தும்பு

குற்றம் அநாகரிக வார்த்தை. வம்பு தும்பு பேசுபவன் நரம்பு முதலியவற்றில் விழுஞ் சிம்பு

alternative form of தும்மு (tummu, “to sneeze”) alternative form of தும்மு (tummu, “sneeze”) fault, blemish, defect

Tamil Wiktionary

தும்பு
  1. குற்றம்
  2. அநாகரிக வார்த்தை. வம்பு தும்பு பேசுபவன்
  3. ஓரம்
  4. நரம்பு முதலியவற்றில் விழுஞ் சிம்பு
  5. நார்
  6. வரம்பு
  7. கயிறு
  8. காண்...நெருஞ்சி (மலை.)
  9. கரும்பு ()
  10. தும்பு உண்டாக்கு - குற்றம் அறிதல்
  11. தூசி

Winslow (1862)

தும்பு (tumpu) — noun
  1. Fibre of vegetables, நார்
  2. A rope for tying beasts with, ஓர்கயிறு. (c.)
  3. Spot, blemish, defect. (See வம்பு.)
  4. A button or ball to fasten a dress
  5. [loc.] Dust, as தும், துகள்
  6. [prov.] A kind of fringe to a shawl, சிம்பு. சீலைகிழிந்துதும்புதும்பாய்ப்போயிற்று. The cloth is torn into threads. ஏசித்தும்புபிடுங்குகிறார்கள். They abuse and tear out the fibres; i. e. taunt each other with blemishes in character. [prov.]
  • தும்புக்கயிறு — A rope of cocoa, palmyra or other fibres.
  • தும்புச்சால்வை — A shawl with a fringe.
  • தும்புபோட — To twist or make a rope for tying beasts.
  • தும்புவாங்க — To strip off fibre.
தும்பு (tumpu) — noun
  1. [prop. தும்மு.] To sneeze.

Fabricius (1972)

தும்பு — noun
  1. fibre of vegetables; stings, நார்
  2. a rope to tie beasts with கயிறு
  3. a button
  4. dust, தும்
  5. a fringe to a shawl
  6. blemish, a fault, குற்றம்
  • சீலை தும்பு தும்பாய்ப் போயிற்று — the cloth is shred into threads.
  • தும்பிலே மாட்ட — to tie animals with a rope.
  • தும்புக்கயிறு — a rope of cocoa or other fibres.
  • தும்புசால்வை — a shawl with fringe.
  • தும்புபோட — to twist rope for tying beasts.
  • தும்புவாங்கி — to strip off fibre.
தும்பு — v. i.
  1. v. i. see தும்மு.

Tamil Moli Akarathi (1928)

தும்பு (tumpu)
  1. கரும்பு, கயிறு, குறைவு, சிம்பு, நார், நெருஞ்சில்
தும்பு (tumpu)
  1. ஓர்வகைக்கயிறு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தும்பு¹ (tumpu) — noun
  1. perh. துன்பு
  2. Fault, blemish, defect; குற்றம். தும்பறிப் புத்திசேன சொல்லிது குரவற் கென்ன (சீவக. 666)
  3. Uncivil, vulgar or slanderous language; அநாகரிக வார்த் தை. வம்பு தும்பு பேசுபவன்
தும்பு² (tumpu) — noun
  1. [M. tumpu.] Border, fringe; ஓரம். Tinn
  2. Frayed ends, as of a gut; நரம்பு முதலியவற்றில் விழுஞ் சிம்பு. கொடும்புரி மயிர்தும்பு முறுக்கிவை நான்கும் (சீவக. 721, உரை)
  3. Fibre; நார்
  4. Propriety, relevancy; வரம்பு. தும்பில்லாமற் பேசுகிறான். Loc
  5. Rope, tether; கயிறு. ஆர்த்த தும்பறுத்து விடுப்ப (திருவாலவா. 33, 14)
  6. Cow thorn. See நெருஞ்சி. (மலை.)
  7. Sugarcane; கரும்பு. (மலை.)
  8. Small globular pendant suspended from the tāli of Vallampar and Nattukkottai Chetti women; வல்லம்பர், நாட்டுக்கோட்டைச்செட்டி இவர்கள் பெண்டிர் அணி யும் ஒருவகைத் தாலியுரு
  9. [T. dummu.] Dust; தூசி. உள்ளெல்லாம் மிகவும் தும்பாக இருக்கிறது

IndoWordNet

தும்பு — verb
  1. மூக்கினுள் ஏற்படும் அரிப்பால் அல்லது ஜலதோஷத்தால் மூச்சுக் காற்றை பலத்த சத்தத்தோடு வெளிப்படுத்துதல்.

தும்மு வேலைசெய்