வெட்கம்
Shame on you
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வெட்கம் (veṭkam) — noun
- < வெட்கு-
- Shame; disgrace; அவமானம். (சூடா.) வெட்கத்துக்காளினி நானோ (இராமநா. யுத்த. 32)
- Modesty, bashfulness, coyness; கூச்சம்
Winslow (1862)
வெட்கம் (veṭkam) — noun
- [vul. வெக்கம்.] Shame, modesty, bashfulness, நாணம். (c.) ஏன்வெட்கப்படுகிறாய். Why are you bashful?
- வெட்கக்கேடு — [appel. வெட்கங்கெட்டவன்.] Shamelessness, absence of shame.
- வெட்கங்கெடுக்க — To treat one shamefully.
- வெட்கஞ்சிக்கி — Want of modesty. See சிக்கி.
- வெட்கப்பட — To be ashamed, to feel shame, to be bashful.
- வெட்கப்படுத்த — To put one to shame, to disgrace.
Fabricius (1972)
வெட்கம் — noun
- shame, bashfulness. modesty, நாணம்.
- வெட்கக்கேடு — shamelessness.
- வெட்கங்கெடுக்க — to disgrace one.
- வெட்கங் கெட்டவன் — a shameless fellow, one that is past shame.
- வெட்கப்பட — to be ashamed.
- வெட்கப்படுத்த — to but one to shame.
Tamil Moli Akarathi (1928)
வெட்கம் (veṭkam)
- இருளி, இலச்சை, உட்கல், உட்குசமழ்த்தல், சமழ்ப்பு, நாணம், நாண், மறுத்தல், மானம், வட்கல், வெள்கள்