நாணம்

வெட்கம் shyness, timidity நாணித்தலைக் குனிதல் - வெட்கித்தலை குனிதல்.

shyness, coyness, as a feminine quality, one of four மகடூஉக்குணம் (makaṭū’ukkuṇam) bashfulness in certain relationships; embarrassment, modesty shrinking, as a sensitive plant to a touch; shying, as a startled animal

Winslow (1862)

நாணம் (nāṇam) — noun
  1. Delicacy, modesty, shyness, as one of the four feminine qualities. See நற்குணம் under குணம்
  2. Bashfulness of some relations toward each other as of the mother-in-law toward her son-in-law, the father-in-law towards his daughter-in-law, &c., சிறுநாணம்
  3. Slight embarrassment, in the presence of a stranger or a superior; delicate regard, esteem or respect, அச்சம்
  4. Yielding, as a disease to its antidote; shying–as some beasts, or shrinking–as some plants from the touch, கூச்சம். (c.)
  • நாணங்கெட்டவன் — A man devoid of shame.
  • நாணக்கேடு — Impudence, immodesty, shamefulness.
  • நாணப்படுதல் — Being shame- faced, bashful, modest, &c., வெட்கப்படுதல். அவருடையசொல்லுக்கு இவன்நாணப்படுவான். He has respect for the gentleman's word.

Fabricius (1972)

நாணம் — noun
  1. bashfulness, shame, shyness, modesty, கூச்சம்.
  • நாணக்கேடு — impudence, immodesty.
  • நாணங்கெட்டவள் — an impudent woman.
  • நாணமாயிருக்க–நாணப்பட — to be shamefaced, bashful, modest.

Tamil Moli Akarathi (1928)

நாணம் (nāṇam)
  1. அச்சம்,அடக்கம், மதிப்பு, வெ ட்கம் இது மகடூவுக்குணம் நான்கில் ஒன்று
நாணம் (nāṇam)
  1. வெட்கம், இலச்சை, வெள்கல் சமழ்த்தல், வட்கல், இருளை, மானம் உட்கு
நாணம் (nāṇam)
  1. வெட்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாணம் (nāṇam) — noun
  1. Shyness, coyness, as a feminine quality, one of four makaṭūu-k-kuṇam, q.v.; மகடூஉக்குணம் நான்கனுள் ஒன்றான இலச்சை. (பிங்.)
  2. Bashfulness in certain relationships, as the mother-in-law towards her son-in-law, as a man in a gathering of women; embarrassment; வெட்கம். நனிநரண மீதூரா (சீவக. 736)
  3. Delicate regard; esteem, respect; பயபத்தி. அவருடைய சொல்லுக்கு இவன் நாணப்படுவான். (W.)
  4. Shame; sensitive dread of evil; keen moral sense; பழிச்செயல் முதலியவற்றால் உண் டாம் மானம். நாணொணாததோர் நாணமெய்தி (திருவாச. 30, 4)
  5. Yielding, as a disease to its antidote; தணிகை. (W.)
  6. Shrinking, as a sensitive plant to a touch; shying, as a startled animal; செடிகொடி முதலியவற்றுக்கு உண்டாம் கூச் சம். (W.)
நாணம் (nāṇam) — noun
  1. nāṇa < jñāna. Intelligence; knowledge; அறிவு. நாணமுடைய மரமுத லியாவையும் (நீலகேசி, 374).

IndoWordNet

நாணம் — noun
  1. ஒருவரை அல்லது ஒரு நிலையை எதிர்க்கொள்ள முடியாமல் பின் வாங்க வைக்கும் கூச்ச உணர்வு.
நாணம் — noun
  1. பிறர் முன்னிலையில் இயல்பாக இருக்க முடியாத அல்லது தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியாத தயக்க உணர்வு.

வெட்கம் கூச்சம் மனநிலைமை மனநிலை

Tamil Wiktionary

நாணம் — பெயர்ச்சொல் (Noun)
  1. வெட்கம்

[object Object]