தஞ்சம்

பாதுகாப்புக் கருதி ஓரிடம் புகுதல்/தருதல், அடைக்கலம், சரணாகதி, புகல் - refuge, shelter விபீஷணன் ராமனிடம் தஞ்சம் புகுந்தான் (Vibhishanan sought refuge with Rama)

negligible matter degradation, discomfiture smallness, littleness

Tamil Wiktionary

தஞ்சம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பாதுகாப்புக் கருதி ஓரிடம் புகுதல்/தருதல், அடைக்கலம், சரணாகதி, புகல்

[object Object]

Winslow (1862)

தஞ்சம் (tañcam) — noun
  1. Staff, prop, பற்றுக்கோடு
  2. Aid, help, assistance, succor, துணை
  3. Greatness, dignity, பெருமை
  4. Poverty, meanness, ஏளிமை
  5. Lowness, depth, தாழ்வு. (சது.)
  6. (c.) Resource, refuge, shelter, support, stay, dependence, reliance, trust, அடைக்கலம். கஞ்சிதான்தஞ்சம். Rice gruel is a support. சுவாமிநீயேதஞ்சம். O Lord! thou art my refuge. தஞ்சமென்றுவந்தவனைவஞ்சிக்கலாகாது. One who seeks protection must not be deceived
  • தஞ்சக்கேடு — Debility, weakness. 2. Destitution, helplessness.
  • தஞ்சமில்லாதவன் — A destitute person.

Fabricius (1972)

தஞ்சம் — noun
  1. staff, stay, support, கொழு கொம்பு
  2. help, துணை
  3. refuge, protection, அடைக்கலம்
  4. poverty, meanness, எளிமை
  5. lowness, தாழ்வு
  • நீரே தஞ்சம் — thou art my refuge.
  • தஞ்சமில்லாதவன் — a destitute person.
  • தஞ்சமென்றடைய — to seek the protection of one.
  • தஞ்சமென்று வந்தவனை வஞ்சிக்கலா காது — one must not deceive a person who seeks one's protection.

Tamil Moli Akarathi (1928)

தஞ்சம் (tañcam)
  1. அடைக்கலம், ஏளிமை, தாழ்வு, துணை, பற்றுக்கோடு, பெருமை
தஞ்சம் (tañcam)
  1. ஏளிமை, தாழ்வு, துணை, பற் றுக்கோடு, பெருமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தஞ்சம் (tañcam) — noun
  1. Negligible matter; எளிது. தஞ்சக் கிளவி யெண்மைப் பொருட்டே (தொல். சொல். 268)
  2. cf. taṃs. Degradation, discomfiture; தாழ்வு. (பிங்.) தஞ்சநம்பால் வரத் தக்கதோ (விநாயகபு. 65, 39)
  3. Smallness, littleness; அற்பம். தஞ்ச முண்ணி னஞ்சாந் தடமொன்று (பெரியபு. திருக்குறிப். 80)
  4. Support, help, prop, refuge; பற்றுக்கோடு. ஒருவரைத் தஞ்ச மென்றெண்ணாது (தேவா. 1197, 4)
  5. Refugee; deposit; அடைக்கலப்பொருள்
  6. Certainty; நிச் சயம். தஞ்ச மிவற்கென் வளையுநில்லா (திவ். பெரியதி. 2, 8, 9)
  7. Greatness; பெருமை. (யாழ். அக.)

IndoWordNet

தஞ்சம் — noun
  1. ஆபத்தில் இருப்பவர் அல்லது ஆதரவற்றவர் நாடும் பாதுகாப்பான இடம் அல்லது தஞ்சம்

அடைக்கலம் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தஞ்சம்
  1. எளிது
  2. தாழ்வு
  3. எளிமை
  4. பற்றுக்கோடு
  5. அடைக்கலப்பொருள்
  6. உறுதி
  7. பெருமை