பிணை

ஒன்றோடு ஒன்றை சேர்த்தல் join, bond, attach பெண் மான்

tie, ligature, bandage bail, security, guarantee; pledge consent, agreement

Tamil Wiktionary

பிணை
  1. ஒன்றோடு ஒன்றை சேர்த்தல்

Winslow (1862)

பிணை (piṇai) — noun
  1. Bail, security, guaranty, pledge, suretyship. See ஜாமீன். (c.)
  2. Consent, agreement, உடன்பாடு
  3. Tie, ligature, bandage, கட்டு
  4. Flower-garland, பூமாலை
  5. Female of the elephant, horse, camel, ass, deer, pig, bosgrunniens, and dog, யானை முதலியவற்றின்பெண்
  6. Deer, மான்
  7. Desire, love, affection, ஆசை. (சது.)
  8. As பிணையல். மாடுகள்பிணைவருகிறது. The oxen go round about the threshing floor. (R.)
  • பிணைகழிக்க — To transfer the bail to another, he becoming responsible.
  • பிணைகாரன்–பிணைக்காரன்–பிணையாளன்–பிணையாளி — One who stands bail, a sponsor, a bondsman, a guarantee, உத்தரவாதி.
  • பிணைகொடுக்க–பிணைவைக்க — To give bail or security.
  • பிணைக்கடுதாசி–பிணைச்சீட்டு–பிணைமுறி–பிணையுறுதி — A bail-bond, a bond of recognizance.
  • பிணைசொல்ல — To become bail for one by promise.
  • பிணைநிற்க — To stand security for one.
பிணை (piṇai) — verbal noun
  1. , கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To entwine, to conjoin as இணைய
  2. To copulate, [said of snakes] புணர–as பாம்புபிணைதல். (c.)
  • பிணைவு — Junction, joining, coupling, bracing, இசைவு. 2. (சது.) Copulation, புணர்ச்சி.
பிணை (piṇai) — infinitive
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To join together; to link, to unite, to bind or fasten together, to couple, to join rafters, &c., as இணைக்க
  2. To tie, கட்ட. (c.) அவன்மேலில்லாததும்பொல்லாததும்பிணைத்தான். . . He has calumniated him, (lit.) bound upon him falsehood and evil
  • அறுந்தஇழையைப்பிணைக்க — To tie broken threads together.
  • பிணைத்தோட்ட — To drive the பிணையல் bullocks on the threshing floor.
  • பிணைப்பு — Linking, bracing, joining.

Fabricius (1972)

பிணை — noun
  1. a bail, security, surety, சாமீன்
  2. desire, விருப்பம்
  3. consent, agreement, உடன்பாடு
  4. a flower garland, பூமாலை
  5. female of the elephant, horse, camel, ass, deer, pig, bos grunniens and dog
  6. a deer, மான்
  7. v. n. same as பிணையல்
  • மாடுகள் பிணைவருகிறது — the oxen go round about a threshing.
  • பிணைகாரன்–யாளி — one who stands bail or is surety for another.
  • பிணை கொடுக்க–வைக்க — to give security.
  • பிணைக்கடுதாசி–ச்சீட்டு–முறி–உறுதி — a bail bond.
  • பிணை சொல்ல — to become bail for one by promise.
  • பிணை நிற்க–ப்பட–போக — to stand surety for one.
பிணை — v. i.
  1. v. i. entwine, இணை
  2. copulate, புணர்
  • பிணைவு — closeness, connexion, copulation.
பிணை — v. t.
  1. v. t. tie together, unite, இணை
  2. bind, yoke, கட்டு
  • அறுந்த இழையைப் பிணைக்க — to tie broken threads together.
  • ஒருவன் பேரில் இல்லாதும்–இல்லாததும்–பொல்லாததும்–பிணைக்க — பொல்லாதும் , to calumniate one.
  • பிணையல் — ( பிணைசல்) v. n. brace, couple, pair, a row of cattle; 2. the hinge of a gate or chest; 3. fastening of a yoke; 4. a garland or string of beads entwined; 5. (a negative form of the optative) join not, பிணைக்காதே.
  • பிணையலடிக்க–பிணையடிக்க–பிணைகட்ட — to tie the oxen in a row together for threshing.
  • பிணையல் மாடு–பிணை மாடு — an ox yoked or tied to another.

Tamil Moli Akarathi (1928)

பிணை (piṇai)
  1. ஆசை, உடன்பாடு, ஒட்டகம், கவ ரிமா கழுதை குதிரை நாய் பன்றி புல்வாய் யனை யிவற்றின் பெண், கட்டு, பிணையென்னேவல், பூமாலை
  2. மான், வதிட்பொருள்
பிணை (piṇai)
  1. ஆசை, உடன்பாடு, ஒட்டகம், கவ ரி, கழுதை, குதிரை, நாய், பன்றி, புல் வாய், யானை இவற்றின் பெண், கட்டு, பிணையென்னேவல், பூமாலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிணை³ (piṇai) — noun
  1. < பிணை¹-
  2. Protecting with loving care; புறந்தருகை. (தொல். சொல். 338.)
  3. Love, desire; விருப்பம். (தொல். சொல். 338, சேனா.)
பிணை⁴ (piṇai) — noun
  1. < பிணை²-
  2. Being knit together; இணைக்கப்படுகை. பிணையார மார் பம் (பு. வெ. 12, 6)
  3. Joint in planks; பொருத்து. இதையுங் கயிறும் பிணையு மிரிய (பரிபா. 10, 54)
  4. Tie, ligature, bandage; கட்டு
  5. Bail, security, guarantee; pledge; உத்தரவாதம். பிணைக் கொடுக்கிலும் போகவொட்டாரே (திவ். பெரியாழ். 4, 5, 2)
  6. Consent, agreement; உடன்பாடு. (யாழ். அக.)
  7. Female of animals; விலங்கின் பெண். (பிங்.)
  8. Doe, hind, female deer; பெண்மான். பிணையேர் மடநோக்கும் (குறள், 1089)
  9. Flower garland; பூமாலை. வெறிகொண்ட முல்லைப் பிணை மீது (பெரியபு. கண்ணப். 57)
பிணை (piṇai) — noun
  1. perh. பிணை-. cf. புணை. Raft, boat; தெப்பம். துயர்க்கடலை நீந்தும் பிணையே (மான்விடு. 52).

IndoWordNet

பிணை — verb
  1. கயிற்றினால் காலை இணைப்பது அல்லது சேர்ப்பது
பிணை — noun
  1. ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்

கட்டு சேர் ஜாமீன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிணை
  1. இணைக்கப்படுகை
  2. உடன்பாடு
  3. பொருத்து
  4. கட்டு
  5. உத்தரவாதம்
  6. விலங்கு