இலை

[1] இலை என்பது மரஞ்செடி கொடிகளின் ஓர் உறுப்பு. [2] இல்லை இதுவேஒளிச்சேர்க்கைவழி மரஞ்செடி கொடிகளின் உயிர்ப்புக்கு ஆற்றல் பெற உதவுவது. கதிரவனின் ஒளியைப் பெறும் இலைகள் பல்வேறு வடிவங்கள் கொண்டுள்ளன.இலைகளில் பச்சையம் என்ற நிறமி இருப்பதன் காரணமாக இலைகள் பொதுவாக பச்சை நிறத்தில் இருக்கின்றன.

leaf betel leaf plantain tree leaf

Tamil Wiktionary

இலை — பெயர்ச்சொல் (Noun)
  1. [1] இலை என்பது மரஞ்செடி கொடிகளின் ஓர் உறுப்பு.
  2. [2] இல்லை

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

வெற்றிலை கீரை மட்டை ஓலை புல் துளிர் தளிர் கொழுந்து பழுப்பு சருகு

Winslow (1862)

இலை (ilai) — noun
  1. A vegetable leaf, foliage, அடை
  2. (p.) Miserly character, உலோபத்தனம்
  3. Betel-leaf, வெற்றிலை
  • இலைகிள்ள — To cut or nip leaves in different figures with the nails –an amusement of women. See கைத்தொழில்.
  • இலைக்கதவு — A venetian door, or window.
  • இலைக்கலம் — Leaves stitched together and used as plates. (p.)
  • இலைக்கள்ளி — A medicinal plant, Euphorbia neriifolia, L. See கள்ளி.
  • இலைக்கறி — Herbs or leaves fit for food, அடகு.
  • இலைக்காம்பு — Stalk of a leaf.

Fabricius (1972)

இலை — noun
  1. a leaf of a tree or plant, foliage, தழை
  2. stripes in Venetian windows, இதழ்
  3. petal, பூவிதழ்
  4. miserely character, லோபம்
  5. spoke of a wheel, சக்கிரத்தின் ஆர்
  • இலைகிள்ள — to nip leaves, an amusement of women.
  • இலைக்கதவு — a venetian door or window.
  • இலைக்கறி–கீரை — a dish or green or pot herbs, .
  • இலைக்குறடு — a fine and long pair of pincers used by goldsmiths.
  • இலைக்கொடி — a betel-plant.
  • இலைதைக்க — to stitch leaves together.
இலை — v. i.
  1. v. i. be tasteless, ருசியற்றிரு
  2. lose taste for a thing, வாயரோசி
  • இலைத்தகரி — a tasteless curry.
  • இலைத்தபேச்சு — a useless, vain talk.
  • இலைத்தல் — being insipid or tasteless.

Tamil Moli Akarathi (1928)

இலை (ilai)
  1. இலைக்கறி, உலோபம், ஏடு, தழை, பத்திரம், வெற்றிலை
இலை (ilai)
  1. அடை, சதம், சதனம், தகடு, தண் ணடை, தமாலம், தலம், தழை, தளம், பத்திரம் பத்திரி, பலாசம், பலாசு, பன்னம், பாசடை, பாசிலை, முறி, அன்றியும், ஏடு-பனைக்கும் பூவிதழு க்குமுரித்து, ஓலை-பனை, தெங்கு, தா ழைக்குமரித்து
  2. மல்-ஈந்தில், கமு கு, தாழை தெங்கு பனை, வாழைக்கு முரித்து, அன்றியும், தோடு-தாழை, தெங்கு, பனை, பூவிதழ்க்கு முரித்து
இலை (ilai)
  1. உலோபம், தழை, தழைப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

இலை¹ (ilai) — noun
  1. Leaf; மரஞ் செடிகளின் இலை. இலை வளர்குரம்பை (சீவக. 1432)
  2. Petal; பூவிதழ். அகவிலை யாம்பல் (தேவா. 511, 8)
  3. Betel leaf, leaf of the Betel-pepper; வெற்றிலை. இலை பிளவதனை நடித்துக்கேட்கவும் (திருப்பு. 47)
  4. Wooden slats made to overlap one another as in a venetian-blind; கதவின் இலை
  5. Garland of green leaves and flowers; படலை மாலை. (பரிபா. 6, 19.)
  6. Foliage ornamental work on jewels; அணிகளின் இலைத்தொழில். இலை கொள்பூண் (சீவக. 1371)
  7. Mysore gamboge. See பச்சிலை. (தைலவ. தைல. 98.)
  8. Spoke of wheel; சக்கரத்தின் ஆர். இலைமுகத் துழலுகின்ற வெந்திரத் திகிரிநாப்பண் (பாரத. திரெள. 31)
  9. Blade of a weapon or instrument; ஆயுதவலகு. நச்சிலை வேற்படைவீரர் (சீவக. 2209)

IndoWordNet

இலை — noun
  1. சிறிய இலை
இலை — noun
  1. தாவரத்தின் தண்டிலிருந்து அல்லது கிளையிலிருந்து தோன்றுவது மெல்லியதாகவும் பச்சையாகவும் தட்டையாகவும் இருப்பதுமான பாகம்.

தழை பங்கி தேயிலை தாவரப் பகுதி தாவர பாகம் துளிர் முளை தளிர் பிரியாணி இலை துளசி வில்வ இலை அல்லூர இலை ஆலூக இலை கூவிர இலை கெந்தகற்ப இலை சிவத்துரும இலை சீபல இலை சுருக்கு இலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

இலை
  1. மரம் செடிகளின் இலை
  2. பூவிதழ்
  3. வெற்றிலை
  4. கதவின் இலை
  5. படலை மாலை
  6. அணிகளின் இலைத்தொழில்
  7. பச் சில
  8. சக்கரத்தின் ஆரம்
  9. ஆயுதவலகு