i.
  1. v. i. join, unite, பொருந்து
  2. meet, assemble, associate, சேரு
  3. be reconciled, agree, இணங்கு
  4. agree consent
  5. come to pass, be effected, succeed, சித்தி
  6. be possible, இயலு
  7. be proper, decent, தகுதியாகு
  8. be serviceable, பிரயோசனமாயிரு
  9. abound, increase, மிகுதியா; v. t. asso- ciate, be friend, சிநேகி
  10. cohabit புணர்
  11. reach, arrive at, அடை
  • அந்தியகாலம் கூடிவிட்டது — the time of death is come near.
  • நன்றாய்க்கூடின பலகைகள் — planks well joined.
  • கூட — together, with; 2. even, also; 3. too much, in excess.
  • அவன் கூடப்போகாதே — do not go with him.
  • கூட இருந்தான் — he was present.
  • அவன்கூட அறிவான் — he also knows it.

Tamil Moli Akarathi (1928)

கூடு (kūṭu)
  1. அடைப்பு, உடம்பு, உறை, கூடெ ன்னேவல், பறவைக்கூடு
கூடு (kūṭu)
  1. கூண்டு, பஞ்சரம்
கூடு (kūṭu)
  1. கூடென்னேவல், பறவைக்கூடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூடு² (kūṭu) — noun
  1. Nest, bird-cage, coop, hive, cocoon, shell of a testaceous animal; பறவை முதலியவற் றின் கூடு. (திவா.)
  2. Pen, sty, kennel, cage for animals; விலங்குக்கூடு. கூடார் புலியும் (சீவக. 2328)
  3. Receptacle for grain; நெற்கூடு. கூடு கெழீஇய குடிவயினான் (பொருந. 182)
  4. Hollow, globular or prismatical case, as a balloon, as the lamp of a light-house; உருண்டு திரண்டு கூடுபோலுள் ளது
  5. (Arch.) Dome, cupola; கட்டடத்தின் ஸ்தூபி
  6. Quiver, sheath, case, envelope; ஆயு தம் முதலியவற்றின் உறை. கோறுவக்குங் கூடு குறைத்த கொடுமதனை (சிவப். பிர. வெங்கைக்கலம். 93)
  7. Small receptacle, as an inkstand; மைக்கூடு
  8. Covering or top of a cart; வண்டிக்கூடு
  9. Top of the drill for boring holes; துரப்பணக் கூடு
  10. [K. gūḍe, M. kūḍa.] Basket for catching fish; மீன்பறி
  11. Witness-box; சாட்சிக்கூடு
  12. Mortise, groove, in carpentry; கழுந்துக்கூடு. (W.)
  13. Body, as the sheath encasing the soul; உடம்பு. கூட்டைவிட்டுயிர் போவ தன் முன்னமே (தேவா. 376, 2)
கூடு (kūṭu) — noun
  1. Stomach; வயிறு. உண்டுழியெங் கூடாரப்போதுங்கொல் (கலிங். 217).

IndoWordNet

கூடு — noun
  1. பறவை, தேனீ, பூச்சி முதலியவை அமைத்துக்கொள்ளும் வசிப்பிடம்.
கூடு — noun
  1. பறவைகள் தங்கி இரவை கழிக்கும் ஒரு இடம்

வசிப்பிடம் தங்குமிடம் இருப்பிடம் வாழுமிடம் வசிக்குமிடம் குடியிருக்குமிடம் வசிக்கும்இடம் இருக்கை உறை தங்குதரி வாசம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கூடு
  1. உடல்
  2. பறவைக்கூடு
  3. விலங்கின் கூடு
  4. நெற்கூடு
  5. உருண்டு திரண்டு கூடுபோலுள்ளது
  6. மைக்கூடு
  7. வண்டிக்கூடு
  8. சாட்சிக்கூடு
  9. கூடாரம்
  10. மீன்பறி