பனி
1. dew, snow, frost 2. fog, mist 3. ice பெய்கிறது. என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
to be bedewed, have dew on to flow out; to be shed, poured up to rain incessantly, constantly
Winslow (1862)
பனி (paṉi) — noun
- Dew, mist, fog, haze, இமம். [common usage]
- Coldness, coolness, குளிர்
- Fear, reverence, dread, அச்சம்
- Trembling, agitation, shivering with cold, quaking, நடுக்கம்
- Distress, suffering, sorrow, துன்பம்
- Any thing refreshing, soothing, gratifying, குளிர்ச்சி. பனிக்கண்திறந்தால் மழைக்கண்திறக்கும். If dew fall, it will soon rain
- பனிக்கட்டி — Hard frost, உறைந்த பனி. 2. Snow, உறைந்தமழை. 3. As உறைந்தநீர்.
- பனிக்காலம் — Dewy season.
- பனிக்கொட்டுதல் — Dew falling heavily.
- பனிக்கதிர் — Moon, the cool rayed, சந்திரன். (சது.)
- பனிக்காடு — Thick fog.
- பனிக்காற்று — [also ஊதற்காற்று.] Cold wind in the dewy season, commonly impregnated with dew.
பனி (paṉi) — verbal noun
- , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To tremble, to be agitated, to shiver, quake, நடுங்க
- To be shed, to be poured out, to flow or fall out, to distil, சொரிய
- To rain incessantly, to drizzle constantly, விடாமழைபெய்ய
- To suffer, to be in pain, வருந்த. (சது.)
- பனிப்பு — Agitation, shedding, &c., as the verb.
- பனிப்புக்கட்ட — To strike or influence unfavorably, as cold.
Fabricius (1972)
பனி — noun
- dew, fog, mist
- coldness, குளிர்
- fear, reverence, அச்சம்
- distress, sorrow, துன்பம்
- anything gratifying or soothing, குளிர்ச்சி
- quaking, trembling. நடுக்கம்
- பனிக் கட்டி–உறைந்த பனி–உறைந்த மழை–உறைந்த நீர் — hard frost, ; 2. snow, ; 3. ice, .
- பனிக் காடு — thick fog.
- பனிக் காலம்–ப்பருவம் — the dewy season.
- பனிக்காற்று — wind in the dewy season.
- பனி–பன்னீர்–ககுடம் — uterus.
- பனிநீர்–பன்னீர் — see .
பனி — v. i.
- v. i. drizzle incessantly, தூறு
- tremble, நடுங்கு
- suffer, வருந்து
- be poured out, flow or fall out
- பனிப்பு — agitation, shedding (as the verb).
Tamil Moli Akarathi (1928)
பனி (paṉi)
- அச்சம், இக்கட்டு, குளிர், துக்கம், தூளி, நடுக்கம், பயம், பனியென் னேவல், பெய்யும்பனி
பனி (paṉi)
- இமம், துகினம், நீகாரம், மஞ்சு, பனிக்காற்று - ஊதை, கூதிர்
பனி (paṉi)
- அச்சம், குளிர், துன்பம், நடுக் கம், பனியென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பனி² (paṉi) — noun
- Dew; நீராவி குளிர்ந்துவிழுந் துளி. (நிகண்டு.)
- See பனிக்கட்டி. பனிபடு நெடுவரை (புறநா. 6)
- Chill, cold; குளிர். பெரும்பனி நலிய (நெடுநல். 7)
- Coolness; குளிர்ச்சி. பனிநீர்க் கங்கை (கம்பரா. கையடை. 12)
- Water; நீர்
- Tears; கண்ணீர். கணார்ந்தன பனியே (ஐங்குறு. 208)
- Rain; மழை. குன்றெடுத்துப் பாயும் பனிமறைத்த பண்பாளா (திவ். இயற். 1, 86)
- Mist, fog, haze; மஞ்சு. பனிக்காடு. (W.)
- That which is refreshing, soothing, gratifying; இனிமையானது. பனிக்கனி வாய்ச்சியர் (கம்பரா. நீர்விளையாட்டு. 22)
- Fear, dread; அச்சம். (பிங்.)
- Trembling; agitation; quaking; நடுக்கம். பனியரும்பி (குறள், 1223)
- A kind of disease; நோய்வகை. (சிலப். 4, 6, உரை.)
- Fever; சுரம். Nāñ
- Distress, suffering; துன்பம். ஆப்பனித் தாங்கிய (நான்மணி. 2)
- Sorrow; துக்கம். (யாழ். அக.)
IndoWordNet
பனி — noun
- குளிர் காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.
பனி — noun
- குளிர்காலத்தில் காற்றில் உணர்கிற குளிர்ச்சி அல்லது காற்றில் இறங்குகிற ஈரம்.
பனிகட்டி பனிதுளி இயற்கைப் பொருட்கள்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பனி
- குளிர்ந்துவிழுந் துளி
- காண்க: பனிக்கட்டி
- குளிர்
- குளிர்ச்சி
- நீர்
- கண்ணீர்
- மழை
- மஞ்சு
- இனிமையானது
- அச்சம்
- நடுக்கம்
- நோய் வகை
- சுரம்
- துன்பம்