ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர். ஒளிமறையுரு. கதிரவன் ஒளியை மறைத்து நிற்கும் பகுதியில் வெப்பம் குறைவாக இருப்பதால், குளிர்ச்சி, காப்பு. தெளிந்த நீர் அல்லது பளபளப்பான தளத்தின் மீது ஒரு பொருளின் புற உருவம் எதிரொளியாகப் பட்டுத் தோன்றும் ஒளியுரு. ஏதிரொளியுரு
shadow, shade image, reflection (as in a mirror, water, etc) to cast shadow; to shade
Tamil Wiktionary
நிழல்
சாயை
சாயல்
பிரதிபிம்பம்
அச்சு
ஒளி
குளிர்ச்சி
அருள்
நீதி
புகலிடம்
தானம்
செல்வம்
மரக்கொம்பு
நோய்
Winslow (1862)
நிழல் (niḻal) — noun
Shade, shadow, சாயை
Image or reflection in mirror, water, &c., விம்பம்
Justice, equity, நீதி. (பிங்.) நிழல்நல்லதுமுசிறுபொல்லாது. Shade is pleasant, the red ants (under it) unpleasant; i. e. the patronage of the great is good, those around are troublesome. நிழல்நிற்கிறதாபார். See whether there is any shadow; i. e. see whether the sun shines. ஒதுங்கநிழலில்லை. There is no shade to resort to
There is no place of refuge. அண்டநிழலில்லை. There is no shade; i. e. no place of refuge. தன்னிழல்தன்காற்கீழ்வர–தன்னிழல்தன்னடிக்கு வர. When one's shade is under foot; i. e. when it is exactly noon
நிழலாட — To be reflected as an image in water, a mirror, &c.
நிழலாட்டம் — Any thing like a shadow, shade in painting, &c. 2. Typical representation, adumbration, 3. A mere phantom.
நிழலிட — To cast a shadow, to over–shadow, to shade. 2. To reflect objects, சாயைகாட்ட.
நிழலுணக்க–நிழலுலர்த்த — To dry medicines in the shade. See உலர், v.
நிழலொதுக்கு — A shady covert or retreat.
நிழலோடுதல் — Lengthening of a shadow.
Fabricius (1972)
நிழல் — noun
shadow, shade
image, reflection in a mirror etc., சாயை
type, முன்னடையாளம்
phantom, தோற்றம்
(fig.) protection, shelter, அடைக்கலம்
light, splendour, ஒளி
wealth, prosperity, செல்வம்
disease, ailment, நோய்
justice, equity, நீதி
frigidity, குளிர்ச்சி
நிழல் நல்லது முசிறு பொல்லாது — shade is pleasant, the red ants unpleasant; the patronage of the great is good, those around are troublesome.
நிழலாட — to be reflected as an image in a looking glass.
நிழலாட்டம் — a typical or shadow representation, adumbration, phantom.
நிழலிட — to cost a shadow, to shade; 2. to reflect images.
நிழலிலே — in the shade, under protection.
நிழலுணக்க–நிழலுலர்த்த–நிழலுலர்த் தலாயுலர்த்த — to dry medicines in the shade.