கூச்சம்

Shyness

Fabricius (1972)

கூச்சம் — v. n.
  1. n. (கூசல்) bashfulness, mo- desty, timidity, weakness of the eye etc. the teeth on edge, ticklishness
  2. see கூர்ச்சம்
  • அக்குள் பாய்ச்சினால் கூச்சம் கூச்சமா யிருக்கும் — if you put the fingers in one's armpit, one will feel ticklish.
  • கூச்சக்காரன்–வாளி–ப்பட்டவன்–முள்ளவன் — a shy person, a ticklish person.
  • கூச்சப்பார்வை — defective sight.
  • கூச்சமாயிருக்க–கூச்சப்பட — to be bash- ful or ashamed, to be ticklish.
  • கூச்சம் தெளிந்தவன்–இல்லாதவன் — a shameless man; a fearless, bold man.

Tamil Moli Akarathi (1928)

கூச்சம் (kūccam)
  1. அச்சம், கண்பல் முதலியவற் றின் கூச்சம், நாணம், வெட்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கூச்சம்¹ (kūccam) — noun
  1. Shyness, bashfulness, modesty, delicacy, shame; நாணுகை. கைதொழூஉங் கூச்சங் களைந்து (சைவச. ஆசாரிய. 68)
  2. Ticklishness; உடல் கூசு கை
  3. Delicacy, as of an eye; unpleasant tingling, as of a tooth; கண் பல் முதலியன கூசு கை
  4. Hesitating, shrinking; மனமெழாமை. அந்தக் கொடியவனதுவீட்டிற் புகக் கூச்சம் உண்டாயிற்று
  5. Tremulousness, timidity, fear; அச்சத்தாலுண் டாகும் நடுக்கம். அவனைப் பார்க்கும்போதே கூச்ச மெடுக்கிறது. Colloq
கூச்சம்² (kūccam) — noun
  1. Small-sized post, used in building; கட்டடத்திற்கு உதவும் சிறு மரக்கட்டை. Loc.

IndoWordNet

கூச்சம் — noun
  1. இயல்புக்கு மாறான ஒன்றால் ஒருவருக்கு ஏற்படும் தயக்க உணர்வு
கூச்சம் — noun
  1. ஒருவரை அல்லது ஒரு நிலையை எதிர்க்கொள்ள முடியாமல் பின் வாங்க வைக்கும் கூச்ச உணர்வு.

வெட்கம் உணர்ச்சி உணர்வு சுரணை சுணை நுகர்வு நுகர்ச்சி பிரக்ஞை சுவாதீனம் ஸ்மரணை நாணம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

கூச்சம்
  1. நாணுகை
  2. உடல் கூசுகை
  3. கண், பல் ' முதலியன கூசுகை
  4. மனமெழாமை
  5. நடுக்கம்