நெய்தல்

ஆம்பல்; அல்லி; வெள்ளாம்பல்; செவ்வாம்பல்; கருங்குவளை; அகத்திணைகள் ஐந்தினில் ஒன்று (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை).

Weaving

Tamil Wiktionary

நெய்தல்
  1. ஆம்பல்; அல்லி; வெள்ளாம்பல்; செவ்வாம்பல்;
  2. கருங்குவளை;
  3. அகத்திணைகள் ஐந்தினில் ஒன்று (குறிஞ்சி
  4. முல்லை
  5. மருதம்
  6. நெய்தல்
  7. பாலை).
  8. பத்து இலட்சம்

Winslow (1862)

நெய்தல் (neytal) — noun
  1. A class of water-flowers, ஆம்பல், Nymphæ alba
  2. Maritime tract, one of the five kinds of திணை, கடலுங்கடல் சார்ந்தஇடமும்
  3. As நெய்தல்நிலத்துரிப்பொருள். See திணை. –The two water-flowers are கருநெய்தல், the dark; and வெண்ணெய்தல், the white
  • நெய்தற்கருப்பொருள் — Men, beasts, and other living creatures, things, and employments, peculiar to maritime tracts viz.: 1. நெய்தலியாழ், lute, known by the name of விளரி. 2. நெய்தலுணவு, food, fishes, lobsters, &c. 3. நெய்தலூர், villages, as பட்டினம், பாக்கம். 4. நெய்தல் விலங்கு, the சுறா fish, Squalus carcharias. 5. நெய்தற்பண், melody, செவ்வழிப்பண். 6. நெய்தற்பறை, drum, as பம்பை, &c. 7. நெய்தற்புள், birds, the water-crow, &c. 8. நெய்தற்றலைவர், chiefs, heads, &c., with their females, as சேர்ப்பன், புலம்பன். 9. நெய்தற்றெய்வம், the god Varun'a. 10. நெய்தற்றொழில், professions, as fishing, salt making, &c. 11. நெய்தற்பூ, flowers, as the fragrant flower of Pandanus deratissima, &c. 12. நெய்தல்மரம், trees, as the silk-cotton tree, &c. 13. நெய்தல் மாக்கள், inhabitants, as fishermen, salt-makers, &c. 14. நெய்தல்நீர், water as the sea.
  • நெய்தற்றிறம் — The different tunes appropriate to a maritime district.
  • நெய்தனிலம் — Maritime district.
  • நெய்தனிலத்துரிப்பொருள் — A female bemoaning the absence of her lover.

Fabricius (1972)

நெய்தல் — noun
  1. a class of water-flowers nymphaea alba
  2. maritime tract, நெய்தனிலம்
  • நெய்தல் கிழங்கு–நெய்தல் — the bulb of the plant.
  • நெய்தற்றிறம் — the different tunes appropriate to a maritime district.

Tamil Moli Akarathi (1928)

நெய்தல் (neytal)
  1. ஆடைமுதலியநெய்தல், ஆம் பல், இரங்குதல், ஐந்நிலத் தொன்று அது கடலுங் கடல் சார்ந்த விடமும், சாப்பறை, புலர்ந்தோர் புலம்பல்
நெய்தல் (neytal)
  1. ஆம்பல், ஓர்நிலம், நெய்யல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நெய்தல் (neytal) — noun
  1. perh. நெய்³-. [M. neytal.]
  2. [K. neydal.] White Indian water-lily, Nymphaea lotus alba; வெள்ளாம்பல். பல் லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்கும் (ஐங்குறு. 2). (திவா.)
  3. Blue nelumbo. See கருங்குவளை. காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல் (குறிஞ்சிப். 84)
  4. Tuber of red Indian water-lily; செங்கழு நீர்க்கிழங்கு. (சங். அக.)
  5. Maritime tract; கடலும் கடல்சார்ந்த இடமும். ஏற்பாடு நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும் (தொல். பொ. 8)
  6. Sorrow of lovers due to separation, assigned by poetic convention to the maritime tract; நெய்தற்றிணை யின் உரிப்பொருளாகிய இரங்கல். நெய்தல் சான்ற வளம்பல (மதுரைக். 325)
  7. Funeral drum; சாப்பறை. ஓரினெய்தல் கறங்க (புறநா. 194)
  8. A big number; ஒரு பேரெண். நெய்தலுங் குவளை யும் (பரிபா. 2, 13)

IndoWordNet

நெய்தல் — verb
  1. துணி, பாய் முதலியவற்றை உருவாக்குவதற்காகத் தறியில் நீளவாட்டில் நூலை அல்லது கோரையை வைத்து குறுக்குவாட்டில் கோர்த்துப் பின்னுதல்.

நெய் செய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நெய்தல்
  1. ஆடை முதலியவை நெய்தல்