நடு

மையம் () இடைப்பட்டது வானத்தின் உச்சி

middle, centre zenith impartiality, uprightness

Tamil Wiktionary

நடு
  1. இடை
  2. மையம் ()
  3. இடைப்பட்டது
  4. வானத்தின் உச்சி
  5. அந்தரியாமி யான கடவுள்
  6. இடுப்பு
  7. நடுநிலை
  8. நீதி
  9. மிதம்
  10. வழக்கு
  11. பூமி
  12. நடுதல்

நடுவன் நடுவம் நடவு நடுநிலை நடுவர் நடுகல்

Winslow (1862)

நடு (naṭu) — noun
  1. The middle, இடை
  2. Centre, centricity, midst, மத்தி
  3. Intermediate as to place or time, that which intervence, இடையானது
  4. Equity, impartiality, justice, uprightness, நீதி
  5. Medium, moderation, மிதம்
  6. The waist, இடுப்பு
  7. Law-suit, வழக்கு
  8. The state, capacity, office, &c., of a judge or umpire, நியாயாதிபதித்துவம். (c.)
  9. (சது.) Earth, பூமி–This word is commonly used நட்டு in combination–as நட்டாறு, the midst of the river, நட்டுச்சி, exactly the meridian
  • நடக்கடல் — The mid-sea. நடுக்கடல்போனாலும்மறுப்படாமல்வரக்கடவீர்..... Even though you go into the midst of the sea, may you return without harm.
  • நடுக்கட்ட — [com. பொதுக்கட்ட.] To sequester property.
  • நடுக்கட்டு — A girdle. See under கட்டு.
  • நடுக்கண்டம் — The central portion of a continent. 2. The middle piece.
  • நடுக்காரர் — Arbitrators, judges, umpires.
  • நடுக்கிளி — The head player in a square. See under கிளி.
நடு (naṭu) — noun
  1. , கிறேன், நட்டேன், வேன், நட, v. a. To plant, to set trees, to place seeds, நாற்று நட
  2. To set up a pillar, pole or mast; to erect, நாட்ட
  3. (fig.) To establish a person, as a patron, ஸ்தாபிக்க. (c.)
  • நடுகல்–நட்டகல் — A sepulchral stone or monument; a pillar set up in token of victory, or other achievement.
  • நடுகூலி — See நடவுகூலி.
  • நட்டுக்கொண்டுநிற்றல் — Standing on the head. 2. Standing erect. 3. (fig.) Presisting improperly in a request or assertion. (c.)
  • நட்டுவிழல்–ஐங்குற்றத்தொன்று–தலைகீழாய்விழுதல் — . Nodding, one of the five ungraceful positions, . 2. Standing on the head and tambling, .
  • நட்டுவைத்தல் — . Establishing one as a patron. 2. Setting up a stone, pillar, &c., for a mark or token.
  • நட்டுவைத்தவன் — A patron.

Fabricius (1972)

நடு — noun
  1. the middle, இடை
  2. the centre, மத்தி
  3. equity, impartiality, நீதி
  4. the waist, இடுப்பு
  5. a law suit, வழக்கு
  6. the earth, பூமி. In comb. before a vowel நடு is commonly changed into நட்டு
  • நடுக்கட்ட — to sequester property.
  • நடுக்கட்டு — a girdle, an apartment in the middle of a building.
  • நடுக்காரர் — arbitrators, umpires, judges.
  • நடுக்குடி — the head family of a tribe or class; 2. a family of middling circumstances, rank etc.; 3. a household in the midst of others, as being safer, than if alone.
  • நடுக்கேட்க — to hear a dispute.
  • நடுக்கொண்ட வீடு — the middle house.
நடு — v. t.
  1. v. t. plant, set plants, trans- plant
  2. stick or fix in the ground a pole or prop, erect, நாட்டு
  3. esta- blish, ஸ்தாபி, நடல், நடுகை, v. n. planting
  4. transplanted plants
  • நடவு — planting, transplanting.
  • நடவுகாரிகள் — female planters of grain.
  • நடவுகாலம் — the time for planting paddy.
  • நடவுகூலி–நடுகூலி — wages for planting.
  • நடவுநட — to set plants, to transplant.
  • நடவுபயிர் — transplanted crop.

Tamil Moli Akarathi (1928)

நடு (naṭu)
  1. அரை, இடை, ஊடு, தொழில், நடுவென்னேவல், நீதி, பூமி, மிதம்
நடு (naṭu)
  1. அகடு, அணவு, இடை, உந்தி, ஒத்தல் கூழை, சமன், செப்பம், நள்ளு, நன ந்தலை, நா, நாப்பண், பகல், பிரமம், மத்திமம், மத்தியம், தமையம்
நடு (naṭu)
  1. இடை, நடுவென்னேவல், நீதி, பூமி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நடு² (naṭu) — noun
  1. Middle; இடை. நடுவூரு ணச்சு மரம் பழுத்தற்று (குறள், 1008)
  2. Centre; மையம். (அரு. நி.)
  3. That which is intermediate, as in place or time; that which intervenes; இடைப்பட்டது
  4. Zenith, topmost part of the heavens; வானத்தின் உச்சி. காலைக்கதிரோ னடுவுற்றதொர் வெம்மை காட்டி (கம்பரா. நகர்நீங்கு. 123)
  5. God as immanent Being; அந்தரியாமி யான கடவுள். கெடுவில் கேள்வியு ணடுவாகுதலும் (பரிபா. 2, 25)
  6. Waist; இடுப்பு. நடுங்க நுடங்கு நடுவுடைய விடங்கா லயிற்கண்ணி (திருக்கோ. 31)
  7. Impartiality, uprightness; நடுநிலை. நடுவாக நன்றிக் கட் டங்கியான் றாழ்வு (குறள். 117)
  8. Equity, justice; நீதி. (W.)
  9. Medium, moderation; மிதம்
  10. Lawsuit; வழக்கு. (W.)
  11. Earth, as the middle world; பூமி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நடு
  1. இடை
  2. மையம்
  3. வானத்தின் உச்சி
  4. நடுவு நிலை
  5. இடுப்பு
  6. நீதி
  7. மிதம்
  8. வழக்கு
  9. பூமி
  10. இடைப்பட்டது
  11. அந்தரியாமியான கடவுள்