மன்றம்

குறிப்பிட்ட நோக்கத்துடன் இயங்கும் குழு, அமைப்பு, கூட்டமைப்பு ஊர்/அரண்மனை/கட்டிடத்தினில் நடுவே அமைந்துள்ள இருக்கைகளுடன் கூடிய ஓர் அவை association (as for literature); club (as for recreation, etc.); forum

association, club, forum auditorium court

Tamil Wiktionary

மன்றம் — பெயர்ச்சொல் (Noun)
  1. குறிப்பிட்ட நோக்கத்துடன் இயங்கும் குழு
  2. அமைப்பு
  3. கூட்டமைப்பு
  4. ஊர்/அரண்மனை/கட்டிடத்தினில் நடுவே அமைந்துள்ள இருக்கைகளுடன் கூடிய ஓர் அவை

சட்டமன்றம் நீதிமன்றம் ஆட்சிமன்றம் நாடாளுமன்றம் பாராளுமன்றம்

Winslow (1862)

மன்றம் (maṉṟam) — noun
  1. [also மன்றகம்.] A place of assembly, அம்பலம்
  2. An open space, a common, வெளி
  3. A long street, நெடுந்தெரு
  4. Scent, perfume, வாசனை
  5. Certainty, நிச்சயம். (சது.) மன்றங்கறங்கமணப்பறையாயின. That which has become a festive drum, beaten in an assembly. (நாலடி.)

Fabricius (1972)

மன்றம் — noun
  1. , மன்றகம், s. a place of assembly, அம்பலம்
  2. an open space, a common
  3. a long street
  4. scent, perfume
  5. certainty, நிச்சயம்

Tamil Moli Akarathi (1928)

மன்றம் (maṉṟam)
  1. சபை, நிச்சயம், நெடுந்தெரு, பலர் கூடும் வெளி, வாசனை, வெளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மன்றம் (maṉṟam) — noun
  1. perh. மன்னு-
  2. Hall, assembly; சபை. (பிங்.)
  3. Court; நியாய சபை. அறனவின் மன்றத்துள்ளோர் (திருவிளை. மாமனாக. 35)
  4. Meeting place under a tree, in a village; ஊருக்கு நடுவாயுள்ள மரத்தடிப்பொதுவிடம். மன்றமும் பொதியிலும் (திருமுரு. 226)
  5. Open place used for riding horses. See செண்டுவெளி. பேரிசை மூதூர் மன்றங் கண்டே (புறநா. 220, உரை)
  6. Plain, open space; வெளியிடம். மன்றம் போழு மணிவுடை நெடுந்தேர் (குறுந். 301). (பிங்.)
  7. Central place in a battlefield; போர்க்களப்பரப்பின் நடுவிடம். செஞ்சுடர்க்கொண்ட குருதிமன்றத்து (பதிற்றுப். 35, 8)
  8. Chidambaram; சிதம்பரம். (பிங்.)
  9. House; வீடு. வதி யுஞ் சில மன்றமே (இரகு. நகரப். 71)
  10. Cow-shed; பசுத்தொழு. புன்றலை மன்றம் (குறுந். 64)
  11. Long street; நெடுந்தெரு. (சூடா.)
  12. Truthfulness; honesty; மெய்ம்மை. (பிங்.) 12 cf. மன்ற. Certainty; நிச்சயம். (யாழ். அக.)
  13. cf. மன்றல். Scent, perfume; வாசனை. (பிங்.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மன்றம்
  1. அவை
  2. கழகம்
  3. வழக்குமன்றம்
  4. ஊருக்கு நடுவாயுள்ள மரத்தடிப் பொதுவிடம்
  5. காண்க: செண்டுவெளி
  6. வெளியிடம்
  7. போர்க்களப் பரப்பின் நடுவிடம்
  8. சிதம்பரம்
  9. வீடு
  10. பசுவின் தொழுவம்
  11. நெடுந்தெரு
  12. மெய்ம்மை
  13. உறுதி
  14. மணம்,