விளைவு

result, effect

consequence, result, effect growth, ripening maturity

Tamil Wiktionary

விளைவு — பெயர்ச்சொல் (Noun)
  1. பலன்

[object Object]

Tamil Moli Akarathi (1928)

விளைவு (viḷaivu)
  1. சம்பவிப்பு, தானியம், பயன், மேகம், வயல்
விளைவு (viḷaivu)
  1. போகம், வளாவல்
விளைவு (viḷaivu)
  1. மேகம், வயல், விளைதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விளைவு (viḷaivu) — noun
  1. Growth; ripening; விளைகை
  2. Maturity; முதிர்ச்சி. விளைவமை தயிரொடு மிசை குவிர் (சீவக. 122)
  3. Old age; முதுமை. (பிங்.)
  4. Produce, crop, yield; விளைபொருள். விச்ச தின்றியே விளைவு செய்குவாய் (திருவாச. 5, 96)
  5. Fruit; பழம். வெள்ளில் விளைவுதிரும் (பு. வெ. 10, சிறப்பிற். 1)
  6. Result, consequence; பயன். விளைவின்கண் வீயா விழுமந் தரும் (குறள், 284)
  7. Success; gain; கைகூடுகை. வேண்டிய பொருளின் விளைவு நன்கறிதற்கு . . . சொல்லோர்த்தன்று (பு. வெ. 1, 4)
  8. Increase; ஆக்கம். (நாமதீப. 623.)
  9. Event, happening; நிகழ்ச்சி. விளைவுரை யென்று விட்டார் . . . மெய்ம்மை யோர்வார் (கம்பரா. பிணிவீ. 116)
  10. Place where anything is produced; விளையுமிடம். வினைக்கு விளைவாயது (மணி. 4, 113)
  11. Field; வயல். (யாழ். அக.)
  12. Cloud; மேகம். (பிங்.)
  13. (Drama.) Denouement or solution in a play, one of five nāṭaka-c-canti, q.v.; நாடகச்சந்தி ஐந்தனு ளொன்று. (சிலப். 3, 13, உரை.)

IndoWordNet

விளைவு — noun
  1. ஒருவரால் அல்லது ஒரு செயலை செய்வதால் விளையும் சாதகமான விளைவு.
விளைவு — noun
  1. ஒரு செயலின் காரணமாக உண்டாகும் பலன்.
விளைவு — noun
  1. செயல் முதலியவற்றின் மூலமாக விளைவது
விளைவு — noun
  1. செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செய்வது
விளைவு — noun
  1. தூண்டுதலின் மூலமாக நடக்கும் ஒரு செயல்

உபயோகம் பயன் நன்மை பலன் வேலை பணி கடிதபோக்குவரத்து நற்பயன்பாடு நல்லபயன்பாடு தாக்கம் செயல் கர்மபலன் வினைப்பயன் முன்வினைப்பயன் மீதி மிச்சம் எச்சம் தேர்வுமுடிவு தேர்வுபலன் பிரதிபலன் கைமாறு பதில்நன்மை. தெய்வசித்தி அனுகூலமற்றவை வீரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விளைவு
  1. நிகழ்ச்சி
  2. விளைகை
  3. முதுமை
  4. விளை பொருள்
  5. பழம்
  6. பயன்
  7. கைகூடுகை
  8. ஆக்கம்
  9. விளையுமிடம்
  10. வயல்
  11. மேகம்
  12. நாடகச்சந்தி ஐந்தனுள் ஒன்று