தழை

தழை கீழ் நோக்கிய, Down ward ( via தழ் > தாழ் ) தாளிணைக டழைகொண்ட வன்பினொடு( பாயி. 3) மயிற்றோகை.தழைகோலி நின்றாலும் ( 347).

to sprout, shoot forth to thrive, grow luxuriant, as plants to hang down; to bow down

IndoWordNet

தழை — noun
  1. சிறிய இலை

இலை பங்கி தேயிலை

Tamil Wiktionary

தழை — பெயர்ச்சொல் (Noun)
  1. தழைகை
  2. *தாளிணைக டழைகொண்ட வன்பினொடு( பாயி. 3)
  3. மயிற்றோகை.தழைகோலி நின்றாலும் ( 347).
  4. பீலிக்குடை
  5. *தழைகளுந் தொங்கலுந் ததும்பி ( பெரியாழ். 3
  6. 4
  7. 1).
  8. தழையுடை; தழையாலான உடை
  9. ஒருவகை மாலை
  10. *தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலையும் ( 1338).
  11. சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேர்க்கப்படாத சீட்டு
  12. தாழ்
  13. *தழைந்தகாதும் ( கடவுள்வாழ். 8).
  14. செழி
  15. சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேராத சீட்டுக்களை இறக்கு

Winslow (1862)

தழை (taḻai) — noun
  1. Sprout, shoot, தளிர்
  2. Leaf, foliage, verdure, இலை
  3. Spray, twig. bough with leaves, இலைச்செறிவு. (c.)
  4. Pea- cock's tail, மயிற்றோகை
  5. A fan, or bunch of peacock's feathers, used as an ornament, பீலிக்குடை. ஆடுதழைதின்பதுபோலே. Like a goat cropping leaves; i. e. doing many things and all superficially
தழை (taḻai) — noun
  1. , கிறது, ந்தது, யும், தழைய, v. n. To sprout, shoot forth, to vegetate, தளிர்க்க
  2. To grow full of boughs; to thrive, as vegetables, தழைக்க
  3. To recover verdure, as drooping plants, &c., வாடியதுதுளிர்க்க.–Note. This word is not used like தழைக்க, with reference to persons
  • தழைந்திருக்கிறமரம் — A tree with shady branches.
  • தழைவானமரம் — A flourishing tree.
  • தழைகை — Sprouting, shooting, flourishing, as தழைவு.
  • தழைவு — Sprouting, shooting, germinating, தளிர்த்தல். 2. Luxuriance of growth, செழிப்பு. 3. Boughs, leaves, foliage, குழை. 4. Plumpness, sleekness, வளமை. 5. Increase, abundance, பெருக்கம்.
  • தழைவுகொடுக்க — To become plump, as the body.
தழை (taḻai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To flourish, to thrive, to grow luxuriantly, as vegetables, செழிக்க
  2. To flourish, as a family, people, state, &c., to multiply, to increase and prove lasting, வாழ. ஆல்போல்தழைத்துஅறுகுபோல்வேரோடிமூங்கில்போல் சுற்றமுசியாமல்வாழ்ந்திருப்பீர். May you prosper spreading like the banyan, taking root like the Agrostis linearis grass, and, surrounded by supports like the bambu, never fade away; a form of benediction to a young married couple
  • அன்புதழைக்க–அன்புதழைய — To abound in affection.
  • தழைத்தகுடி — A prosperous family.
  • தழைப்பு — Flourishing, thriving.

Fabricius (1972)

தழை — noun
  1. leaf, foliage, இலை
  2. green twigs with their leaves upon them, தளிர்
  3. a fan or bunch of peacock's feathers used as an ornament
  • ஆடு தழை தின்பதுபோலே — like a goat cropping leaves, said of persons who do many things and all super- ficially.
தழை — v. i.
  1. v. i. sprout, grow full of boughs, thrive, flourish (as plants, not persons) தளிர்.
  • தழைந்திருக்கிற மரம் — a tree with shady branches.
  • தழைகை — sprouting, shooting, தழைவு.
  • தழைவு — sprouting; 2. luxuriance of growth; 3. increase, abundance, பெருக்கம்; 4. plumpness.
தழை — v. i.
  1. v. i. grow luxuriantly thrive, செழி
  2. flourish, prosper (as persons) வாழு
  • தழைத்த குடி — a prosperous family.
  • தழைப்பு — flourish, thriving.
  • தழைத்து வாழ — to live prosperously with wealth and children and re- lations.

Tamil Moli Akarathi (1928)

தழை (taḻai)
  1. இலை, தழையென்னேவல், தளிர், பீலிக்குடை, மயிற்றோகை
தழை (taḻai)
  1. உலவை
தழை (taḻai)
  1. இலை, தழையென்னேவல், தளிர், பீலிக்குடை, மயிற்றோகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தழை³ (taḻai) — noun
  1. < தழை¹-
  2. Sprouting; தழைகை. தாளிணைக டழைகொண்ட வன்பினொடு (அரிச். பு. பாயி. 3)
  3. Sprout, shoot; தளிர்
  4. [M. taḻa.] Leaf, foliage; இலை. (திவா.)
  5. Spray, twig, bough with leaves; இலையோடுகூடிய சிறுகொம்பு
  6. Peacock's tail; மயிற்றோகை. தழைகோலி நின்றாலும் (திருக்கோ. 347)
  7. Fan; bunch of peacock's feathers, used as an ornamental fan; பீலிக்குடை. (பிங்.) தழைகளுந் தொங்க லுந் ததும்பி (திவ். பெரியாழ். 3, 4, 1)
  8. See தழையுடை. (புறநா. 116, உரை.)
  9. A kind of garland; ஒருவகை மாலை. தழையுங் கண்ணியுந் தண்ணறு மாலை யும் (சீவக. 1338)
  10. Gamboge. See பச்சிலை
  11. Cards other than honours in a game of cards; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையிற் சேர்க்கப் படாத சீட்டு