சுடர்

கொழுந்து, ஒளிக்கதிர் அறிவுச்சுடர் சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோ (பாரதியார்)

to shine, glow flame glow

Tamil Wiktionary

சுடர் — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒளி
  2. கொழுந்து
  3. ஒளிக்கதிர்

[object Object]

Winslow (1862)

சுடர் (cuṭar) — noun
  1. Light, brilliance, brightness, lustre, ஒளி. (c.)
  2. The sun, சூரியன்
  3. The moon, சந்திரன்
  4. Fire, நெருப்பு
  5. A burning lamp, விளக்கு
  6. The flame of a candle, தீச்சிகை. (சது.) சுடர்விளக்காயினுந் தூண்டுகோல் ஒன்று வேணும். Though a lamp burn brightly, it will need a wick-pricker, i. e, the best require stirring up
  • சுடரெறிய — To radiate, gleam, sparkle–as some precious gems.
  • சுடரெண்ணெய் — Drops of burning oil from a lamp. 2. Oil burnt in drops for medicinal purposes. 3. Margosa oil extracted by fire.
  • சுடரோன் — The sun, சூரியன்.
  • சுடர்கால — To emit rays–as the sun. (p.)
  • சுடர்க்கடை — Fire fly, மின்மினி. (p.)
  • சுடர்க்கொடி — Incense of burnt camphor, ஆரதிகர்ப்பூரம்.
சுடர் (cuṭar)
  1. –சுடரு, கிறது, ந்தது, சுடரும், சுடர, v. n. To give light as a flame, a lamp, &c., burn brightly, shine, as a heavenly body, to sparkle–as a gem, பிரகாசிக்க. (p.)–Note. This verb is used only in the present and future tenses. சுடச்சுடரும்பொன்போலொளிவிடுந்துன்பஞ் சுடச்சுட நோற்கிற்பவற்கு. As gold is purified in the fire, so the good (the performers of penance) shine in affliction.

Fabricius (1972)

சுடர் — noun
  1. light, splendour, lustre, ஒளி
  2. fire, நெருப்பு
  3. a burning lamp, விளக்கு
  4. the flame of a candle, தீச்சிகை
  5. the Moon, சந்திரன்
  6. the Sun, சூரியன்
  • சுடரார் — God, as lustrous.
  • சுடரெறிய — to radiate, twinkle, gleam.
  • சுடரோன்–சுடரவன் — the sun, .
  • சுடர்த்தகழி — a small candelabrum.
  • சுடர்நிலை — a candle-stick, a lamp- stand.
  • சுடர் விட்டெரிய — to burn brightly.
சுடர் — v. i.
  1. v. i. shine, sparkle, glimmer, பிரகாசி.

Tamil Moli Akarathi (1928)

சுடர் (cuṭar)
  1. அக்கினி, ஒளி, சந்திரன், சூரி யன், தளிர், தீச்சிகை, விளக்கு
சுடர் (cuṭar)
  1. 2 - சூரியன், சந்திரன்
சுடர் (cuṭar)
  1. 3 - சந்திரன், சூரியன், அக்கினி
சுடர் (cuṭar)
  1. ஒளி, சந்திரன், சூரியன், தீ, விளக்கு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சுடர்¹ (cuṭar) — noun
  1. < சுடு-
  2. [M. cuṭar.] Light, brilliance, lustre; ஒளி. தெறுசுட. ரொண் கதிர் ஞாயிறு (புறநா. 6, 27)
  3. Sun; சூரியன். சுடர் சுட்ட சுரத்தேறி (புறநா. 136, 18)
  4. Sunshine; வெயில். வல்லிருள் புதைப்பச் செல்சுடர் சுருக்கி (பெருங். உஞ்சைக். 33, 155)
  5. Moon; சந்திரன். சுடரொடு சூழ்வரு தாரகை (பரிபா. 19, 19)
  6. Planet; கிரகம். சுடர்நிலை யுள்படுவோரும் (பரிபா. 19, 7)
  7. [K. suḍu, M. cuṭar.] Fire; நெருப்பு. சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் (திருமுரு. 43)
  8. [K. soḍar.] Burning lamp; விளக்கு. இரவின் மாட்டிய விலங்குசுடர் (பெரும்பாண். 349)
  9. [K. soḍar.] Flame; சுவாலை. விளக்கினு ளொண்சுடரே போன்று (நாலடி, 189)
  10. Spark; தீப்பொறி. (அக. நி.)
  11. See சுடரெண்ணெய், 1
சுடர் (cuṭar) — noun
  1. Year; ஆண்டு. (விதான. மகாதிசை. 1, உரை.)
  2. Tender leaf, shoot; தளிர். (யாழ். அக.)

IndoWordNet

சுடர் — noun
  1. விளக்கு மெழுகுவர்த்தி போன்றவற்றின் திரியில் எரியும் தளிர் வடிவ நெருப்பு.

தீச்சுடர் நெருப்பு தீ அக்னி ஜீவாலை ஒளிச்சுடர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சுடர்
  1. ஒளி
  2. சூரியன்
  3. வெயில்
  4. சந்திரன்
  5. கோள்
  6. ஆண்டு
  7. தளிர்
  8. விளக்கு
  9. சுடர்
  10. தீப்பொறி
  11. சுடரிலிருந்து விழும் எண்ணெய்த்துளி