நீட்டு

(எ.கா) -. இன்னும் கையை நீட்டு. நீட்டினால், அத்தட்டினைப் பிடித்துவிடலாம்? - extend - तानना

to lengthen, reach forth, extend, stretch out to jut, project, stick out, point out to straighten

Tamil Wiktionary

நீட்டு

[object Object], [object Object]

Winslow (1862)

நீட்டு (nīṭṭu) — noun
  1. Length of time of space, நீளம்
  2. See நீட்டு, v. (c.) நெடுநீட்டுக்குத்தவணைசொல்லுகிறான். He is adding term to term; i. e. putting off paying
  • நீட்டுப்போக்கு — Tallness and robustness, நெடுமைவலிமை. 2. Spaciousness, width, broadness, width and length, அகலநீளம். 3. One's ability, pecuniary or other, திராணி. நீட்டுப்போக்கானஆள். A tall, robust man. 2. A rich man, one living in state.
  • நீட்டுப்போக்கறிய — To be acquainted with one's circumstance or abilities.
  • நீட்டுமுடக்கு — A readiness to give and receive, to lend and borrow; an accommodating disposition, கொடுக்கல் வாங்கல். 2. Pecuniary ability, &c., as நீட்டுப்‌போக்கு, 3.
  • நீட்டுமுடக்கில்லாதவன் — A miser, an unaccommodating person. 2. One of narrow circumstances unable to defray expenses.
நீட்டு (nīṭṭu) — noun
  1. , கிறேன், நீட்டினேன், வேன், நீட்ட, v. a. To stretch a rope: to stretch out the hand; to extend, lengthen; to protrude the tongue, the head &c.; to reach forth, to draw out wire &c., நீடிக்கச்செய்ய
  2. To make wire by hammering, to beat, அடித்துநீட்ட
  3. [offixed to கை.] To give, to bestow, ஈய
  4. To prolong, delay, protract, procrastinate, defer, retard, தாமதப் படுத்த. இவள்வெகுநீட்டி. She carries her head high. நீட்டவுமாட்டார்முடக்கவுமாட்டார். He will neither stretch nor bend; i. e. he will neither lend nor borrow; is miserly. அதெல்லாம்ஏன்னிடத்தில்நீட்டாதே. Do not boast much to me. நீட்டினகைமுடக்கக்கூடாது. One could not draw in a stretched hand (so thick is the crowd, &c.)
  • நீட்டாள் — An attending or waiting servant, வேலையாள்.
  • நீட்டல்–நீட்டு — The act of extending, stretching, &c., as the verb.
  • நீட்டலளவு–நீட்டலளவை–நீட்டளவை — Long measure, one of the four kinds of measure, நான்களவையிலொன்று.
  • நீட்டலளவையாகுபெயர் — One of the four kinds of அளவையாகுபெயர், according to which a measuring rod is put for the piece of land measured.
  • நீட்டல்குறுக்கல் — Diæresis and synæresis, separating and combining. Compare குறுக்கல்.
  • நீட்டல்மானம் — Long measure, நீட்டலளவை.

Fabricius (1972)

நீட்டு — noun
  1. length of time or space, நீளம்.
  • நீட்டுப்போக்கு — tallness and robustness, spaciousness, breadth & length; 2. ability, circumstances.
  • நீட்டுப்போக்கான ஆள் — a tall robust man; 2. a rich man, one living in state.
  • நீட்டுப்போக்கறிய — to be acquainted with one's circumstances or abilities.
  • நீட்டுமுடக்கு — lending and borrowing.
  • நீட்டுமுடக்கில்லாதவன் — one unable to defray expenses; 2. a miser, an unaccommodating person.
நீட்டு — v. t.
  1. v. t. extend, stretch out, நீள மாக்கு
  2. beat out and lengthen
  3. give, கை நீட்டு
  4. delay, protract, தாமதப்படுத்து
  • நீட்டல்–நீட்டு — act of extending, lengthening etc.
  • நீட்டலளவை — long measure.
  • நீட்டாள் — an attending or waiting servant.
  • நீட்டிக்கிடக்க — to lie stretched out.
  • இவள் வெகுநீட்டி — she carries her head high.

Tamil Moli Akarathi (1928)

நீட்டு (nīṭṭu)
  1. நீட்டேன்னேவல், நீளம், நெ டும்பொழுது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நீட்டு² (nīṭṭu) — noun
  1. < நீட்டு-
  2. Length, as of time or space; நீளம். பத்திரம் நீட்டிலே மடித் திருந்தது
  3. Distance; தூரம். மதுரை நீட்டைந்து கூப்பிடு (திருவாலவா. 26, 8)
  4. Rescripts, writs, as of a king; திருமுகவோலை. சித்திர சேனனீட் டவிழா (உபதேசகா. சிவத்துரோ. 174). (T. A. S. II, i, 4.)

IndoWordNet

நீட்டு — verb
  1. சுருங்கியிருக்கும் பொருளை இழுத்து பரப்புவது

இழு பரப்பு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நீட்டு
  1. நீளம்
  2. தூரம்
  3. திருமுக ஓலை