உருவம்

கண்ணால் கண்டுணரக் கூடியது. வடிவமைப்பு - shape Different Type of Shapes --- பல தரப்பட்ட வடிவங்கள்

shape, figure, form statue beauty

Winslow (1862)

உருவம் (uruvam) — noun
  1. Shape, form, figure, likeness, features, gestures, &c., வடிவம்
  2. Beauty, symmetry, அழகு
  3. Image, idol, statue, சொரூபம்
  4. Body, human or other, உடல்
  5. (p.) Color, good color, நிறம். உருவத்தார்புனையவந்தவொண்டொடி. Adorned with bracelets, the damsel came to invest her lover with a beautiful garland. (நைட.)
  • உருவங்காட்டி — A glass, mirror, looking glass.
  • உருவசாத்திரம் — The knowledge of the shape, feature, lines, &c., of the human body, including palmistry and physiognomy, considered as indicating the moral and mental characteristics of the individual. See கலைஞானம்.
  • உருவமாற — To be transformed.
  • உருவமெடுக்க — To assume a form–as a deity, வடிவமெடுக்க.

Fabricius (1972)

உருவம் — noun
  1. உருவு, s. shape, form, figure, வடிவம்
  2. beauty, அழகு
  3. image, idol, ரூபம்
  • உருவம் காட்டி — a mirror.
  • உருவம் மாற — to be transformed.
  • உருவசாஸ்திரம் — physiognomy.
  • உருவச்சிலை — a statue.
  • உருவப்படம் — a portrait, a map.

Tamil Moli Akarathi (1928)

உருவம் (uruvam)
  1. அழகு, உடலுறுப்பு, உடல், காணக்கூடியது, சொரூபம், நிறம், வடிவம், விக்கிரகம்
உருவம் (uruvam)
  1. உடல், வடிவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

உருவம் (uruvam) — noun
  1. < rūpa
  2. Shape, visible form, figure; வடிவம். சோதியாய்த் தோன்று முருவமே (திருவாச. 22, 9)
  3. Body; உடல். உரு வமு முயிரு மாகி (தேவா. 1028, 3)
  4. Beauty; அழகு. உருவப்பூணினாய் (நைடத. தேவியைக். 3)
  5. Colour, hue; நிறம். உருகப் பல்பூத் தூஉய் (திருமுரு. 241)
  6. Disguise, assumed form; வேஷம். வலியி னிலைமையான் வல்லுருவம் (குறள், 273)
  7. Die used in gaming; கவறு. முன்னாயம் பத்துருவம் பெற்றவன் மனம்போல (கலித். 136)
  8. Repetition of mantras: மந்திரவுரு. நின்றிரண்டுருவ மோதி (சீவக. 1289)
  9. Image made of clay or fashioned of brick, idol, statue; பிரதிமை
  10. (Buddh.) Bodily form, one of pan̄ca-kantam, q.v.; பஞ்ச கந்தங்களுளொன்று. ஒங்கியவுருவமோடும் (சி. சி. பர. செளத். 30)

IndoWordNet

உருவம் — noun
  1. மனிதன், விலங்கு முதலியவற்றின் வெளித்தோற்றம்.
உருவம் — noun
  1. பார்வைக்குத் தெரியும் புற வடிவம்.
உருவம் — noun
  1. பார்வைக்குத் தெரியும் படி புற வடிவம்

ஞானம் அறிவு நிழல் ஓட்டுத்தையல் அறுங்கோணம் சங்குவடிவம் குழி விஷயம் வர்க்கம் முக்கோணம் மண்டலம் அரைவட்டம் சமகோணம் வேடம் வேஷம் போலி நெசவு தோற்றம் உருவமைப்பு தோற்றமைப்பு அங்கஅமைப்பு உடல் உடலமைப்பு பொருள் பிம்பம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

உருவம்
  1. வடிவம்
  2. உடல்
  3. அழகு
  4. நிறம்
  5. வேடம்
  6. சிலை
  7. மந்திரவுரு
  8. கூறு
  9. தெய்வத் திருமேனி